வெறும் ரூ.499 விலை.. 3300GB ஹை-ஸ்பீட் டேட்டா.. உடனே ரீசார்ஜ் செய்யுங்க.. மொத்த குடும்பமும் ஹேப்பி அண்ணாச்சி..
வெறும் ரூ.499 விலைக்குள் 3.3TB டேட்டாவை வழங்கும் பிஎஸ்என்எல் (BSNL), ஏர்டெல் (Airtel), ஆக்ட் (Act) மற்றும் அலையன்ஸ் (Alliance) போன்ற சிறந்த கம்மி விலை பிராட்பேண்ட் திட்டங்களை (Best low cost broadband plans) பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.
மிகவும் மலிவு விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் தரமான பிராட்பேண்ட் திட்டங்களை (low price broadband plans) பற்றி பேசுவதற்கு முன், ஏன் பிராட்பேண்ட் திட்டங்களை மக்கள் இப்போது அதிகமாக தேர்வு செய்கிறார்கள் என்பதை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். வீட்டுக்கு வீடு ஸ்மார்ட்போன் (smartphone), ஸ்மார்ட் டிவி (Smart TV), லேப்டாப் (Laptop), ஓடிடி (OTT) சேவைகள் என்று பெருகிவிட்டது.

ஏன் பிராட்பேண்ட் திட்டங்கள் உங்கள் குடும்பத்திற்கு சிறந்தது? (Why Broadband Plans Are Best for Your Family):
அமேசான் பிரைம் வீடியோஸ் (Amazon Prime Videos), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), நெட்ஃப்ளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), இன்ஸ்டாகிராம் (Instagram), ஃபேஸ்புக் (Facebook) என்று எல்லா பயனருக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் (prepaid plans) கிடைக்கும் தினசரி டேட்டா (daily data plans) போதாமல் ஆகிவிட்டது. முன்பை விட இப்போது எல்லோருக்கும் அதிகமாக டேட்டா தேவைப்படுகிறது.
இந்த தேவையை பூர்த்தி செய்ய பிராட்பேண்ட் திட்டங்களால் மட்டுமே முடியும். அதுமட்டுமின்றி, உங்கள் மொத்த குடும்பத்திற்கும் தேவையான அன்லிமிடெட் டேட்டாவை (unlimited data) குறைந்த விலையுடன் வாங்க வேண்டுமென்றால், கட்டாயம் நீங்கள் ப்ரோடிபேண்ட் திட்டங்களை தேர்வு செய்வது தான் சிறப்பானது. சரி, இப்போது எந்த டெலிகாம் நிறுவனங்கள் (Telecom operators) என்ன விலையில், 3.3TB டேட்டாவை வழங்குகிறது என்று பார்க்கலாம்.
1. பிஎஸ்என்எல் ரூ.499 பிராட்பேண்ட் திட்டம் (BSNL Rs 499 Broadband Plan):
BSNL நிறுவனம் இந்த பிராட்பேண்ட் திட்டத்தை வெறும் ரூ.499 விலையில் வழங்குகிறது. இதில் 3.3TB டேட்டாவை 40 Mbps வேகத்தில் வழங்குகிறது. இந்த திட்டத்துடன் நிறுவனம் இலவச லேண்ட் லைன் (free landline connection) இணைப்புடன் வாய்ஸ் கால் வழங்குகிறது. ஆனால், அதற்கான சாதனத்தை நீங்கள் வாங்க வேண்டும். உங்கள் மாதாந்திர 3.3TB டேட்டா நிறைவடைந்த பின் FUP கட்டுப்பாட்டின் கீழ் இணைய வேகம் 4 Mbps ஆக குறைக்கப்படும்.
2. பாரதி ஏர்டெல் ரூ.499 பிராட்பேண்ட் திட்டம் (Bharti Airtel Rs 499 Broadband Plan):
இந்தியாவின் 2வது முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் அதன் பயனர்களுக்கு ரூ.499 விலையில் மாதம் 3.3TB ஹை-ஸ்பீட் டேட்டாவை 40 Mbps வேகத்தில் வழங்குகிறது. இதிலும் இலவச லேண்ட்லைன் இணைப்பு உடன் இலவச வாய்ஸ் கால்ஸ் நன்மை வழங்கப்படுகிறது. அதற்கான சாதனத்தை நீங்கள் வாங்க வேண்டும். இத்துடன் 2 கூடுதல் இலவச நன்மையாக அப்பல்லோ 24|7 சர்க்கிள் சந்தா (Apollo 24|7 Circle) மற்றும் விங்க் மியூசிக் நன்மை கிடைக்கிறது.

3. அலையன்ஸ் ரூ.425 பிராட்பேண்ட் திட்டம் (Alliance Rs 425 Broadband Plan):
கொல்கத்தா மற்றும் சில குறிப்பிட்ட நகரங்களில் கிடைக்கும் அலையன்ஸ் பயனர்களுக்கு ரூ.425 விலையில் ஹை-ஸ்பீட் டேட்டா (high speed data) கிடைக்கிறது. இது உங்களுக்கு 3.3TB என்ற வரம்பு இல்லாமல் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறதென்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் ஹங்கமா பிளே (Hungama Play) மற்றும் லைன் டிவி (Line TV) நன்மையையும் கிடைக்கிறது.
4. ஆக்ட் ரஸ் 549 பிராட்பேண்ட் திட்டம் (Act Rs 549 Broadband Plan):
இந்த திட்டம் ரூ.549 விலையில் 500ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் டேட்டா வேகமும் மற்ற டெலிகாம் நிறுவனங்களை போல அதே 40 Mbps வேகத்தில் (40 Mbps data speed plans) கிடைக்கிறது. இத்துடன் எந்தவித இலவச இணைப்பும் மற்றும் நன்மைகளும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் பெங்களூரில் உள்ள பயனர்களுக்கு கிடைக்கும் அடிப்படை திட்டமாக திகழ்கிறது.
மாதம் ரூ.499 செலவில் உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் தேவையான அன்லிமிடெட் ஹை-ஸ்பீட் டேட்டாவை வாங்க நினைத்தால், உடனே இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்து மகிழுங்கள். திரைப்படம், சீரிஸ், யூடியூப் வீடியோக்களை பஃப்பர் (buffer) செய்ய 40 Mbps வேகம் தாராளமாக போதுமானது என்பதனால் தயக்கம்கொள்ள தேவையில்லை.


Click it and Unblock the Notifications








