Home
News

பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஏர்டெல் திட்டங்கள்.. தினமும் 4GB டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..

ஜியோ (jio), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களுக்குப் போட்டியாக இப்போதும் பட்ஜெட் விலையில் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது ஏர்டெல் (airtel) நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் அதிக டேட்டா மற்றும் அதிக சலுகைகள் தரும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

பட்ஜெட் விலையில்  கிடைக்கும் ஏர்டெல் திட்டங்கள்.. தினமும் 4GB டேட்டா..

ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 449 prepaid Plan) தினமும் 4ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும்.இந்த திட்டத்தில் தினசரி 4ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டம் அதிகமான ஓடிடி நன்மைகளை வழங்குகிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே போன்ற 22 ஓடிடி சந்தா கிடைக்கிறது. அதேபோல் 28 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 649 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதுவும் ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டம் மூலம் பெறமுடியும்.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட்திட்டம் (Airtel Rs 838 prepaid Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலையில்  கிடைக்கும் ஏர்டெல் திட்டங்கள்.. தினமும் 4GB டேட்டா..

அதேபோல் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தா வழங்கும் ரூ.838 திட்டம். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் 22 ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.838 திட்டத்தில் வழங்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இதில் வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Airtel prepaid plans available at budget prices: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X