தலைவா BSNL யூ ஆர் கிரேட்.. ரூ.200 முதல் ரூ.400 விலைக்குள் நச்சுனு 4 ப்ரீபெய்ட் திட்டம்.. இலவச நன்மை இருக்கா?
பிஎஸ்என்எல் (BSNL) பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இந்தியாவில் மலிவு விலையில் பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில், நிறுவனம் தற்போது ரூ. 400 என்ற பட்ஜெட் விலையில் (BSNL plans under Rs 400) மக்களின் தேவைக்கேற்ற நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை (BSNL prepaid recharge plans) அறிமுகம் செய்துள்ளது. ரூ. 400 விலையில் பிஎஸ்என்எல் என்னென்ன திட்டங்களை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

தலைவா BSNL யூ ஆர் கிரேட்.. ரூ.200 முதல் ரூ.400 விலைக்குள் நச்சுனு 4 ப்ரீபெய்ட் திட்டம்:
பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 229 Prepaid plan):
இந்த திட்டம் தினசரி 2GB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 மாதம் ஆகும். இந்த திட்டம் மொத்தமாக 62GB டேட்டாவை வழங்குகிறது. இது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) உடன் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இத்துடன் கூடுதல் இலவச நன்மையாக அரினா கேம்ஸ் (Arena Games) சேவை உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இதில் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 249 Prepaid Plan):
இந்த திட்டம் 45 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. இது தினசரி 2GB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தமாக 90GB டேட்டாவை வழங்குகிறது. இது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) உடன் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 347 Prepaid Plan):
இந்த திட்டம் தினசரி 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்கள் ஆகும். இந்த திட்டம் மொத்தமாக 108GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) உடன் 100 இலவச தினசரி எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இத்துடன் கூடுதல் நன்மைகளாக Challenge Arena மொபைல் கேமிங் சேவை, ஜிங் மியூசிக், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், வாவ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இத்துடன் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 399 Prepaid Plan):
இந்த திட்டம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இது தினசரி 1GB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தமாக 70GB டேட்டாவை வழங்குகிறது. இதுவும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) உடன் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது.
மேற்குறிய அணைத்து பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களும் ரூ. 400 விலைக்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இதில் உள்ள 4 திட்டங்களும் பிஎஸ்என்எல்-ன் அணைத்து வட்டங்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டங்களுடன் வழங்கப்படும் தினசரி டேட்டா நன்மை முடிந்த பிறகு, இணைய வேகம் 40Kbps ஆக குறைக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications








