ஜியோ VS ஏர்டெல் VS வி: பட்ஜெட் விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி.! எது பெஸ்ட்.!

|

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் திட்டங்களுக்கு அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும்.

ஆண்டு டிசம்பர் மாதம்

மேலும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வுக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் இப்போது 84 நாட்கள் செல்லுபடியாகும் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கு சுமார் ரூ.600 முதல் ரூ.700 வரை செலுத்துகின்றனர்.

 ரூ.698 ப்ரீபெய்ட் திட்டம்

உதரணமாக ஏர்டெல்லின் ரூ.698 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. பின்பு 2 ஜிபி தினசரி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த இந்த திட்டம். இந்த திட்டத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

ன்றால் ஒரு

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கு ரூ.600 அல்லது ரூ.700 செலுத்த அனைவரும் தயாராக இருக்க மாட்டர்கள். அத்தகைய பயனர்களை கருத்தில் கொண்டுää இந்தியாவின் டாப் 3 டெலிகாம் நிறுவனங்கள் 84 நாட்கள் செல்லுபடியாகும் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்ளையும் வழங்குகின்றன.

அதன்படி ஜியோவில் ரூ.329 திட்டம் உள்ளது, பின்பு ஏர்டெல் மற்றும் வி வாடிக்கையாளர்களுக்கென ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இந்த மூன்று அட்டகாச திட்டங்களின் முழுமையான நன்மைகள் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்;.

ஜியோ ரூ.329 திட்டம்

ஜியோ ரூ.329 திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.329 திட்டம் ஆனது மொத்தமாக 6 ஜிபி அளவிலான 4 ஜி டேட்டாவை வழங்குகிறது. பின்பு குறிப்பிட்ட டேட்டா வரம்பை மீறிய பின் இணைய வேகம் ஆனது 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். டேட்டா நன்மையை தவிர, வரம்பற்ற ஜியோ முதல் ஜியோ அழைப்பு, 3000 ஜியோ அல்லாத FUP நிமிடங்கள் மற்றும் மொத்தம் 1000 இலவச எஸ்எம்எஸ்கள் உள்ளிட்ட நன்மைகள் இவற்றில் கிடைக்கும்.

குறிப்பாக இந்த திட்டத்தில் வழங்கப்படும் 6 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஒருவேளை 6 ஜிபி டேட்டா நன்மையை நீங்கள் பயன்படுத்தி விட்டால், அடுத்தக்கட்ட டேட்டா தேவைகளுக்கான நீங்கள் ஜியோ 4 ஜி டேட்டா வவுச்சர்களை ரீசார் செய்ய வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.379 திட்டம் ஆனது இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையை வழங்குகிறது. ஆனால் ஜியோ இதுபோன்ற சலுகையை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும ஏர்டெல்லின் இந்த திட்டம் 6ஜிபி அளவிலான மொத்த டேட்டாவை வழங்குகிறது.

மேலும் ஏர்டெல் ரூ.379 திட்டத்தில் 900 இலவச எஸ்எம்எஸ்கள், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம் சந்தா, 400 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களைப் பார்க்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு நன்மைகளும் கிடைக்கும். பின்பு இதே திட்டதில் இலவச ஹெலோடூன்ஸ் நன்மை, ஷா அகாடமி இலவச கோர்ஸ், மற்றும் ரூ.150 பாஸ்ட்டேக் நன்மையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ.379 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.379 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.379 திட்டம் ஆனது ஏர்டெல் போன்ற 6 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, இந்தியா முழுவதும் எந்த நெட்வொர்க்குக்கும் வரமபற்ற குரல் அழைப்பு மற்றும் 84 நாட்களுக்கு 1000 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்குகிறது. அதன்பின்பு வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் Vi மூவிஸ் மற்றும் டிவி ஆப்பிற்கான இலவச அணுகலை பெற முடியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best 4G Prepaid Plans With 84 Days Validity from Airtel, Jio and Vi Detailed and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X