ரூ.240-க்கு இப்படி ஒரு லாபகரமான Jio திட்டம் இருக்குனு பலருக்கும் தெரியாது!

|

ஒவ்வொரு 28 நாட்களுக்கும் ஒருமுறை அல்லது ஒவ்வொரு 84 நாட்களுக்கும் ஒருமுறை.. ஒரே ஜியோ பிளானை மறுபடியும்.. மறுபடியும் ரீசார்ஜ் செய்யும் பழக்கம் உங்களிடம் இருக்கிறதா?

அதாவது ஒரு Jio ரீசார்ஜ் முடிந்த வேகத்தில், வேறு எந்த ஜியோ பிளான்களையும் பொருட்படுத்தாமல், அதே பிளானை மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்யும் வழக்கம் உங்களிடம் உள்ளதா?

ஆம் என்றால்.. அதை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரமிது!

ஆம் என்றால்.. அதை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரமிது!

ஏனென்றால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, அதன் வாடிக்கையாளர்களுக்கு வெறும் ரூ.240 செலவில் மிகவும் லாபகரமான ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது.

ஒருவேளை நீங்கள் தினமும் 2ஜிபி அளவிலான மொபைல் டேட்டாவை வழங்கும் "மிகவும் லாபகரமான" ரீசார்ஜை தேடுகிறீர்கள் என்றால்.. கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்து உள்ளீர்கள்!

செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

அதென்ன திட்டம்?

அதென்ன திட்டம்?

ரூ.240 செலவில் கிடைக்கும் இது, ஜியோவின் முற்றிலும் புதிய திட்டம் அல்ல. இந்த திட்டம் கிட்டத்தட்ட ஒரு வருடமாக, ஜியோவின் அதிகாரப்பூர்வமான வலைத்தளம் மற்றும் ஜியோ ஆப் (MyJio) வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

மேலும் இந்த திட்டம் மாதாந்திர அடிப்படையில், அதாவது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் கிடைக்கும் திட்டம் அல்ல. மாறாக இது 84 நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்குகிறது!

என்னது ரூ.240-க்கு 84 நாட்கள் வேலிடிட்டி-ஆ?

என்னது ரூ.240-க்கு 84 நாட்கள் வேலிடிட்டி-ஆ?

84 நாட்கள் வேலிடிட்டி என்றதுமே.. வெறும் ரூ.240-க்கு கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு, டெய்லி 2ஜிபி டேட்டாவா? என்று நினைத்துக் கொள்ளவேண்டாம்.

நாங்கள் இங்கே குறிப்பிடுவது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.719 ப்ரீபெய்ட் பிளானை பற்றி; நினைவூட்டும் வண்ணம், இந்த திட்டம் கடந்த 2021-இல் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வின் போது அறிமுகப்படுத்தப்பட்டது!

உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?

இதெப்படி ஒரு லாபகரமான திட்டமாகும்?

இதெப்படி ஒரு லாபகரமான திட்டமாகும்?

மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும் போது, ஜியோவின் ரூ.719 திட்டமானது எப்படி லாபகரமானதாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள, முதலில் நீங்கள் ரூ.719 திட்டத்தின் நன்மைகளை பற்றி விரிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

அப்போது தான் "வெறும் ரூ.240 செலவில்" இந்த திட்டம் வழங்கும் "லாபங்களை" நீங்கள் புரிந்துகொள்ள முடியும்!

ரூ.719 திட்டத்தின் நன்மைகள்!

ரூ.719 திட்டத்தின் நன்மைகள்!

ஜியோவின் ரூ.719 திட்டமான, 1 நாளைக்கு 2ஜிபி என்கிற விதம், 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் நாட்களுக்கு மொத்தம் 168ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

டெய்லி டேட்டா லிமிட் முடிந்த பிறகு, அதாவது 2ஜிபி டேட்டா முடிந்ததும், இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆக குறையும்.

அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான்; எப்படியோ நமக்கு ரொம்ப வசதியா போச்சு!அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான்; எப்படியோ நமக்கு ரொம்ப வசதியா போச்சு!

மற்ற நன்மைகளை பொறுத்தவரை...

மற்ற நன்மைகளை பொறுத்தவரை...

கூடுதலாக அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.
வழக்கமான நன்மைகளை தவிர்த்து இந்த திட்டத்தின் கீழ் ஜியோ ஆப்களுக்கான - அதாவது JioSecurity, JioCloud, JioCinema மற்றும் JioTV - இலவச அணுகலும் கிடைக்கும்.

இப்போது கணக்கு போட்டு பார்த்தால் உங்களுக்கே புரியும்!

இப்போது கணக்கு போட்டு பார்த்தால் உங்களுக்கே புரியும்!

ஜியோவின் ரூ.719 திட்டத்தின் மாதாந்திர செலவை கணக்கிடும் போது, ​இதற்காக நாம் ​ஒரு மாதத்திற்கு செலவழிக்கும் தொகை சுமார் ரூ.240 ஆக இருக்கும்.

இந்த இடத்தில் தான், ஜியோவின் மாதாந்திர திட்டமான ரூ.239-ஐ நாம் உள்ளே கொண்டு வர வேண்டும்.

ஜியோவின் ரூ.239 ரீசார்ஜ் ஆனது, செல்லுபடியாகும் 28 நாட்களுக்கும் டெய்லி 1.5ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்குகிறது.

Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!

ஆக 'ஆட்டோமேட்டிக்' ஆக ரூ.719 தான் பெஸ்டு ஆப்ஷன்!

ஆக 'ஆட்டோமேட்டிக்' ஆக ரூ.719 தான் பெஸ்டு ஆப்ஷன்!

ரூ.239 ரீசார்ஜ் உடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, ரூ.719 திட்டமானது கூடுதல் டேட்டாவை வழங்குகிறது மற்றும் நீண்ட காலத்திற்க்கான வேலிடிட்டியை சற்றே லாபகரமான விலையில் வழங்குகிறது.

ஒருவேளை உங்களுக்கு, டெய்லி 2ஜிபி அளவிலான டேட்டா தேவைகள் இல்லை என்றால்.. நீங்கள் 84 நாட்களுக்கும், தினமும் 1.5ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.666-ஐ தேர்வு செய்யலாம்.

இது டேட்டா அளவை தவிர்த்து, ரூ.719 வழங்கும் அதே நன்மைகளை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Best 2GB Daily Data Plan 2022 Here is Why Reliance Jio Rs 719 is More Profitable Prepaid Recharge

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X