Airtel, Jio, Vi இல் ரூ.200க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.. பட்ஜெட் பிரண்ட்லி பாஸ்..

|

தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை தங்கள் சந்தாதாரர்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும், பல சுவாரஸ்யமான ப்ரீபெய்ட் திட்டங்களின் கலவையைக் கொண்டுள்ளன. இந்த நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 200க்கு குறைவான விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை, டேட்டா, செல்லுபடியாகும் தன்மை மற்றும் கூடுதல் பலன்கள் போன்ற நன்மைகளுடன் வழங்குகிறது. இந்த திட்டங்கள் அடிப்படையில் 'அதிகம்' எதிர்பார்க்காத பயனர்களை இலக்காகக் கொண்டுள்ளது.

அதிகம் எதிர்பார்க்காத பயனர்கள் என்றால் யார்?

அதிகம் எதிர்பார்க்காத பயனர்கள் என்றால் யார்?

அதிகம் எதிர்பார்க்காத பயனர்கள் என்று நாம் இங்குக் குறிப்பிடுவது, அதிக கட்டணத்தை விரும்பாத வாடிக்கையாளர்களைத் தான். அவர்களின் பட்ஜெட்திற்குள், அதிக நன்மை இல்லாமல் பட்ஜெட் பிரண்ட்லியான திட்டங்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களைக் குறிக்கிறது. ரூ. 200 விலைக்குள் கிடைக்கும் பெரும்பாலான திட்டங்கள் உங்களுக்கு 1 ஜிபி முதல் 1.5 ஜிபி வரையிலான டேட்டா நன்மைகளுடன் வருகின்றது என்பது கவனிக்கத்தக்கது. ரூ. 200 விலைக்குள் ஏர்டெல், ஜியோ மற்றும் விஐயிடம் இருந்து கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.

ரூ. 200 விலைக்குக் கீழ் கிடைக்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்

ரூ. 200 விலைக்குக் கீழ் கிடைக்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஏர்டெல் நிறுவனம் ரூ. 200 விலை புள்ளிக்குக் கீழே மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது . இது ரூ.99 முதல் துவங்கி ரூ.155 மற்றும் ரூ.179 விலை வரை செல்கிறது. ஏர்டெல்லின் ரூ. 179 ப்ரீபெய்ட் திட்டம் மாதாந்திர ரீசார்ஜ் விருப்பமாகும். இது 2ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ்களை 28 நாட்களுக்கு வழங்குகிறது. கூடுதல் நன்மைகளாக, சந்தாதாரர்கள் அமேசான் பிரைம் மொபைல் பதிப்பு , இலவச ஹலோ ட்யூன்கள் மற்றும் இலவச விங்க் மியூசிக் சேவைக்கான 30 நாள் இலவச சோதனையைப் பெறுகிறார்கள்.

எலோன் மஸ்க் போட்ட ஸ்கெட்ச்.. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான திட்டம் இது தானா? வீடியோ இதோ..எலோன் மஸ்க் போட்ட ஸ்கெட்ச்.. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான திட்டம் இது தானா? வீடியோ இதோ..

ரூ.155 மற்றும் ரூ.179 திட்டத்தின் நன்மைகள்

ரூ.155 மற்றும் ரூ.179 திட்டத்தின் நன்மைகள்

ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டமான ரூ.155 திட்டத்தில் உங்களுக்கு 300 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகள் தவிர மொத்தம் 1ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள் மட்டுமே. இது ஏர்டெல் ரூ.179 திட்டத்தில் உள்ள அதே கூடுதல் நன்மைகளுடன் வருகிறது. ஏர்டெல்லின் ரூ.99 திட்டமானது 28 நாட்களுக்கு 200எம்பி டேட்டாவுடன் கூடிய ஸ்மார்ட் ரீசார்ஜ் விருப்பமாகும். ஆனால், அழைப்புகளுக்கு வினாடிக்கு ரூ. 1 பைசா வசூலிக்கப்படுகிறது. எஸ்எம்எஸ் கூட உள்ளூர் குறுஞ்செய்திகளுக்கு ரூ 1 மற்றும் எஸ்டிடி செய்திகளுக்கு ரூ 1.50 வசூலிக்கப்படுகிறது.

ரூ. 200 விலைக்குக் கீழ் கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்

ரூ. 200 விலைக்குக் கீழ் கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் ரூ. 200 விலைக்குக் கீழே தினமும் 1ஜிபி டேட்டா நன்மை மற்றும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் திட்டங்களாகும். ஜியோவிடம் தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும் இரண்டு பேக்குகள் உள்ளன. இதில் ஒன்று ரூ.179 மற்றும் மற்றொன்று ரூ.149 ஆகும். ஜியோவின் ரூ. 149 ப்ரீபெய்ட் திட்டமானது, தினமும் 1ஜிபி டேட்டா நன்மையை (20ஜிபி மொத்த டேட்டா) வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம், வரம்பற்ற குரல் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் என அனைத்தும் 20 நாட்களுக்கு வழங்குகிறது.

