Home
News

அடிச்சு தூக்குது BSNL.. மலிவு விலை.. 50 நாட்களுக்கு கவலை இருக்காது.. தினசரி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நாட்டில் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. அதேபோல் இன்னும் சில மாதங்களில் இந்நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாகத் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் இப்போது கம்மி பட்ஜெட்டில் அசத்தலான திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

எனவே தான் பல்வேறு மக்கள் பிஎஸ்என்எல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி பட்ஜெட்டில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

அடிச்சு தூக்குது BSNL.. 50 நாட்களுக்கு கவலை இருக்காது..

பிஎஸ்என்எல் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 225 prepaid plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். ஆகவே இந்த பிஎஸ்என்எல் ரூ.225 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 75ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.225 ப்ரீபெய்ட் திட்டம். இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும்.

பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 228 Prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 62ஜிபி வரை டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதுவும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த பிஎஸ்என்எல் ரூ.228 திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் சலுகைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 299 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். ஆகவே இந்த பிஎஸ்என்எல் ரூ.299 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

அதுவும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும்.

அடிச்சு தூக்குது BSNL.. 50 நாட்களுக்கு கவலை இருக்காது..

பிஎஸ்என்எல் ரூ 347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 Prepaid plan) 50 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ரூ 347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 100ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் உள்ளன. அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம்.

Best Mobiles in India

English summary
Best BSNL 4G recharge plans under Rs 350: Check full benefits here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X