ரூ.20,000-க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் வேண்டுமா?- சிறந்த பட்டியல் இதோ!

|

ரூ.20,000 விலை பிரிவில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம். இந்த பட்டியலில் ரெட்மி நோட் 11 ப்ரோ+, ரியல்மி 9 எஸ்இ உள்ளிட்ட சாதனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ரியல்மி 9 எஸ்இ தற்போது இந்தியாவில் ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5ஜி சாதனமாகும். ஸ்டாக் ஆண்ட்ராய்டு இடைமுகம் கொண்ட சாதனத்தை வாங்க விருப்பம் இருந்தால் மோட்டோ ஜி71 சிறந்த சாதனமாக இருக்கும்.

ரூ.20,000 விலைப் பிரிவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

ரூ.20,000 விலைப் பிரிவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

ரூ.20,000 விலைப் பிரிவில் பல 5ஜி ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சாதனங்களும் நுகர்வோர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து வருகிறது. பல்வேறு விலைப்பிரிவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் சாதனங்களை போட்டிப்போட்டுக் கொண்டு புதுமையான அம்சங்கள் மற்றும் வடிவமைப்புடன் அறிமுகம் செய்து வருகிறது. பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் ஸ்டைல் உள்ளிட்ட ஆதரவுகளில் சாதனங்கள் கிடைக்கிறது. இதையடுத்து சிறந்த அனுபவத்தை வழங்கக்கூடிய ஸ்மார்ட்போனை கண்டறிவது என்பது சற்று கடினமான விஷயமாகும். இதையடுத்து ரூ.20,000 விலைப்பிரிவில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் தொகுத்து வழங்கப்பட்டிருக்கிறது.

ரியல்மி 9 எஸ்இ 5ஜி

ரியல்மி 9 எஸ்இ 5ஜி

ரியல்மி 9 எஸ்இ 5ஜி இந்தியாவில் ரூ.20,000 விலைப்பிரிவில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போன் சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த விலை வரம்பில் வேறு எந்த ஸ்மார்ட்போனும் வழங்கப்படாத 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இது திறமையான பின்புற கேமராக்கள் மற்றும் பெரிய 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே அம்சத்தைக் கொண்டுள்ளது.

அதிக புதுப்பிப்பு வீதக் காட்சி

அதிக புதுப்பிப்பு வீதக் காட்சி

இதில் ஈர்க்கக்கூடிய அம்சம் என்னவென்றால், அதிக புதுப்பிப்பு வீதக் காட்சி மற்றும் உயர் ரேஞ்ச் சிப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 30 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த விலைப் பிரிவில் சாதனம் வழங்குவதை நியாயப்படுத்த ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவை இது நீக்கி இருக்கிறது. இந்த ரியல்மி 9 எஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.20,049 என்ற விலைக்கு பட்டியலிப்பட்டிருக்கிறது.

ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி

ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி

ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த சாதனங்களில் ஒன்றாகும். இந்த சாதனத்தின் மூலம் சிறந்த லைட்டிங் நிலைகள், நன்கு உகந்த பேட்டரி ஆயுள், நல்ல புகைப்பட பதிவு, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் அமோலெட் 120 ஹெர்ட்ஸ் 6.67 இன்ச் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல்வேறு உயர்ரக அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மூலம் பாதுகாக்கப்படுகிறது. இது அதிகாரப்பூர்வ ஐபி மதிப்பீட்டுடன் வருகிறது. இந்த 5ஜி சாதனம் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் இன்னும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் புதுப்பிப்பூ ஆதரவைப் பெறவில்லை. ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.19,999 என கிடைக்கிறது. எம்ஐ.காம் தளத்தில் ஐசிஐசிஐ வங்கி கார்ட்கள் பயன்படுத்தி வாங்கும் போது ரூ.2000 தள்ளுபடி சலுகை கிடைக்கிறது. இதன்மூலம் இந்த சாதனத்தை ரூ.17,999 என வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனானது மென்மையான செயல்திறனை கொண்டிருக்கிறது. ஆல் ரவுண்டர் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சிறந்த தேர்வாகும். இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது. குறைந்த விலைப்பிரிவு சாம்சங் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் எக்ஸினோஸ் 128 சிப்செட்டை விட சிறந்த செயல்திறன் ஆதரவை இந்த சாதனம் கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் போது ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவு இருக்கிறது. அது இந்த சாதனத்தின் பாக்ஸ்-ல் சார்ஜர் அடாப்டர் இல்லாதது. சாம்சங் நிறுவனம் இடைப்பட்ட போன்களுக்கு அடாப்டர் வழங்குவதை நிறுத்தி விட்டது. கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.17,148 என வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது அமோலெட் டிஸ்ப்ளே இல்லை என்றாலும் எல்சிடி டிஸ்ப்ளே போதுமான தெளிவான ஆதரவை வழங்குகிறது. 6.6 இன்ச் அளவு டிஸ்ப்ளே உடன் 120 ஹெட்ஸ் புதுப்பிப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Best 5G Smartphones Available at Under Rs.20,000: Here the List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X