Home
News

ஒவ்வொரு காசும் முக்கியம்: விரைவில் 5G, ரூ.15,000 க்குள் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் லிஸ்ட்!

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு விலைப் பிரிவில் புதுப்புது அம்சங்களோடு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் எதை வாங்குவது என்பதில் பெரும் குழப்பமே ஏற்படுகிறது.

இந்தியாவில் விரைவில் 5ஜி ஸ்மார்ட்போன்

இந்தியாவில் விரைவில் 5ஜி ஸ்மார்ட்போன்

இது மட்டுமின்றி இந்தியாவில் விரைவில் 5ஜி அறிமுகமாக இருக்கிறது. எனவே 5ஜி ஆதரவோடு சிறந்த அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் வாங்குவது என்பது சிறந்த தேர்வாக இருக்கிறது. இந்தியாவில் 5G சேவை விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இதற்கான முயற்சியில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. எனவே தற்போது புது போன் வாங்கும் போது அதை 5ஜி ஆதரவோடு வாங்குவது என்பது மிகவும் அர்த்தமுள்ளதாகும். 5ஜி ஆதரவோடு கூடிய பல்வேறு ஸ்மார்ட்போன்கள் ரூ.15,000 விலை வரம்பில் கிடைக்கிறது.

ரூ.15,000 க்குள் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

ரூ.15,000 க்குள் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

ரூ.15,000 கீழ் ஏணைய ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. எனவே குழப்பமடையாமல் சிறந்த அம்சங்களோடு கூடிய ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்ய இந்த பட்டியல் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. Samsung, Realme, Redmi, Poco, iQOO உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Redmi Note 10T 5G விலை

Redmi Note 10T 5G விலை

ரெட்மி நோட் 10டி 5ஜி இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரண்டுமே ரூ.15,000 க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் தான். இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் என கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.11,999 ஆக இருக்கிறது. அதேபோல் 6 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.13,999 ஆக கிடைக்கிறது.

ரெட்மி நோட் 10டி 5ஜி அம்சங்கள்

ரெட்மி நோட் 10டி 5ஜி அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் கிராஃபைட் பிளாக், க்ரோமியம் வைட், மின்ட் க்ரீன் மற்றும் மெட்டாலிக் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. 48 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 700 SoC ஆதரவோடு கிடைக்கிறது. 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் இருக்கிறது.

Samsung Galaxy F23 5G விலை

Samsung Galaxy F23 5G விலை

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி ஸ்மார்ட்போனானது நிறுவனத்தின் சமீபத்திய 5ஜி சாதனமாகும். இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அது 4 ஜிபி ரேம் + 12 8ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும். 4 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.14,999 ஆகும். அதேபோல் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.15,999 ஆகும்.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி அம்சங்கள்

Samsung Galaxy F23 5G ஸ்மார்ட்போனானது காப்பர் ப்ளஷ், அக்வா ப்ளூ மற்றும் ஃபாரஸ்ட் க்ரீன் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G SoC, 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 5000mAh பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Poco M4 Pro 5G விலை

Poco M4 Pro 5G விலை

ரூ.15,000 விலைப் பிரிவில் கிடைக்கும் மற்றொரு ஸ்மார்ட்போன் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.15,049, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.17,069, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.19,019 ஆக இருக்கிறது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி அம்சங்கள்

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி அம்சங்கள்

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே, 5000mAh பேட்டரி, MediaTek Dimensity 810 சிப்செட், 50 எம்பி பிரதான கேமரா உட்பட டூயல் ரியர் கேமரா, 1டிபி வரை மெமரி விரிவாக்க வசதி உள்ளிட்ட ஆதரவுகள் இதில் இருக்கிறது.

Realme Narzo 30 5G விலை

Realme Narzo 30 5G விலை

Realme Narzo 30 5G ஆனது 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.14,999, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.16,999 ஆக இருக்கிறது.

ரியல்மி நார்சோ 30 5ஜி அம்சங்கள்

ரியல்மி நார்சோ 30 5ஜி அம்சங்கள்

ரியல்மி நார்சோ 30 5ஜி அம்சங்கள் குறித்து பார்க்கையில் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, மீடியா டெக் டைமன்சிட்டி 700 5ஜி சிப்செட், 48 எம்பி பிரைமரி ரியர் கேமரா உள்ளிட்ட ஆதரவுகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ரேசிங் ப்ளூ மற்றும் ரேசிங் சில்வர் என இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Best 5G Smartphones available at under rs.15,000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X