ரூ.150 முதல் ரூ.300-க்குள் கிடைக்கும் பெஸ்ட் Airtel, Jio, Vi திட்டங்கள்.! பாக்கெட் பணம் மிச்சம்.!
நீங்கள் Airtel, Jio, Vi என்று எந்த டெலிகாம் ஆப்ரேட்டரின் நெட்வொர்க்கை பயன்படுத்தினாலும் சரி, பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய விரும்புகிறீர்களா? அதிலும் குறிப்பாக உங்களுடைய பட்ஜெட் ரூ.150 முதல் ரூ.300 விலை வரம்பிற்குள் இருக்கிறது என்றால், இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள சிறந்த Airtel, Jio, Vi ரீசார்ஜ் திட்டங்களைப் பார்வையிடுங்கள். உண்மையிலேயே, இவை உங்கள் பாக்கெட் பணத்தை சேமிக்க உதவும் திட்டங்களாகும்.

ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள் ரூ.300 விலைக்குள்
Airtel ரூ 239 திட்டம்: இந்த ரீசார்ஜ் திட்டம் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் 24 நாட்கள் செல்லுபடியாகும். இதன் தினசரி டேட்டா 1ஜிபி ஆகும். இத்துடன், இலவச ஹெலோட்யூன்களின் கூடுதல் நன்மைகள் மற்றும் விங்க் மியூசிக் அணுகலை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ 265 திட்டம்
ஏர்டெல் ரூ 265 திட்டம்: இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இது தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்பு, தினமும் 100 SMS மற்றும் Hellotunes மற்றும் Wynk Music சந்தாவுக்கான இலவச அணுகல் ஆகியவை கிடைக்கிறது.

ஏர்டெள் ரூ 299 திட்டம்
ஏர்டெள் ரூ 299 திட்டம்: அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 1.5 ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் 28 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. இத்துடன் Xstream Mobile Pack, Apollo 24|7 Circle, FASTag, Hellotunes மற்றும் Wynk Music, ஆகியவற்றை வழங்குகிறது.

ரூ.300 விலைக்குள் கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்
Jio ரூ. 149 திட்டம்: இது அன்லிமிடெட் அழைப்பு, தினமும் 100 SMS, தினமும் 1ஜிபி டேட்டா ஆகியவற்றை 20 நாட்களுக்கு வழங்குகிறது. கூடுதல் நன்மைகளில் JioTV, Jio சினிமா மற்றும் பிற போன்ற Jio ஆப்ஸிற்கான இலவச சந்தாக்கள் அடங்கும்.
Jio ரூ. 179 திட்டம்: இந்த ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 24 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் பிற ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலும் கிடைக்கிறது.

Jio ரூ. 199 மற்றும் ரூ. 209 திட்டம்
Jio ரூ. 199 திட்டம்: இது தினசரி 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மை, தினமும் 100 SMS மற்றும் கூடுதல் நன்மைகளாக ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் ஆகியவற்றை வழங்குகிறது.
Jio ரூ. 209 திட்டம்:இது தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது, மேலும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ரீசார்ஜ் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா - ஜியோடிவி, ஜியோ சினிமா மற்றும் பிற நன்மைகளை வழங்குகிறது.

ஜியோ ரூ. 239 மற்றும் ரூ. 249 திட்டம்
ஜியோ ரூ. 239 திட்டம்: இதில் உங்களுக்கு தினமும் 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை 28 நாள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. வழக்கம் போல கூடுதல் நன்மைகளாக ஜியோடிவி, ஜியோ சினிமா போன்ற நன்மைகளை ஜியோ இத்துடன் உள்ளடக்கியுள்ளது.
JIo ரூ. 249 திட்டம்: இந்த திட்டம் 23 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன், தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இத்துடன் எக்ஸ்ட்ரா நன்மைகளும் கிடைக்கிறது.

Jio ரூ. 259 மற்றும் ரூ. 299 திட்டம்
Jio ரூ. 259 திட்டம்: இந்த திட்டம் 30 நாள் என்ற காலண்டர் மாத செல்லுபடி உடன் வருகிறது. இதில் தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 SMS போன்றவற்றை ஜியோ வழங்குகிறது. இத்துடன் ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சந்தாவும் கிடைக்கிறது.
Jio ரூ. 299 திட்டம்: இது 28 நாள் வேலிடிட்டியுடன், தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் வழக்கம் போல ஜியோ ஆப்ஸ் இன் கூடுதல் இலவச நன்மைகளை வழங்குகிறது.

ரூ.300 விலைக்குள் கிடைக்கும் Vi ப்ரீபெய்ட் திட்டங்கள்
Vi ரூ. 199 திட்டம்: இந்த திட்டம் அன்லிமிடெட் அழைப்பு, 100 எஸ்எம்எஸ், தினசரி 1ஜிபி டேட்டாவுடன் 18 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இத்துடன் கூடுதல் நன்மைகளாக Vi மூவிஸ் மற்றும் டிவியின் எக்ஸ்ட்ராப் பலன்களும் கிடைக்கிறது.

Vi ரூ. 219 திட்டம்
Vi ரூ. 219 திட்டம்: வோடபோன் ஐடியாவின் இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 SMS மற்றும் தினமும் 1ஜிபி டேட்டா என்று மொத்தம் 21 நாட்கள் வேலிடிட்டி உடன் இத்திட்டம் வருகிறது. இத்துடன், மேலே கூறப்பட்ட கூடுதல் நன்மைகளும் அப்படியே கிடைக்கிறது.

Vi ரூ. 249 திட்டம்
Vi ரூ. 249 திட்டம்: இந்த ப்ரீபெய்ட் திட்டமானது வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 1.5ஜிபி தினசரி டேட்டாவை 21 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. கூடுதல் நன்மைகளாக Vi மூவிஸ் மற்றும் டிவியின் எக்ஸ்ட்ராப் பலன்களும் கிடைக்கிறது. இந்த ரீசார்ஜ் திட்டங்கள் அனைத்தும் ரூ.300 விலைக்குள் கிடைப்பதனால், உங்கள் பாக்கெட் பணம் அதிகம் செலவாகாது.


Click it and Unblock the Notifications