Home
News

பட்ஜெட் விலையில் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக அசத்தலான திட்டங்கள் மற்றும் அட்டகாசமான சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் அனைத்து திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் கூடிய விரைவில் அனைத்து பகுதிகளிலும் 4ஜி சேவையை கொண்டுவர உள்ளது.

அதாவது இந்த பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு 4ஜி சேவையை அறிமுகப்படுத்தும் என்றும், அடுத்த ஆண்டு 5ஜி சேவையைக் கொண்டுவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், பட்ஜெட் விலையில் ரீசார்ஜ் செய்யக் கிடைக்கும் சிறந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

பட்ஜெட் விலையில் அதிக சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

பிஎஸ்என்எல் ரூ.187 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், அழைப்பு நன்மைகள், இலவச PRBT உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

பிஎஸ்என்எல் ரூ.228 திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 40kbps ஆக குறையும். இதுதவிர Arena மொபைல் கேமிங் சேவையையும் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.239 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில்ரூ.10 டாக்டைம், தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும்.இதுதவிர கேமிங் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஒரு மாதம் வேலிடிட்டி உடன் இந்த ரூ.239 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் அதிக சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

பிஎஸ்என்எல் ரூ.269 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், BSNL Tunes, Eros Now சேவைகள், ஹார்டி மொபைல் கேம்ஸ் சேவை, அரீனா மொபைல் கேமிங் சேவை, லோக்துன், ஜிங் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் ரூ.269 திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.298 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. இதுதவிர EROS NOW பொழுதுபோக்கு சேவைக்கான இலவச அணுகலை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள்.

பிஎஸ்என்எல் ரூ.299 திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 Kbps ஆக குறைகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள். குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பிரபலமான திட்டம் ஆகும்.

பட்ஜெட் விலையில் அதிக சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

பிஎஸ்என்எல் ரூ.347 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை ஆகிய அனைத்து நன்மைகளும் உள்ளது.. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். இத்துடன் கூடுதல் நன்மைகளாக M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவையின் கூடுதல் நன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best BSNL Prepaid Plans at Budget Price: Here's the List!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X