2016-ஆம் ஆண்டின் பெஸ்ட் 4ஜி டேட்டா பிளான் எது.?
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் இந்த 2016-ஆம் ஆண்டு வெளியான சிறந்த 4ஜி டேட்டா பேக்களின் தொகுப்பு.!
இந்திய தொழில்நுட்ப துறையிலும் சரி, தொலைத்தொடர்பு துறையிலும் சரி, 2016-ஆம் ஆண்டு என்று கூறியதும் நினைவிற்குள் குதிக்கும் பல முதன்மையான விடயங்களில் ரிலையன்ஸ் ஜியோவும் ஒன்றாகும். வாடிக்கையாளர்ளுக்குள் மட்டுமின்றி போட்டியாளர்களுக்கு மத்தியிலும் ஒரு கட்டண புரட்சியை ஏற்படுத்திவிட்ட பெருமை ரிலையன்ஸ் ஜியோவிற்கு சேரும்.
புதிதாக அறிமுகமான ஆர்.ஜியோவிற்கு இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஒன்றும் சளைத்தது அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம் ஏர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய நிறுவனங்களும் பல அதிரடி திட்டங்களை அள்ளி வழங்கின. இந்த கட்டண யுத்தத்தின் விளைவாக அனுதினமும் ஒரு புதிய திட்டத்தை குறிப்பாக 4ஜி கட்டண திட்டம் இந்தியாவில் அறிமுகமானது. அப்படியாக இந்த 2016-ஆம் ஆண்டின் வெளியான பெஸ்ட் 4ஜி டேட்டா பிளான் எது.?

#04 ஏர்டெல்
ஏர்டெல் 4ஜி திட்டங்கள் வட மற்றும் தென் இந்திய அளவில் மாறுபடும் என்றாலும் கூட ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த 4ஜி தரவு திட்டங்களை வழங்கி வருகிறது. வட இந்தியாவில், ஏர்டெல் 28 நாட்கள் செல்லுபடியாகும் தனது 1 ஜிபி திட்டத்தை ரூ.255/-க்கு வழங்கி வருகிறது. மறுபுறம் 28 நாட்கள் செல்லுப்படியாகும் 10 ஜிபி திட்டத்தை ரூ.1,998/-க்கு வழங்கி வருகிறது. தென் இந்தியாவில், ஏர்டெல் 15 நாட்கள் செல்லுபடியாகும் அதன் ரூ.145/- பேக்கில் 500 எம்பியும், மாறட்டும் 28 நாட்கள் செல்லுபடியாகும் அதன் 10 ஜிபி திட்டத்தை ரூ.1,347/-க்கும் வழங்கி வருகிறது.

#03 வோடபோன்
வோடபோன் இந்தியா நிறுவனம் 1ஜிபி அளவிலான 4ஜி தரவை ரூ.265/- பேக் வழங்கியது மற்றும் ஒரு மாத காலம் செல்லுபடியாகும் 10ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை ரூ.999/-க்கு வழங்கியதுதான் அதன் அதிகபட்ச விலை கொண்ட 4ஜி பேக் ஆகும்.

#02 ஐடியா
மறுபுறம் ஐடியா செல்லுலார் ரூ.249/-க்கு 1ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்கி வருகிறது. இதே போல 28 நாட்கள் செல்லுபடியாகும் 10 ஜிபி அளவிலான 4ஜி தரவு வழங்கும் ரூ,995/- பேக் ஒன்றையும் ஐடியா செல்லுலார் வழங்கி வருகிறது.

#01 ஆர்.ஜியோ
2016-ஆம் ஆண்டின் பெஸ்ட் 4ஜி டேட்டா பிளான் என்பது சந்தேகமே இன்றி ரிலையன்ஸ் ஜியோவிற்கு தான். ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி தரவு திட்டம் வெறும் ரூ.149/-க்கு ஆரம்பித்து தரவுடன் சேர்த்து வரம்பற்ற இலவச அழைப்புகள் ஆகியவைகளையும் வழங்குகிறது. அதேபோல், ஜியோ அதன் 10ஜிபி தரவு திட்டத்தை கூடுதல் டிஜிட்டல் சலுகைகளுடன் ரூ.999/-க்கு வழங்குகிறது.

மேலும் படிக்க
2ஜி / 3ஜி போன்களில் ஜியோ சேவைகளை பயன்படுத்துவது எப்படி.?


Click it and Unblock the Notifications