Home
News

ஏர்டெல் சிம் இருக்கா.. பட்ஜெட் விலையில் தினமும் 3ஜிபி டேட்டா.. 84 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்..

ஏர்டெல் (airtel) நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஓடிடி சந்தா தரும் திட்டங்களை அதிகளவில் அறிமுகம் செய்து வருகிறது ஏர்டெல். எனவே தான் ஏர்டெல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வரும். அதாவது ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் தினமும் 3ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் சிம் இருக்கா.. பட்ஜெட் விலையில் தினமும் 3ஜிபி டேட்டா..

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 838 prepaid Plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். குறிப்பாக நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா (Amazon Prime Lite Subscription) கிடைக்கும். இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் சோனிலிவ் (SonyLIV), லயன்ஸ்கேட் பிளே (Liongates Play), ஈராஸ் நவ் (Eros Now) சன்நெக்ஸ்ட் (SunNXT), சாவ்பால் (Chaupal), ஆஹா (Aha), ஹோய்சோய் (Hoichoi), சோஷியல் ஸ்வாக் (Social Swag) போன்ற 18க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாவை பெறமுடியும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1798 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

ஏர்டெல் சிம் இருக்கா.. பட்ஜெட் விலையில் தினமும் 3ஜிபி டேட்டா..

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்.

தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் ரூ.838 அல்லது ரூ.1798 ப்ரீபெய்ட திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது. விரைவில் இந்நிறுவனம் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Best Airtel prepaid plans that offer 3GB data daily: check list here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X