Home
News

பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..

யார் காட்டில் மழை பொழிந்ததோ இல்லையோ BSNL பயனர்களின் காட்டில் சரியான மழை பொழிந்துள்ளது. வெறும் மாதம் ரூ.99 கட்டணத்தில் 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை BSNL அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் முழுவிபரம் பற்றி இப்போது பார்க்கலாம்.

அரசுக்கு சொந்தமான பிஎன்என்எல் (BSNL) நிறுவனம் மிகவும் குறைந்த விலையில் மக்களுக்கு தேவையான திட்டங்களை வழங்கி வருகிறது. நகர்ப்புறம் மட்டுமல்லாமல், கிராமங்கள் மற்றும் பட்டிதொட்டியில் உள்ள மக்கள் வரை எல்லோருக்கும் சமமான சேவையை BSNL நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த வகையில், இந்தியா முழுக்க பிரபலமான ஒரு திட்டத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி

கம்மி காசில் 365 நாட்களுக்கு ஓஹோனு நன்மை:

குறைந்த விலையில் அட்டகாசமான சேவையை வழங்கும் திட்டங்களுக்கு எப்போதுமே மக்களிடையே அதிக வரவேற்பு கிடைப்பதுண்டு. அப்படிப்பட்ட, திட்டத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த பிஎஸ்என்எல் திட்டம் போதுமான அளவு வாய்ஸ் கால்ஸ் (Voice calls) நன்மை, டேட்டா (Data) நன்மை மற்றும் எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளை வழங்குகிறது. மாதம் ரூ.99 கட்டணத்தில் இந்த திட்டம் ஒரு பயனருக்கு தேவையான போதுமான நன்மைகளை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ. 1198 என்ற விலை கொண்ட திட்டத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம். இந்த திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள் ஒவ்வொரு மாதமும் பயனருக்கு கிடைக்கும் படி, பிரித்து வழங்கப்படுகிறது. அதாவது, 12 மாதங்களுக்கான நன்மைகள் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் படி பிரித்து வழங்கப்படுகிறது.

இன்னும் புரியும் படி சொன்னால், இந்த திட்டத்தின் கீழ் மாதம் தோறும் 300 வாய்ஸ் கால் நிமிட நன்மைகள் பயனருக்கு வழங்கப்படும். இத்துடன் மாதம் தோறும் 3GB டேட்டா நன்மை வழங்கப்படும். அதேபோல், இந்த திட்டம் 30 எஸ்எம்எஸ் நன்மைகளை மாதம் தோறும் வழங்குகிறது. இறுதியாக, இந்த திட்டம் உங்கள் BSNL சிம்மை 365 நாட்களுக்கு ஆக்டிவேட் நிலையில் வைக்கிறது.

பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி

மாதம் ரூ.99 செலவில் வாய்ஸ் கால், டேட்டா மற்றும் SMS நன்மை:

இந்த நன்மைகள் எல்லாம் ஒவ்வொரு மாதமும் தவறாமல் கிடைக்கும். தொடர்ந்து 12 மாதங்களுக்கும் இதே நன்மை மீண்டும் மீண்டும் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் நன்மைகளில் எதுவும் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது அடுத்த மாதத்திற்கு கொண்டு செல்லப்படாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் நன்மைகள் அந்தந்த மாதத்துடன் நிறைவடைந்துவிடும் என்பதை நினைவில் கொள்க.

இந்த மாதாந்திர நன்மைகளுக்கு BSNL நிறுவனம் வெறும் ரூ.99 மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு குறைந்த விலையில் வாய்ஸ் கால் நன்மை, டேட்டா நன்மை மற்றும் SMS நன்மை ஆகியவற்றை வழங்கும் ஒரே நிறுவனமாக BSNL மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் இப்போது இந்தியாவில் உள்ள வட்டங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

ஒருவேளை இந்த திட்டத்துடன் கிடைக்கும் நன்மைகள் உங்களுக்கு போதாதாக தோன்றினால், பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1499 திட்டத்தை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். இந்த திட்டம் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையை 365 நாட்களுக்கு வழங்குகிறது. இது மொத்தமாக 24GB டேட்டா மட்டும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best BSNL Prepaid Plan with 365 Days Validity Monthly Charge Rs 99 Get Voice Call SMS and Data Benefits Under Rs 1198
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X