Home
News

அம்பானி ஜி.. BSNL-ஐ பார்த்து கத்துக்கோங்க.. வெறும் ரூ.190 குள்ள இவ்ளோ நன்மைகளா..? என்ன ரீசார்ஜ்..?

வெறும் ரூ.190 க்குள் அதிக அளவிலான நன்மைகளை வழங்குவது எப்படி என்பதை.. ஜியோ (Jio) உட்பட மற்ற எல்லா தனியார் டெலிகாம் நிறுவனங்களுமே பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தை பார்த்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு இந்த ரூ.190 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த 3 திட்டங்களே சாட்சி!

அவைகள் பிஎஸ்என்எல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் (Bharat Sanchar Nigam Limited) கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்: பிஎஸ்என்எல் பிவி 107 (BSNL PV 107), பிஎஸ்என்எல் எஸ்டிவி 147 (BSNL STV 147) மற்றும் பிஎஸ்என்எல் எஸ்டிவி 185 (BSNL STV 185) ஆகும்.

BSNL: வெறும் ரூ.190 குள்ள இவ்ளோ நன்மைகளா..? என்ன ரீசார்ஜ்..?

மலிவு விலையில் மிகவும் கவர்ச்சிகரமான நன்மைகளை வழங்குவதோடு சேர்த்து, சந்தாதாரர்களின் பல்வேறு தகவல் தொடர்பு தேவைகளையும் பூர்த்தி செய்யும் இந்த மூன்று பிஸ்என்எல் பிவி (PV) மற்றும் எஸ்டிவிகளின் (STV) வேலிடிட்டி என்ன? இவைகளின் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

பிஎஸ்என்எல் பிவி 107 (BSNL PV 107) திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகள்: இது 35 நாட்கள் என்கிற வேலிடிட்டி (35 Days Validity) உடனே வருகிறது. நண்மைகளை பொறுத்தவரை, இதன் கீழ் 3ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் எம்டிஎன்எல் நெட்வொர்க் உட்பட உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் (Local, STD and Roaming) அழைப்புகளை உள்ளடக்கிய எந்த நெட்வொர்க்கிற்கும் 200 நிமிட இலவச வாய்ஸ் கால்களும் கிடைக்கும்.

டேட்டா மற்றும் வாய்ஸ் கால் நன்மைகளை தவிர்த்து, பிஎஸ்என்எல் பிவி 107 திட்டத்தின் கீழ், இந்த திட்டம் செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும், அதாவது 35 நாட்களுக்கும் பிஎஸ்என்எல் ட்யூன் (BSNL Tune) நன்மை அணுக கிடைக்கும். இதன் கீழ் பிஎஸ்என்எல் பயனர்கள் தங்களுக்கு பிடித்த ட்யூன்களை பெர்சனலைஸ்டு காலர் ட்யூன் (Personalized caller tune) ஆக செட் செய்துகொள்ள முடியும்.

பிஎஸ்என்எல் எஸ்டிவி 147 (BSNL STV 147) திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகள்: இது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டி (30 Days Validity) உடன் வருகிறது. இந்த திட்டம், புது டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எம்டிஎன்எல் நெட்வொர்க் ரோமிங் பகுதிகள் உட்பட எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்குகிறது.

டேட்டா நன்மையை பொறுத்தவரை, இது 10ஜிபி மொத்த டேட்டாவுடன் (10GB Total Data) வருகிறது. இந்த திட்டத்திலும் கூட ரூ.107-ஐ போலவே, இது செல்லுபடியாகும் 30 நாட்களுக்கும் பிஎஸ்என்எல் ட்யூன் நன்மை அணுக கிடைக்கும். மேலும் இந்த திட்டத்திலும் கூட இலவச எஸ்எம்எஸ் (Free SMS) நன்மைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. எஸ்எம்எஸ் தேவைகள் உள்ளவர்கள் கூடுதல் ரீசார்ஜை செய்ய வேண்டி இருக்கும்.

பிஎஸ்என்எல் எஸ்டிவி 185 (BSNL STV 185): இது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி (28 Days Validity) உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை, மேலே கண்ட 2 திட்டங்களை போலவே இதுவும் எம்டிஎன்எல் (MTNL) நெட்வொர்க்குகள் உட்பட, எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற வாய்ஸ் கால்களை வழங்குகிறது.

டேட்டா நன்மையை பொறுத்தவரை, இது ஒரு நாளைக்கு 1ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. ஒருவேளை நீங்கள் டெய்லி லிமிட்டை (Daily Limit) தாண்டி விட்டால், அதாவது 1ஜிபி டேட்டாவை தீர்ந்துவிட்டால் உங்களுடனுய இன்டர்நெட் ஸ்பீட் ஆனது 40கேபிபிஎஸ் (40Kbps) ஆக குறைக்கப்படும்.

சுவாரஸ்யமாக இந்த திட்டத்தில் இலவச எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கிறது. இதன் கீழ் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் அணுக கிடைக்கும். மேலும் ரூ.185 திட்டமானது ஆன்மொபைல் குளோபல் லிமிடெட்டின் (Onmobile Global Limited) அரினா மொபைல் கேமிங் சேவையுடன் (Arena Mobile Gaming Service) வருகிறது. கடைசியாக இது பிஎஸ்என்எல் ட்யூன் நன்மையையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best BSNL Plan Under Rs 200 to Recharge in August 2023 Rs 107 Rs 147 and Rs 185 Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X