யாரு விடுவா? வெறும் ரூ.300க்குள் அள்ளிக் கொடுக்கும் BSNL.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..
ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். அதேபோல் நாட்டில் சில முக்கிய இடங்களில் 4ஜி சேவை கொண்டுவந்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்
கூடிய விரைவில் இந்நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.300-க்குள் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் (Bsnl Rs 185 prepaid plan) ஆனது தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், அரினா மொபைல் கேமிங் சேவை, BSNL ட்யூன்களுக்கான அணுகலையும் வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.
பிஎஸ்என்எல்ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் (Bsnl Rs 187 prepaid plan) தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் (Bsnl Rs 199 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது.மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 60ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ. 199 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ், ஹார்டி கேம்ஸ் (Hardy Games), சேலஞ்சர் அரினா கேம்ஸ் (Challenger Arina Games), கேமியம் (Gamium) மற்றும் லைஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podcast), வாவ் எண்டர்டெயின்மெண்ட் (Wow Entertainment) சந்தா போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 249 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை மற்றும் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது இந்த திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 299 Prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.
அதாவது பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை கிடைக்கும். மேலும் தினமும் 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்பதைக் கவனத்தில் கொள்க.


Click it and Unblock the Notifications








