ரேட் ஜாஸ்தி இல்லை ஆனா டெய்லி 1ஜிபி or 1.5ஜிபி டேட்டா உறுதி! Airtel-ன் பெஸ்ட் ரீசார்ஜ் இதான்!
இந்த டிஜிட்டல் மயமான காலத்தில், வாய்ஸ் கால் எவ்வளவு முக்கியமோ இல்லையோ தெரியவில்லை. ஆனால், டேட்டா இல்லாமல் யாராலும் ஒரு நாளை கூட நகர்த்த முடியாது. குறைந்த விலையில் தினசரி டேட்டா கிடைக்கும் திட்டங்களை பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம்.
டேட்டாவின் தேவை இப்போது எல்லோருக்கும் முக்கியமாகிவிட்டது. வாட்ஸ்அப் முதல் துவங்கி, ஆன்லைன் பேங்கிங், பொழுதுபோக்கு, யூடியூப், கேமிங் என்று இப்போது எல்லாவற்றிற்கும் டேட்டாவின் தேவை மிகவும் முக்கியமாகிவிட்டது. அடிப்படை திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்கள் கூட, இப்போது டேட்டாவின் அளவை பார்த்த பிறகு தான் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை தேர்வு செய்கிறார்கள்.

அந்த வகையில், ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் மிகவும் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டத்தில், எந்த திட்டம் தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் 1.5ஜிபி டேட்டாவை தினமும் தடையின்று 1 மாத காலத்திற்கு வழங்குகிறது என்ற விபரத்தை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இங்கு நாம் 2 மலிவு விலை ஏர்டெல் திட்டங்களை பார்க்க போகிறோம். இத்துடன் இதே நன்மைகளை வழங்கும் மற்ற திட்டங்களையும் பார்க்க போகிறோம்.
இதில் 1 திட்டம் உங்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மற்றொரு திட்டமானது அதன் பயனர்களுக்கு 1.5ஜிபி டேட்டாவை எந்த வித தடையுமின்றி, 1 மாத காலத்திற்கு வழங்குகிறது. இந்த திட்டங்களின் விலை என்ன? இந்த திட்டத்துடன் உங்களுக்கு வேறு என்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கிறது என்று தெளிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் நேரடியாக ரீசார்ஜ் திட்டங்களின் விபரங்களை பார்க்கலாம்.
ஏர்டெல் அதன் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை வழங்கும் மூன்று வெவ்வேறு திட்டங்களை வழங்குகிறது. முதல் திட்டம் ரூ.209 விலையில் வருகிறது. இது 21 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இரண்டாவது திட்டமானது ரூ.239 விலையில் 24 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. பட்டியலில் உள்ள கடைசி திட்டம் ரூ.265 விலையில் வருகிறது. இது 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது.

இந்த மூன்று திட்டங்களும் அதன் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 SMS போன்ற நன்மைகளை வழங்குகிறது. அடுத்தபடியாக, ஏர்டெல் அதன் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்கும் ஐந்து வெவ்வேறு திட்டங்களை வழங்குகிறது. முதல் திட்டம் ரூ 299 விலையில் 28 நாட்கள் செல்லுபடியுடன் வருகிறது. இரண்டாவது திட்டமானது ரூ.479 விலையில் வருகிறது. இது 56 நாட்கள் வேலிடிட்டியை தருகிறது.
பட்டியலில் உள்ள மூன்றாவது திட்டத்தின் விலை ரூ.666 ஆகும். இது 77 நாட்கள் செல்லுபடி உடன் வருகிறது. இதைவிட உயர்த்த வேலிடிட்டி உடன் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்கும் திட்டமாக ரூ.719 திட்டம் திகழ்கிறது. பட்டியலில் உள்ள கடைசி திட்டம் ரூ.779 விலைக்கு 90 நாள் வேலிடிட்டியை வழங்குகிறது. இவை அணைத்தும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.
இந்த பட்டியலில் உள்ள ரூ.209 திட்டத்தைத் தவிர, மற்ற திட்டங்கள் அனைத்தும் ஏர்டெல் வழங்கும் அன்லிமிடெட் இலவச 5ஜி டேட்டா சலுகையுடன் வருகின்றனது என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் வரம்பற்ற ட்ரூலி 5ஜி டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications