Home
News

இனி 2024 முழுக்க இந்த பிளான் தான்! Airtel கொட்டத்தை அடக்கிய Jio.. ரூ.100 கம்மி.. அதே நன்மைகள்.. என்ன ரீசார்ஜ்?

டெலிகாம் துறையில் ரூ.1 வித்தியாசம் கூட பெரிய வேறுபாடுகளை உண்டாக்கும். ஆகையால் தான் பெரும்பாலான ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்களின் விலைகள் ஒரே மாதிரியாக இருக்கும். நிலைமை இப்படி இருக்கும் போது ரூ.100 வித்தியாசத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குமொரு திட்டத்தை.. சும்மா விட முடியுமா?

இந்த 2024 ஆம் ஆண்டு முழுக்க.. ரூ.500 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் பெஸ்ட் போஸ்ட்பெய்ட் பிளானை தேடும் எவருமே இந்த திட்டத்தை தான் தேர்வு செய்வார்கள். அதென்ன திட்டம்? அதன் விலை நிர்ணயம் என்ன? மறுகையில் உள்ள ஏர்டெல் திட்டத்தின் விலை என்ன? அது என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இதே விலையில் கிடைக்கும் வேறு நிறுவனங்களின் திட்டங்கள் என்னென்ன? இதோ விவரங்கள்?

இனி 2024 முழுக்க இந்த பிளான் தான்.. Airtel கொட்டத்தை அடக்கிய Jio!

ரூ.100 வித்தியாசத்தில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் திட்டம் - ஜியோஃபைபர் ரூ.399 திட்டம் தான். இதுதான் ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேண்ட் சேவையின்கீழ் உள்ள மிகவும் மலிவு விலை திட்டமாகும். இந்த திட்டம் 30 எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் 3.3டிபி அல்லது 3300 ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டாவை வழங்குகிறது மற்றும் இலவச பிக்ஸடு-லைன் வாய்ஸ் காலிங் கனெக்ஷனுடன் வருகிறது.

இதற்கு போட்டியாக வரும் ஏர்டெல் நிறுவனத்தின் திட்டம் - ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் ரூ.499 திட்டமாகும். இது அதே 3.3டிபி டேட்டா, இலவச இலவச பிக்ஸடு-லைன் வாய்ஸ் காலிங் கனெக்ஷனை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 40எம்பிபிஎஸ் ஆகும். கூடுதலாக இது அப்பல்லோ 24|7 சர்க்கிள் மற்றும் விங்க் மியூசிக் சந்தா போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.

இனி 2024 முழுக்க இந்த பிளான் தான்.. Airtel கொட்டத்தை அடக்கிய Jio!

பிஎஸ்என்எல் பார்த் ஃபைபர் ரூ.399 திட்டம் - அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் ஆப்ரேட்டரின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டம் ரூ.399 ஆகும். இது 30எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் 1டிபி அல்லது 1000ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் இலவச பிக்ஸடு-லைன் வாய்ஸ் காலிங் கனெக்ஷனும் கிடைக்கும்.

கனெக்ட் பிராட்பேண்ட்டின் (Connect Broadband) ரூ.499 திட்டம்: கனெக்ட் பிராட்பேண்டின் ரூ.499 திட்டமானது 50 எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் 3.3டிபி அல்லது 3300ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டாவுடன் வருகிறது. இதன்கீழ் இலவச பிக்ஸடு-லைன் வாய்ஸ் காலிங் கனெக்ஷனும் கிடைக்கும். மேற்கண்ட திட்டங்களின் இறுதி பில் விலைகளானது ஜிஎஸ்டி உடன் சேர்க்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

அலையன்ஸ் பிராட்பேண்ட்டின் (Alliance Broadband) ரூ.425 திட்டம்: கொல்கத்தாவை அடிப்படையாக கொண்ட அலையன்ஸ் பிராட்பேண்ட்டின் கீழ் கிடைக்கும் ரூ.425 திட்டமானது அன்லிமிடெட் டேட்டாவை 40 எம்பிபிஎஸ் ஸ்பீடின் கீழ் வழங்குகிறது. கூடவே ஹங்காமா ப்ளே மற்றும் லைவ் டிவிக்கான இலவச சந்தாக்களையும் கொண்டுள்ளது. இதன்கீழ் பிக்ஸடு-லைன் வாய்ஸ் காலிங் கனெக்ஷன் எதுவும் இருக்காது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Broadband Plans under Rs 500 in India in 2024 Jio 399 Vs Airtel 499 VS BSNL 399
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X