Home
News

வெளுத்து வாங்கும் வெயில்.. கவலை வேண்டாம்.. ரூ.5000க்கு கீழ் தரமான ஏர் கூலர்கள்.. பட்டியல் இதோ..

இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அதுவும் தமிழ்நாட்டில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. குறிப்பாக வெளியில் சென்றாலே அனலாக வெப்பம் தகிக்கிறது, வியர்த்து கொட்டுகிறது. அக்னி நட்சத்திம் இன்னும் ஆரம்பம் ஆகாத நிலையிலேயே வெயில் இப்படி கொளுத்தி எடுப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

அதேபோல் இந்தியா முழுவதும் அதிக மக்கள் ஏசி, ஏர் கூலர்கள், மினி ஏர் கூலர்கள் போன்ற சாதனங்களை வாங்க தொடங்கியுள்ளனர். அதுவும் இப்போது ஏர் கூலர் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் ரூ.5,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஏர் கூலர் மாடல்களை (air coolers) இந்த பதிவில் பார்க்கலாம்.

வெளுத்து வாங்கும் வெயில்.. . ரூ.5000க்கு கீழ் தரமான ஏர் கூலர்கள்..

1.வி-கார்டு 22 எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் (V-Guard 22 L Room/Personal Air Cooler) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.5610 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏர் கூலர் மாடலை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஏர் கூலர் மாடலை ரூ.4,610 விலையில் வாங்கிவிட முடியும்.

22 லிட்டர் டேங்க் கெப்பாசிட்டி (Tank Capacity), 1415 m3/h ஏர் டெலிவரி, 4டி ஏர் சர்குலேஷன் (4D Air Circulation), தேன்கூடு பட்டைகள் (honeycomb pads) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த வி-கார்டு ஏர் கூலர் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஏர் கூலர் மாடலுக்கு 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது.

2.கேண்டிஸ் போர்ட்டபிள் ஏர் கூலர் 25L (Candes Portable Air Cooler 25L) மாடலுக்கு அமேசான் தளத்தில் 56 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.5,049 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

3 ஸ்பீடு செட்டிங்ஸ், தேன்கூடு பட்டைகள் (honeycomb pads), 1400 cm/h ஏர் டெலிவரி, 22 லிட்டர் வாட்டர் டேங்க் கெப்பாசிட்டி (Tank Capacity) உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த கேண்டிஸ் போர்ட்டபிள் ஏர் கூலர் மாடல் வெளிவந்தது. மேலும் இது இன்வெர்ட்டர் இணக்கமான ஏர் கூலர் என்பது குறிப்பிடத்தக்கது.

3.பஜாஜ் 24 எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் (BAJAJ 24 L Room/Personal Air Cooler) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.4999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. இன்வெர்ட்டர் இணக்கமானது, 3 ஸ்பீடு கண்ட்ரோல், 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), 24 லிட்டர் வாட்டர் டேங்க் கெப்பாசிட்டி, 1700 m3/h ஏர் டெலிவரி, 3 ஸ்பீடு உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.

4.சிம்பொனி 27எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர்(Symphony 27 L Room/Personal Air Cooler) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.5,791 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த சாதனத்தை ரூ.4,791 விலையில் வாங்கலாம்.

27 லிட்டர் டேங்க் கெப்பாசிட்டி(Tank Capacity), தேன்கூடு பட்டைகள் (honeycomb pads), 3 ஸ்பீடு கண்ட்ரோல், ஸ்விங்க் மோட், கூலிங் மோட், பவர்ஃபுல் பேன் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த அசத்தலான சிம்பொனி 27எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் மாடல் வெளிவந்தது.

வெளுத்து வாங்கும் வெயில்.. . ரூ.5000க்கு கீழ் தரமான ஏர் கூலர்கள்..

5.ஓரியண்ட் எலக்ட்ரிக் 40எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் (Orient Electric 40 L Room/Personal Air Cooler) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6,249 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்க கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏர் கூலர் மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.4749 விலையில இந்த சாதனத்தை வாங்க முடியும்.

40 லிட்டர் டேங்க் கெப்பாசிட்டி (வுயமெ ஊயியஉவைல), இன்வெர்ட்டர் இணக்கமானது, 1750 cm/h ஏர் டெலிவரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த ஓரியண்ட் எலக்ட்ரிக் 40எல் ரூம்ஃபெர்சனல் ஏர் கூலர் வெளிவந்தது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best air coolers under Rs. 5000 to beat the heat: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X