ரூ.500க்கு கீழ் அள்ளி கொடுக்கும் Airtel திட்டங்கள்.. தினமும் 3GB டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. யாரு விடுவா?
ஏர்டெல் நிறுவனம் கடந்த சில மாதங்களில் பட்ஜெட் விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் ஓடிடி சந்தாவுடன் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.500க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் பிளான் (Airtel rs 449 prepaid Plan) தினமும் 3ஜிபி டேட்டா வழங்கும். குறிப்பாக
28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த திட்டம்.

அதேபோல் ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது. குறிப்பாக இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) போன்ற 22 ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும்.
மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் பிளான் (Airtel Rs 399 prepaid plan) தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. எனவே இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 70ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் 28 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (Jio Hotstar Mobile subscription), தினமும் 100 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பெறமுடியும்.
ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் பிளான் (airtel rs 398 Prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
28 நாட்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா வழங்குகிறது ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கும். பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் பிளான் (airtel rs 379 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 62ஜிபி வரை டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டம் மூலம் பெறமுடியும்.


Click it and Unblock the Notifications








