BSNL பயனர்கள் கவனத்திற்கு: குறைந்த விலையில் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள்.!
பிஎஸ்என்எல் (BSNL )நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 4ஜி சேவை இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் அசத்தலான சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎன்என்எல் நிறுவனம்.

பிஎஸ்என்எல் நிறுவனம்
அதாவது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்திருந்தாலும், அவ்வளவு சலுகைகளைகிடைப்பதில்லை. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் அருமையான டேட்டா நன்மைகளைவழங்குகிறது.
அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது கம்மி விலையில் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப்
பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.49 ரீசார்ஜ் பிளான்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.49 ரீசார்ஜ் பிளான் ஆனது 20 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிட குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும்.
குறிப்பாக உங்கள் சிம் கார்டை செயலில் வைத்திருக்க உதவும் இந்த அட்டகாசமான பிஎஸ்என்எல் ரூ.49 ரீசார்ஜ் பிளான்.

பிஎஸ்என்எல் ரூ.87 ரீசார்ஜ் பிளான்
பிஎஸ்என்எல் ரூ.87 ரீசார்ஜ் பிளான் ஆனது 1ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் தான். குறிப்பாக இந்த திட்டம் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

பிஎஸ்என்எல் ரூ.99 ரீசார்ஜ் பிளான்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.99 திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இல்லை.
இருந்தபோதிலும் ரூ.99 ரீசார்ஜ் திட்டம் இலவச காலர் டியூன் (PRBT) நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.105 ரீசார்ஜ் பிளான்
பிஎஸ்என்எல் ரூ.105 ரீசார்ஜ் பிளான் 22 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், இலவச ஹலோ ஹலோடியூன்ஸ் போன்ற நன்மைகள் கிடைக்கும். இதை தவிர எந்த சலுகைகளும் இந்த திட்டத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.118 ரீசார்ஜ் பிளான்
பிஎஸ்என்எல் ரூ.118 ரீசார்ஜ் பிளான் ஆனது மொத்தம் 512எம்பி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 20 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் திட்டம். ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படவில்லை.
மேலும் சில வாரங்களுக்கு முன்பு பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்த ப்ரபெய்ட் திட்டங்களை விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.228 பிளான்
பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் பிளான் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 80kbps ஆக குறையும்.
இதுதவிர Arena மொபைல் கேமிங் சேவையையும் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.239 பிளான்
பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஒரு மாதம் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். பின்பு இந்த பிளானில் ரூ.10 டாக்டைம், தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது. குறிப்பாக இந்த
திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 80kbps ஆக குறையும்.
அதேபோல் இந்த திட்டமும் கேமிங் நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.107 ரீசார்ஜ் பிளான்
பிஎஸ்என்எல் ரூ.107 ரீசார்ஜ் பிளான் 50 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் 200 நிமிடங்கள் இலவசஅழைப்பு நன்மைகள் உள்ளது. இதுதவிர 3ஜிபி டேட்டா, பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் அணுகலும் வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.107 ரீசார்ஜ் பிளான்.


Click it and Unblock the Notifications