சுவர் முழுவதும் திரைதான்: சிறந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி., ரூ.26,000-க்கு கீழ்!
ஸ்மார்ட் போன்கள் எப்படி அனைவரையும் ஆக்கிரமித்து வருகிறதோ அதேபோல் அனைவரின் வீட்டிலும் ஸ்மார்ட் டிவி பிரதான ஒன்றாக மாறி வருகிறது. இந்த நிலையில் பட்ஜெட் விலை அதாவது 26000-த்துக்கு கீழ் கிடைக்கும் 50 இன்ச் ஸ்மார்ட்டிவிகள் குறித்து பார்க்கலாம்.

ஸ்மார்ட் டிவிகளுக்கு சிறந்த வரவேற்பு
ஸ்மார்ட் டிவிகளுக்கு சிறந்த வரவேற்பு
இகாமர்ஸ் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் கடைகளில் ஸ்மார்ட் டிவிகளுக்கு சிறந்த வரவேற்பு உள்ளது. ஸ்மார்ட் டிவிகள் பல்வேறு அளவிலும் விலையிலும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் 50 இன்ச்-ல் கிடைக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன் குறித்து பார்க்கலாம். ஆண்ட்ராய்டு ஓஎஸ் அடிப்படையிலான மாடல்களில் பல டிவிகள் கிடைக்கின்றன.

கோடக் 50UHDXSMART 50 அங்குல எல்இடி 4 கே டிவி
கோடக் 50UHDXSMART 50 அங்குல அல்ட்ரா ஹெச்டி டிவியானது, எல்இடி 4 கே டிவி 3840 Xx 2160 பிக்சல் அகலத்திரை இதில் உள்ளது. இந்த டிவி உள்ளமைக்கப்பட்ட வைஃபை மூலம் இயக்கப்படுகிறது, இதையடுத்து பயனர்கள் ஆன்லைன் மூலமாகவே திரைப்படங்களை பதிவிறக்கம் செய்து பார்க்கலாம். அதோடு பல்வேறு ஆன்லைன் சேனல்களை சப்ஸ்க்ரைப் செய்யவும் இது அனுமதிக்கிறது.

Cooaa 50எஸ்3என்50 இன்ச் எல்இடி 4 கே டிவி
Cooaa 50எஸ்3என், 50 இன்ச் எல்இடி 4 கே டிவியானது இந்தியாவில் ரூ.26,000 என்ற விலையில் கிடைக்கிறது. லினக்ஸை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் டிவி பிராண்டின் தனிப்பயன் பயன்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட ஆடியோ வடிவமைப்பு மற்றும் சமிக்ஞை செயலாக்கத்திற்காக டால்பி ஆடியோவுடன் 20W ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Adsun 50AESL1 50 அங்குல எல்இடி 4 கே டிவி
அட்ஸன் 50 ஏஇஎஸ்எல்1 50 இன்ச் எல்இடி 4 கே டிவியில் செட்-டாப் பாக்ஸ், ப்ளூ ரே பிளேயர்கள், கேமிங் கன்சோல், ஹார்ட் டிரைவ்கள் மற்றும் யூ.எஸ்.பி சாதனங்களை இணைக்க இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள் உள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.26,000 என்ற விலையில் கிடைக்கிறது.

தாம்சன் 50TH1000 50 இன்ச் எல்இடி 4 கே டிவி
தாம்சன் உலகளவில் பிரபலமான ஸ்மார்ட் டிவி பிராண்ட்களில் ஒன்றாகும். இது 50 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட சிறந்த ஸ்மார்ட் டிவியின் பட்டியலில் ரூ.26,000 என்ற விலையில் கிடைக்கிறது. தாம்சன் 50TH1000 50 இன்ச் எல்இடி 4 கே டிவி 4 கே டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இந்த டிவியானது பக்கா காட்சி அனுபவத்தை வழங்குகிறது.

திரிகூர் ஏ50டிஜிஎஸ்470.,
50 இன்ச் எல்இடி முழு எச்டி டிவி இந்தியாவில் ரூ.26000 என்ற விலையில் கிடைக்கிறது. 50 இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் சிறந்தவகை டிவியின் பட்டியலில் இந்த டிவி உள்ளது. திரிகூர் ஏ 50 டிஜிஎஸ்470 50 இன்ச் எல்இடி முழு எச்டி டிவி ஆகும். இது 1920 x 1080 பிக்சலுடன் முழு ஹெச்டி அனுபவத்தையும், வைஃபை மற்றும் ஈதர்நெட் ஆதரவையும் வழங்குகிறது. ஆடியோவைப் பொறுத்தவரை, 16W வெளியீட்டைக் கொண்ட இரண்டு ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன.

கோடக் 50FHDXSMART 50 அங்குல எல்இடி முழு ஹெச்டி டிவி
கோடக் 50FHDXSMART 50 அங்குல எல்இடி முழு ஹெச்டி டிவியானது ரூ.26,000 என்ற விலையில் கிடைக்கிறது. இதில் வயர்லெஸ் மீடியா பிளேபேக், உள்ளமைக்கப்பட்ட வைஃபை மற்றும் பல ஸ்மார்ட் அம்சங்களை இது வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








