Airtel பயனர்கள் மிஸ் பண்ணக்கூடாத 3 OTT பிளான்கள்.. தினமும் 3ஜிபி டேட்டா, 84 நாள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!
ஜியோ (jio), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் (Airtel) நிறுவனம். அதுவும் ஏர்டெல் நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக டேட்டா நன்மையுடன் ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் ஓடிடி நன்மைகள் தரும் சில பரீபெய்ட் திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது. இந்த பதிவில் அந்த திட்டங்களைக் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1798 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஆகவே ஏர்டெல்லின் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் ஓடிடி நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். அதாவது இந்த திட்டத்தில் பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா வழங்கப்படுகிறது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் திட்டத்தில் கிடைக்கிறது.
அதாவது ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் அதிக டேட்டாவுடன் ஓடிடி நன்மைகள் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1729 prepaid plan) ஆனது தினமும்2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக அதிக ஓடிடி நன்மைகளை வேண்டும் என்றால் இந்த ஏர்டெல் திட்டத்தை தேர்வு செய்வது தான் நல்லது.
அதன்படி பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் உள்ளிட்ட ஓடிடி சந்தா வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம். ஆகவே ஓடிடி தளங்களில் வெளியாகும் புதிய படங்களை பார்க்க வேண்டும் என்றால் இந்த ஏர்டெல் திட்டம் தான் மிகவும் சிறந்தது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data)போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1199 prepaid plan) ஆனது மொத்தம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். ஆகவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளது. மேலும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), rewards mini subscription, ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications