சிறந்த 4ஜி டேட்டா திட்டங்கள் இதோ: விஐ, பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல் பயனரா நீங்கள்!

|

கொரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இதையடுத்து மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றன. மேலும் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பாதுகாப்பாக வீட்டில் இருந்தே பணிபுரியம்படி அறிவுறுத்தி வருகிறது. அதேபோல் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகள்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை இந்தியாவில் அறிவித்து வருகிறது. பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு தவரிக்க முடியா போட்டியாக ஜியோ திகழ்ந்து வருகிறது. ஜியோ அறிமுகமான சில காலங்களிலேயே அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.

ப்ரீபெய்ட் 4ஜி டேட்டா திட்டங்கள்

ப்ரீபெய்ட் 4ஜி டேட்டா திட்டங்கள்

அனைத்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ப்ரீபெய்ட் 4ஜி டேட்டா திட்டங்களை தொடங்குமாறு கட்டாயப்படுத்தி வருகிறது. 4ஜி டேட்டா திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளோடு திட்டங்கள் இருப்பதால் வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்து வருகின்றன. தெளிவுப்படுத்தும் வகையில் கிடைக்கும் திட்டங்களை பார்க்கலாம். பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா கிடைக்கும் சிறந்த 4ஜி டேட்டா பேக்குகளை பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் 4ஜி டேட்டா திட்டங்கள்

பிஎஸ்என்எல் 4ஜி டேட்டா திட்டங்கள்

அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு ஆபரேட்டர் ஒரே பிரிவில் நான்கு திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களானது எஸ்டிவி ரூ.187, எஸ்டிவி ரூ.365, எஸ்டிவி ரூ.599 மற்றும் ரூ.2,399 ஆகிய விலையில் கிடைக்கிறது. இதில் ரூ.187 மற்றும் ரூ.599 விலையில் கிடைக்கும் திட்டத்தின் பலன் குறித்து பார்க்கையில், இந்த திட்டமானது 28 நாட்கள் மற்றும் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி மற்றும் 5ஜிபி டேட்டாவை பெறுகிறார்கள். அதேபோல் ரூ.365 மற்றும் ரூ.2399 திட்டங்கள் குறித்து பார்க்கையில் இந்த திட்டம் 60 நாட்கள் மற்றும் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திடட்த்தில் தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் 3 ஜிபி டேட்டாவை பெறுகிறார்கள். பயனர்கள் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்களையும் வரம்பற்ற அழைப்பையும் பெறுகிறார்கள்.

ஏர்டெல் 4ஜி டேட்டா திட்டங்கள்

ஏர்டெல் 4ஜி டேட்டா திட்டங்கள்

ஏர்டெல் 4ஜி டேட்டா திட்டங்கள் குறித்து பார்க்கலாம்., ஏர்டெல் 4ஜி டேட்டா பிரிவில் கிடைக்கும் நான்கு திட்டங்கள் குறித்து பார்க்கையில்., அது ரூ.199, ரூ.399, ரூ.598 மற்றும் ரூ.2498 ஆகும். இந்த திட்டத்தில் ஒரு நாளுக்கு 1 ஜிபி, 1.5 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டாவை 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 365 நாட்களுக்கு வழங்குகின்றன. இந்த திட்டங்கள் அனைத்தும் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ்களையும், ஏர்டெல் தேங்க்ஸ் நன்மை மற்றும் அமேசான் பிரைம் வீடியோ அணுகல் ஆகியவற்றை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டேட்டா திட்டங்கள்

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டேட்டா திட்டங்கள்

அதேபோல் ஏர்டெல் 4ஜி டேட்டா திட்டங்களை விட ரிலையன்ஸ் ஜியோ திட்டங்கள் விலை சற்று உயர்ந்தாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டங்கள் ரூ.199, ரூ.555, ரூ.599 மற்றும் ரூ.2,399 ஆகும். இந்த திட்டங்கள் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த திட்டமானது 28 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 365 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றை வழங்குகின்றன. இந்த திட்டங்களில் தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் 2 ஜி டேட்டாவை வழங்குகின்றன.

வோடபோன் ஐடியா 4ஜி டேட்டா திட்டங்கள்

வோடபோன் ஐடியா 4ஜி டேட்டா திட்டங்கள்

வோடபோன் ஐடியா நான்கு திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் ரூ.149, ரூ.449, ரூ.801 மற்றும் ரூ.2399 ஆகிய விலையில் கிடைக்கிறது. இந்த திட்டங்கள் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ்-களை வழங்குகின்றன. அதேபோல் இந்த திட்டங்கள் விஐ 3 ஜிபி டேட்டா, 4 ஜிபி டேட்டா மற்றும் 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பயனர்கள் விஐ மூவிஸ், டிவி அணுகல், ஜீ5 சந்தா ஆகியவைகளை பெறுகிறார்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best 4G Data Plans From Jio, BSNL, Vodafone Idea and Airtel: Here the List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X