என்னது.. வெறும் ரூ.11,999 தானா.. இந்த செப் மாசத்துல ஆர்டர்களை அள்ளி குவித்த ஸ்மார்ட் TV.. என்ன மாடல்?
ரூ.15000-க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியை வாங்க வேண்டும் என்கிற தேடலில் உள்ளீர்களா? குறிப்பாக ஒன்பிளஸ், சாம்சங், சோனி, ரெட்மி போன்ற பிரபலமான பிராண்டுகளின் டிவிகளை வாங்க விரும்புகிறீர்களா? ஆம் என்றால் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.
ஏனென்றால் வெறும் ரூ.11,999 க்கு விற்பனையில் பட்டையை கிளப்பிய ஒரு டிவி மாடல் உட்பட.. இந்த செப்டம்பரில் நீங்கள் நம்பி வாங்க கூடிய ஐந்து 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை (Best 32 inch Smart TVs) பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்கப்போகிறோம். அதென்ன மாடல்கள்? அவைகளின் விலைகள் என்ன? இதோ விவரங்கள்:

01. தோஷிபாவின் 32-இன்ச் டிவி: இந்த பட்டியலின் முதல் இடத்தில் இருப்பது தோஷிபா நிறுவனத்தின் வி சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி 32வி35எம்பி (TOSHIBA V Series HD Ready Smart Android LED TV 32V35MP) மாடலாகும்.
தற்போது இந்த ஸ்மார்ட் டிவி, அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்கள், இரண்டு யூஎஸ்பி போர்ட்கள், டால்பி ஆடியோ, ஆண்ட்ராய்டுடிவி 11 ஓஎஸ், நெட்பிளிக்ஸ், ப்ரைம் வீடியோ மற்றும் பல போன்ற ஓடிடிக்ளுக்கான ஆதரவு போன்றவைகளை கொண்டுள்ளது.
02. சாம்சங்கின் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி: இந்த பட்டியலின் இரண்டாவது இடத்தில் இருப்பது தென் கொரிய நிறுவனமான சாம்சங் பிராண்டின் வொண்டர்டெயின்மென்ட் சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் டிவி யுஏ32டி4340பிகேஎக்ஸ்எக்ஸ்எல் (Wondertainment Series HD Ready LED Smart TV UA32T4340BKXXL) மாடலாகும்.
இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.14,990 ஆகும். முக்கிய அம்சங்களை பொறுத்தவரை 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்கள், நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, சோனிலிவ் மற்றும் பல ஓடிடி தளங்களுக்கான மல்டிமீடியா ஆதரவு போன்றவைகளை கொண்டுள்ளது.
03. எல்ஜி-யின் 32-இன்ச் டிவி: ரூ.15,000க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் 32-இன்ச் டிவிகள் என்கிற இந்த பட்டியலின் மூன்றாவது இடத்தில் இருப்பது எல்ஜி நிறுவனத்தின் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி 32எல்எம்563பிபிடிசி (LG HD Ready Smart LED TV 32LM563BPTC) மாடலாகும்.
இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி ரூ.13,490 க்கு வாங்க கிடைக்கிறது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்களை வழங்குகிறது. மேலும், இது நெட்பிளிக்ஸ், ப்ரைம் வீடியோ, ஆப்பிள் டிவி, ஜீ5 மற்றும் பல ஓடிடி தளங்களுக்கான மல்டிமீடியா ஆதரவு போன்றவைகளை கொண்டுள்ளது.
04. ஒன்பிளஸின் 32-இன்ச் டிவி: இந்த பட்டியலின் நான்காவது இடத்தில் இருப்பது ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒய் சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 32ஒய்1 (OnePlus Y Series HD Ready LED Smart Android TV 32Y1) மாடலாகும்
இந்த ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.12,499 ஆகும். முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20 வாட்ஸ் ஆடியோ அவுட்புட், டால்பி ஆடியோ, இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்கள், ஆண்ட்ராய்டு டிவி9 ஓஎஸ், நெட்பிளிக்ஸ், ப்ரைம் வீடியோ, சோனிலிவ் மற்றும் பல ஓடிடி தளங்களுக்கான மல்டிமீடியா ஆதரவு போன்றவைகளை கொண்டுள்ளது
05. ரெட்மியின் 32-இன்ச் டிவி: இந்த பட்டியலின் ஐந்தாவது மற்றும் கடைசி இடத்தில் இருந்தாலும் கூட ரெட்மி நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு 11 சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (Android 11 Series HD Ready Smart LED TV L32M6-RA/L32M7-RA) மாடல் ஆனது விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இதன் விலை நிர்ணயம் தான்.
இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.11,999 ஆகும். முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20 வாட்ஸ் ஆடியோ அவுட்புட், டால்பி ஆடியோ, இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்கள், ஆண்ட்ராய்டு டிவி9 ஓஎஸ், நெட்ஃபிக்ஸ், ப்ரைம் வீடியோ, சோனிலிவ் மற்றும் பல ஓடிடி தளங்களுக்கான ஆதரவு போன்றவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








