கோடை வெயிலைச் சமாளிக்க இந்த மலிவு விலை ஏர் கூலர்கள் போதும்.. 360 டிகிரி அட்ஜஸ்ட்மென்ட்.. இதோ பட்டியல்..
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. குறிப்பாக சில மாவட்டங்களில் அதிகபட்சமாக 104 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் சாலையில் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
அதேபோல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பெண்கள் கைக்குட்டை மற்றும் துப்பட்டாவால் முகத்தை மூடியபடியும், பொதுமக்கள் சாலைகளில் குடை பிடித்தபடியும் நடந்து செல்வதைக் காணமுடிந்தது. அதேபோல் சுட்டெரிக்கும் வெயிலால் வீடுகளில் புதிய ஏசி, ஏர் கூலர், மினி ஏர் கூலர் போன்ற சாதனங்களை மக்கள் வாங்கத் தொடங்கியுள்ளனர்.

அதுவும் பல முன்னணி நிறுவனங்கள் தற்போது போட்டிப்போட்டுக் கொண்ட மினி ஏர் கூலர் (mini air cooler) மாடல்களை கம்மி விலையில் விற்பனை செய்து வருகின்றன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் கம்மி விலையில் கிடைக்கும் சிறந்த மினி ஏர் கூலர் மாடல்களை (mini air coolers) இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
1.TEKCOOL டபுள் எண்டெட் ஸ்ப்ரே கூலர் ஆனது அமேசான் தளத்தில் ரூ.1499 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 280ml வாட்டர் டேங்க், 7 கலர் எல்இடி லைட், USB-C ரிச்சார்ஜபிள், ரிமோட் கண்ட்ரோல், 3 ஸ்ப்ரே வால்யூம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த TEKCOOL மாடலில் உள்ளன.
2.COFENDY போர்ட்டபிள் ஏர் கூலர் மாடல் ஆனது அமேசான் தளத்தில் ரூ.799 விலையில் வாங்க கிடைக்கிறது. 3 ஸ்மார்ட் ஸ்பீடு, 360 டிகிரி அட்ஜஸ்ட்மென்ட், USB போர்ட் ஆதரவு, 6 இன்ச் ஃபேன், ஸ்ப்ரே (spray) கண்ட்ரோல் சுவிட்ச், எல்இடி லைட் சுவிட்ச் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஏர் கூலர் மாடல் வெளிவந்தது.
3.Enfogo போர்ட்டபிள் ஏர் கூலர் ஆனது அமேசான் தளத்தில் ரூ.1299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சாதனம் 500ML வாட்டர் டேங்க், 7 கலர்ஸ் எல்இடி லைட், 3 விண்ட் ஸ்பீடு (3 wind speeds), USB கேபிள் ஆதரவு உள்ளிட அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்தது. குறிப்பாக Enfogo போர்ட்டபிள் ஏர் கூலர் மாடல் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

4. Mabron போர்ட்டபிள் ஏர் கூலர் மாடலை அமேசான் தளத்தில் ரூ.1299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 7 கலர்ஸ் எல்இடி லைட், 3 விண்ட் ஸ்பீடு( 3 wind speeds), USB கேபிள், 600ML வாட்டர் டேங்க், 60 டிகிரி அட்ஜஸ்ட்மென்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த Mabron போர்ட்டபிள் ஏர் கூலர் மாடல் வெளிவந்தது.
5.Vasukie போர்ட்டபிள் ஏர் கூலர் அமேசான் தளத்தில் ரூ.2001 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் 3 விண்ட் ஸ்பீடு (3 wind speeds), 7 கலர் லைட்ஸ், யுஎஸ்பி கேபிள் ஆதரவு உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. பின்பு வீடுகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் இதைப் பயன்படுத்தலாம். அதேபோல் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய கைப்பிடி வசதியும் இதில் உள்ளது.


Click it and Unblock the Notifications








