ரூ.20,000 விலைக்குள் 43 இன்ச் Smart TV வாங்கலாமா? மொத்தம் 4 பெஸ்ட் மாடல் இருக்கு.. உடனே ஆர்டர் போடுங்க..
ரூ. 20,000 விலைக்குள் 43" இன்ச் ஸ்மார்ட் டிவி (Smart TV) வாங்க முடியுமா? என்ற சந்தேக கேள்விக்கு, ஆணித்தரமான முடியும் என்கிறது பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம். என்னதான் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல்ஸ் (Flipkart Big Billion Days Sale 2024) நிறைவடைந்துவிட்டாலும், பிளிப்கார்ட் இப்போது பிளிப்கார்ட் உட்சவ் சேல்ஸ் (Flipkart Utsav Sale) விற்பனையை இப்போது துவங்கியுள்ளது. இந்த தீபாவளி பண்டிகைக்கு புதிய ஸ்மார்ட் டிவி வாங்கும் ஐடியா இருந்தால், இந்த பட்டியலில் உள்ள டிவியை நீங்கள் வாங்க திட்டமிடலாம்.
ரூ. 20,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் 43 இன்ச் மாடல் ஸ்மார்ட் டிவிகள்:
இந்த பட்டியலில் மிகவும் பிரபலமான சாம்சங் (Samsung), ரியல்மி (Realme), மோட்டோரோலா (Motorola), சியோமி (Xiaomi), டிசிஎல் (TCL), போன்ற பிராண்டுகளின் சூப்பர் டிவிகளை நீங்கள் வாங்கலாம். வெறும் ரூ. 20,000 விலையில் 43'' இன்ச் அளவு டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவியை உங்களால் வாங்க முடியும். சரி, இப்போது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் எந்த டிவியை வாங்கலாம் என்று பார்க்கலாம்.

1. தாம்சன் பியோனிக்ஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி (Thomson Phoenix 43-Inch Smart TV):
அசல் விலை: ரூ. 31,999
தள்ளுபடி: 34%
சலுகை விலை: ரூ. 20,999
2. ஹைசென்ஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி (Hisense 43-Inch Smart TV):
அசல் விலை: ரூ. 34,999
தள்ளுபடி: 42%
சலுகை விலை: ரூ. 19,999
3. மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 43 இன்ச் ஸ்மார்ட் QLED டிவி (Motorola EnvisionX 43 Inch Smart QLED TV):
அசல் விலை: ரூ. 59,99
தள்ளுபடி: 59%
சலுகை விலை: ரூ. 20,999
4. ரியல்மி டெக்லைப் சினிசோனிக் Q 43 இன்ச் ஸ்மார்ட் டிவி (Realme TechLife CineSonic Q 43-Inch Smart TV):
அசல் விலை: ரூ. 45,999
தள்ளுபடி: 52%
சலுகை விலை: ரூ. 21,999
மேலே குறிப்பிடப்பட்டுள்ள முதல் இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களின் LED ஸ்மார்ட் டிவி டிஸ்பிளேக்களை வழங்கும் மாடல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தபடியாக, குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு மாடல்கள் QLED ஸ்மார்ட் டிவி மாடலாக வாங்க கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர சாம்சங் நிறுவனத்தின் LED மற்றும் QLED ஸ்மார்ட் டிவிகள் மீது இப்போது பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், TCL பிராண்டின் பிரமாண்டமான டிஸ்பிளே டிவிக்கள் மீதும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி வாங்க விரும்புவோருக்கு பிளிப்கார்ட் வழங்கும் இந்த மாபெரும் ஸ்மார்ட் டிவி சலுகைகள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூட நாம் கூறலாம். உங்கள் வீட்டிற்கு குறைந்த விலையில் பெரிய டிஸ்பிளே ஸ்மார்ட் டிவிகளை வாங்க மிகச்சரியான நேரம் இது தான் என்பதை மறக்காதீர்கள்.


Click it and Unblock the Notifications








