Home
News

1 வருடத்திற்கு நோ ரீசார்ஜ்.. 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வசதிகள்.. அசத்தும் BSNL.. இதுபோதுமே..

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை விட மலிவு விலையில் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். ஆனால் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் 4ஜி சேவையைக் கூட அறிமுகம் செய்யவில்லை.

இருந்தபோதிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டு இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளிவந்துள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அதிக நாட்கள் வேலிடிட்டி மற்றும் டேட்டா நன்மை நன்மைகளை வழங்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வசதிகள்.. அசத்தும் BSNL..

பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. எனவே ஒரு வருடம் வேலிடிட்டி விரும்பும் பயனர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40Kbps ஆக மாற்றப்படும்.

பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஈரோஸ் நவ் (EROS NOW) பொழுதுபோக்கு சேவைக்கான இலவச அணுகலை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஓடிடி நன்மை உள்ளதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 1ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 52 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40Kbps ஆக குறைகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள்.

பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 54 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அரினா மொபைல் கேமிங் சேவை உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக மாற்றப்படும்.

3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வசதிகள்.. அசத்தும் BSNL..

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஸிங் மியூசிக் (Zing Music), ஆஸ்ட்ரோடெல் (Astrotell) மற்றும் கேம்ஆன் (GameOn) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை 40கேபிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டாவையும் வழங்கும் இந்த திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக BSNL ட்யூன்ஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீஸ்இ ஹார்டி மொபைல் கேம் சேவை, லோக்துன் மற்றும் ஜிங் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. பின்பு 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best BSNL Prepaid Plan with 12 Months Validity, 3GB Data: check full details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X