Home
News

2025 புத்தாண்டு: பட்ஜெட் விலையில் அதிக சலுகைகள் வழங்கும் சிறந்த BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்!

பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இப்போது பட்ஜெட் விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 160 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 320ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

2025 புத்தாண்டு:  சிறந்த BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்!

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த ரூ997 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.

பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 54 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் 108ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்(BSNL Rs 249 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local),
எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 299 prepaid Plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

2025 புத்தாண்டு:  சிறந்த BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்!

அதாவது பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை கிடைக்கும். மேலும் தினமும் 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 239 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக ஒரு மாதம் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை இந்த
திட்டத்தில் உள்ளது. அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best BSNL Prepaid plans available for recharge in 2025 at budget prices: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X