Home
News

ஒரே ஒரு முறை தான்.. 365 நாள் வேலிடிட்டி, தினமும் 2.5GB டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள் தரும் 3 Airtel திட்டங்கள்

ஜியோ, வோடபோன் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக ஒரு மாதம், மூன்று மாதம் வேலிடிட்டி தரும் திட்டங்களை விட தற்போது ஒரு வருடம் வேலிடிட்டி தரும் திட்டங்களில் தான் பயனர்கள் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அதுவும் ஒரு வருடம் வேலிடிட்டி வழங்கும் மூன்று ப்ரீபெய்ட் திடங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். அதாவது ரூ.1999, ரூ.3599, ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டங்கள் தான் ஒரு வருடம் வேலிடிட்டி வழங்குகிறது. இப்போது இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒரே ஒரு முறை தான்.. அன்லிமிடெட் சலுகைகள் தரும் 3 Airtel திட்டங்கள்..

ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இதைத் தேர்வு செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

குறிப்பாக ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (disney + Hotstar) சந்தாவை வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் உள்ளது.

அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), விங்க் மியூசிக் (Wynk Music), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data) போன்ற நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 3599 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே இந்த ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைந்துவிடும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் கிடைக்கும். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் , அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), விங்க் மியூசிக் (Wynk Music), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5g data) போன்ற சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆனால் ஓடிடி நன்மைகள் இதில் இல்லை.

ஒரே ஒரு முறை தான்.. அன்லிமிடெட் சலுகைகள் தரும் 3 Airtel திட்டங்கள்..

ஏர்டெல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 1999 prepaid plan) மொத்தமாக 24ஜிபி டேட்டா வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கிறது. வாய்ஸ் கால் நன்மையை மட்டும் எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.

அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), விங்க் மியூசிக் (Wynk Music) போன்ற சலுகைகள் இந்த ஏர்டெல் ரூ.1999 திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டமும் ஓடிடி நன்மையை வழங்கவில்லை.

photo credit: ndtvprofit.com, media.assettype.com, bloombergquint

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Airtel Prepaid Plans with Unlimited Offers and 365 Days Validity: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X