Home
News

2024 இல் பெஸ்ட் கேமரா போன்கள் இது தான்.. பிளான் பண்ணி வாங்குங்க.. இல்லாட்டி வருத்தப்படுவீங்க..

இந்த 2024ம் ஆண்டு துவங்கி 4 நாட்களில் 5 ஸ்மார்ட்போன் (Smartphone) மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இந்த ஆண்டு வேற மாதிரியான ஆச்சரியங்களை வழங்கவுள்ளது. குறிப்பாக பெஸ்ட் கேமரா போன்களை (Best Camera Phones) எதிர்பார்ப்பவர்களுக்கு இது பெஸ்ட் ஆண்டாகும்.

இந்த ஆண்டில் நீங்கள் வெயிட் செய்து வாங்கவேண்டிய பெஸ்ட் 6 கேமரா ஸ்மார்ட்போன்களின் (Best 6 Camera Smartphones) பட்டியலை பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கிறோம். இந்த 2024ம் ஆண்டில் அறிமுகமாகவிருக்கும் ஸ்மார்ட்போன்களில் எது பெஸ்டான கேமரா அம்சங்களை கொண்டிருக்கும் என்ற அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

2024 இல் பெஸ்ட் கேமரா போன்கள் இது தான்.. பிளான் பண்ணி வாங்குங்க..

இந்த 2024 ஆம் ஆண்டில் அற்புதமான கேமரா அம்சங்களுடன் வெளிவர தயார்நிலையில் இருக்கும் புதிய ஸ்மார்ட்போன்களின் விபரங்களை தான் பார்க்கப்போகிறோம். இந்த பட்டியலில் முன்னணி பிராண்டுகளான சியோமி (Xiaomi), ஒன்பிளஸ் (OnePlus), சாம்சங் (Samsung), விவோ (Vivo), ஆப்பிள் (Apple), கூகுள் (Google) இடமிருந்து வெளிவரவிருக்கும் புதிய மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த 2024 ஆம் ஆண்டில் பெஸ்ட் கேமராக்களை கொண்ட ஸ்மார்ட்போன் எது?
- விவோ X100 ப்ரோ (Vivo X100)
- சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் (Samsung Galaxy S24 Series)
- ஒன்பிளஸ் 12 (OnePlus 12)
- சியோமி 14 ப்ரோ (Xiaomi 14 Pro)
- கூகுள் பிக்சல் 9 சீரிஸ் (Google Pixel 9 Series)
- ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series)

போன்ற மாடல் சாதனங்களில் சிறந்த கேமரா அம்சத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். இதில் உள்ள பல ஸ்மார்ட்போன் மாடல்கள் பிளக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் என்பது கவனிக்கத்தக்கது. பிளாக்ஷிப் மற்றும் ப்ரோ மாடல்களில் எப்போதும் நிறுவனங்கள் அதன் உயர் திறன் கொண்ட அம்சங்களை புகுத்துவது வழக்கமாக உள்ளது. ஆனால், 2024 இல் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவுள்ளனர்.

இந்த 2024 ஆம் ஆண்டில் புது மொபைல் சாதனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், உங்களுக்கு பிடித்தமான பிராண்டு எந்த காலப்பிரிவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதென்ற ஒரு கணிப்பை கணித்துக்கொண்ட பிறகு, புதிய சாதனங்கள் வாங்குவது சிறப்பானது என்று அறிவுரைக்கப்படுகிறது.

1. விவோ X100 ப்ரோ (Vivo X100):
இந்த ஸ்மார்ட்போன் ஜீய்ஸ் டி* கோட்டிங் (Zeiss T* Coating) கொண்ட சிறந்த கேமராவை கொண்டுள்ளது. இதில் மூன்று 50MP கேமராக்கள் பிரத்தியேகமான துல்லியத்தை வழங்க Zeiss மூலம் டியூன் செய்யப்பட்டுள்ளது.

2024 இல் பெஸ்ட் கேமரா போன்கள் இது தான்.. பிளான் பண்ணி வாங்குங்க..

2. சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் (Samsung Galaxy S24 Series):
இந்த ஸ்மார்ட்போன்கள் நியாமான விலை பிரிவில், தரமான கேமரா அம்சத்தை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த சீரிஸ் வரிசையில் நைட்டைம் போட்டோகிராஃபி திறம் பல மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

3. ஒன்பிளஸ் 12 (OnePlus 12):
தரமான குவாலிட்டி, கிரிஸ்டல் கிளியர் கலர், துல்லியமான போட்டோ மற்றும் வீடியோ என்று கேமரா பிரிவில் கலக்கலான திறனை வழங்க இதன் கேமராக்கள் ஹேசல்ப்ளாட் (Hasselblad) மூலம் டியூன் செய்யப்பட்டுள்ளன.

4.சியோமி 14 ப்ரோ (Xiaomi 14 Pro):
இந்த ஸ்மார்ட்போன் மூன்று 50MP கேமரா சென்சார் உடன் லைகா கலர் சயின்ஸ் (Leica Colour Science) தொழில்நுட்ப கேமரா டியூனீங்க உடன் வருகிறது. இது உண்மையில் ஒரு டாப் பெர்பார்மர் போனாகும்.

5. கூகுள் பிக்சல் 9 சீரிஸ் (Google Pixel 9 Series):
இந்த ஸ்மார்ட்போன் கேமராவின் மெகாபிக்ஸல் குறித்து இல்லை. இது AI தொழில்நுட்பத்துடன் எப்படி கேமரா தரத்தை அடுத்தநிலைக்கு கொண்டு சென்றுள்ளது என்பது பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது.

6. ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series):
ஆப்பிள் நிறுவனத்தின் வாக்குறுதிப்படி, ஐபோன் 16 மாடல் போன்கள் இந்த ஆண்டு மிகப்பெரிய கேமரா அப்கிரேடை பெரும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best 6 Camera Flagship Smartphone Models Launching In India 2024 Do Not Miss The List Before Buying
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X