Home
News

விட்றாதீங்க...தினமும் 2ஜிபி டேட்டா.. OTT.. அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் 3 அற்புதமான Airtel திட்டங்கள்..

airtel best plans under rs 1000: ஜியோ (Jio), வோடபோன் (VI) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் எக்கச்சக்க சலுகைகளை வழங்கி வருகிறது ஏர்டெல் (Airtel) நிறுவனம். அதேபோல் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் ஓடிடி நன்மைகள் உள்ளிட்ட பல அசத்தலான சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் 3 அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது இந்நிறுவனம். அந்த திட்டங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டத்தில் (airtel rs 379 prepaid plan) ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே இந்த திட்டம் மொத்தம் 62ஜிபி வரை டேட்டா வழங்கும். மேலும் இந்த ஏர்டெல் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். குறிப்பாக இதில் திட்டத்தில் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை.

அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் 3 அற்புதமான Airtel திட்டங்கள்.!

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக் (Wynk Music), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 649 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். இந்த திட்டத்திலும் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), விங்க் மியூசிக் (Wynk Music), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) போன்ற நன்மைகள் இதில் உள்ளன.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் உங்களுக்கு மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் 3 அற்புதமான Airtel திட்டங்கள்.!

அதுவும் இந்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே ஆனது 22 ஓடிடி ஆப்களின் அணுகலை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls)சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), விங்க் மியூசிக் (Wynk Music), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.

குறிப்பாக இந்த மூன்று திட்டங்களும் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். அதேபோல் ஏர்டெல் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Airtel Prepaid Plans Under Rs.1000 With More Benefits: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X