நெசம் இதுதான் நம்புங்க: வெறும் ரூ.399 விலையில் 3.3 TB டேட்டா..Jio, BSNL, Airtel, ACT பிராட்பேண்ட் திட்டங்கள்..நெசம் இதுதான் நம்புங்க: வெறும் ரூ.399 விலையில் 3.3 TB டேட்டா..Jio, BSNL, Airtel, ACT பிராட்பேண்ட் திட்டங்கள்..

ஜியோவின் ரூ.179 திட்டத்தின் நன்மைகள்

ஜியோவின் ரூ.179 திட்டத்தின் நன்மைகள்

ஜியோவின் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டமானது ரூ.149 திட்டத்தைப் போன்ற பலன்களை வழங்குகிறது. இந்த திட்டம் தினமும் 1ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் என அனைத்து நன்மைகளையும் அப்படியே வழங்குகிறது. இது தவிர இந்த ரூ. 179 திட்டமானது முந்தைய திட்டத்தை விட நான்கு நாட்கள் கூடுதலாக வழங்கி, மொத்தம் 24 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது. மேலும், இதன் மொத்த டேட்டா வரம்பு 24ஜிபி ஆகும்.

ஜியோவின் ரூ. 119 திட்டத்தின் நன்மைகள்

ஜியோவின் ரூ. 119 திட்டத்தின் நன்மைகள்

அதேபோல், தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் பேக்கின் கீழ், ஜியோ ரூ. 119 விலைக்கு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இது 14 நாட்கள் மட்டும் செல்லுபடியாகும் வேலிடிட்டி பலன்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்துடன் உங்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், 300 எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினமும் கிடைக்கும் 1.5 ஜிபி டேட்டா நன்மையை மொத்தமாகப் பார்க்கும் பொழுது உங்களுக்கு 21 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. ஜியோ சந்தாதாரர்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றை அணுகலாம்.

வைஃபை ரூட்டரை எந்த இடத்தில் வைத்தால் சிறந்தது? அதிக இணைய வேகம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?வைஃபை ரூட்டரை எந்த இடத்தில் வைத்தால் சிறந்தது? அதிக இணைய வேகம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

ரூ. 200 விலைக்கு கீழ் கிடைக்கும் Vi ப்ரீபெய்ட் திட்டங்கள்

ரூ. 200 விலைக்கு கீழ் கிடைக்கும் Vi ப்ரீபெய்ட் திட்டங்கள்

வோடபோன் ஐடியா சந்தாதாரர்களுக்கு நிறுவனம், ரூ. 200 வரம்பிற்குக் கீழ் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. Vi ப்ரீபெய்ட் திட்டம் ரூ.155 இல் வரம்பற்ற அழைப்புகள், 300 SMS மற்றும் 1GB டேட்டாவை 24 நாட்களுக்கு வழங்குகிறது. அதேபோல், ரூ. 149 விலை கொண்ட Vi ப்ரீபெய்ட் திட்டம் உங்களுக்கு, 1GB டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை 21 நாட்களுக்கு வழங்குகிறது. சுவாரஸ்யமாக, இந்தத் திட்டம் SMS நன்மையை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.199 விலையில் உள்ள Vi ப்ரீபெய்ட் திட்டம் ரூ.200க்கு கீழ் மற்றொரு சலுகையாகும்.

வோடபோன் ஐடியாவின் ரூ.179 திட்டத்தின் நன்மைகள்

வோடபோன் ஐடியாவின் ரூ.179 திட்டத்தின் நன்மைகள்

இது ஒரு நாளைக்கு 1GB டேட்டா, தினமும் 100 SMS மற்றும் 18 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. கடைசியாக, ரூ.200 விலைக்குக் குறைவான மாதாந்திர திட்டங்களைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.179 விலைக்கு Vi ஒரு திட்டத்தை வழங்குகிறது. இது வரம்பற்ற அழைப்புகள், 2ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது. மற்ற எல்லா திட்டங்களையும் போலல்லாமல், Vi Rs 179 திட்டம் கூடுதல் நன்மையாக Vi Movies மற்றும் TVக்கான அணுகலை வழங்குகிறது. பட்ஜெட் பிரண்ட்லியாக ரீசார்ஜ் திட்டங்களை தேடும் நபர்கள் இந்த திட்டங்களைக் கருத்தில்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Best Airtel Jio And Vi Prepaid Plans That Cost Less Than Rs 200 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X