Home
News

உங்க பட்ஜெட்டிற்குள் பெஸ்ட் ரீசார்ஜ் திட்டம் வேண்டுமா? அப்போ இந்த BSNL, Jio, Airtel, Vi திட்டங்களை பாருங்க..

இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவை முன்பு வழங்கிய திட்டங்களின் விலையை அதிகரித்து, திடீரென புதிய கட்டான உயர்வை நடைமுறைப்படுத்தியது. ஆனால், அரசுக்குச் சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மட்டுமே ப்ரீபெய்ட் கட்டண உயர்வை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசு தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தவிர்த்து அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது ப்ரீபெய்டு சலுகைகளின் விலையை 20% முதல் 25% வரை உயர்த்தியுள்ளன.

அதிருப்தி அடைந்த மக்களுக்கு BSNL வழங்கும் மலிவு விலை திட்டம்

அதிருப்தி அடைந்த மக்களுக்கு BSNL வழங்கும் மலிவு விலை திட்டம்

இது அரசு நடத்தும் டெல்கோ மற்றும் அனைத்து தனியார் ஆபரேட்டர்கள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க விலை வேறுபாட்டை உருவாக்கியுள்ளது. புதிய விலை கட்டணங்களால் மக்கள் அதிருப்தி அடைந்ததுடன், இப்போது அவர்களுக்குத் தேவைப்படும் விலையில் எந்த சிறந்த திட்டம் கிடைக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதில் சிலருக்குச் சிக்கல் எழுந்துள்ளது. அதிலும், குறிப்பாக நீண்ட நாட்களாக ஒரே திட்டத்தை மட்டும் கவனம் செலுத்திப் பயன்படுத்திவரும் பயனர்களின் நிலைமை சற்று மோசமாகியுள்ளது.

சிறிய விலை அதிகரிப்பு மாற்றத்தால் இவ்வளவு சிக்கலா?

சிறிய விலை அதிகரிப்பு மாற்றத்தால் இவ்வளவு சிக்கலா?

என்னதான் மக்களுக்கு முன்பு கிடைத்த திட்டங்கள் இப்போது சிறிய விலை அதிகரிப்புடன் கிடைத்தாலும், இந்த சிறிய மாற்றம் சிலரின் பட்ஜெட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பயனர்கள் எதிர்பார்க்கும் பட்ஜெட்டிற்குள் சிறந்த திட்டங்களைத் தேர்வு செய்ய இப்போது அவர்கள் நீண்ட நேரத்தை டெலிகாம் போரட்டல்களில் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த சிக்கலைத் தவிர்த்து, உங்களின் நேரத்தை மிச்சம் பிடித்துச் சேமிக்க உதவும் முயற்சியில் இந்த பதிவை எழுதியுள்ளோம். பட்ஜெட் விலையில் கிடைக்கக்கூடிய சிறந்த திட்டங்களை இங்கு உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.

பட்ஜெட் விலையில் கிடைக்கக்கூடிய சிறந்த திட்டம் எது தெரியுமா?

பட்ஜெட் விலையில் கிடைக்கக்கூடிய சிறந்த திட்டம் எது தெரியுமா?

மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், விலையில் மட்டுமல்ல, வழங்கப்படும் நன்மைகளையும் கருத்தில் கொண்டு BSNL நிறுவனம் இந்திய டெலிகாம் தொழில்துறையில் சிறந்த 28 நாட்கள் ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இதேபோல், அதிக பயனர்கள் கொண்ட ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அதே 28 நாட்கள் செல்லுபடியில் என்ன - என்ன நன்மையை வழங்குகிறது என்று தெளிவாகப் பார்க்கலாம். இப்போது பட்ஜெட் விலையில் கிடைக்கக்கூடிய சிறந்த திட்டம் எது என்பதை அறிந்துகொள்ளப் பதிவை இறுதி வரை படியுங்கள்.

பிஎஸ்என்எல்லின் 28 நாட்கள் செல்லுபடியாகும் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல்லின் 28 நாட்கள் செல்லுபடியாகும் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் உங்களுக்கு இப்போது வெறும் ரூ. 187 விலையில் இந்த திட்டத்தை வழங்குகிறது. இது 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்தத் திட்டம் பயனர்களுக்குத் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது. இது நியாயமான பயன்பாட்டுக் கொள்கையின் (FUP) வரம்பு முடிந்த பிறகு 80 Kbps என்ற குறைந்த வேகத்தில் டேட்டாவை வழங்குகிறது. இதனுடன், பயனர்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளைப் பெறுகிறார்கள்.

ரிலையன்ஸ் ஜியோவின் 28 நாட்கள் செல்லுபடியாகும் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் 28 நாட்கள் செல்லுபடியாகும் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டம்

BSNL உடன் ஒப்பிடுகையில், ஜியோ தனது மலிவான குறிப்பிடத்தக்க டேட்டா திட்டத்தை ரூ. 209 விலைக்கு வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் தினசரி 1 ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை போன்ற தினசரி நன்மைகளைப் பெறுகிறார்கள். இத்துடன் உங்களுக்கு ஜியோ அப்ளிகேஷன் சந்தாக்களின் மற்ற நன்மைகளும் கிடைக்கிறது. எனவே அடிப்படையில், ஜியோவுடன், பயனர்கள் அதிக கட்டணம் செலுத்தி பிஎஸ்என்எல் வழங்கும் டேட்டாவில் பாதி அளவை மட்டுமே பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல்லின் 28 நாட்கள் செல்லுபடியாகும் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல்லின் 28 நாட்கள் செல்லுபடியாகும் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களின் மிகவும் மலிவு விலையில் குறிப்பிடத்தக்க டேட்டா திட்டங்களை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இதில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 265 விலையின் கீழ் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறது. அதேபோல், வோடபோன் ஐடியா நிறுவனம், அதன் பயனர்களுக்கு ரூ. 269 என்ற விலையில் 28 நாட்கள் செல்லுபடியாகும் பட்ஜெட் விலை திட்டத்தை வழங்குகின்றது.

ஏர்டெல்லின் ரூ. 265 விலை திட்டம் மற்றும் வோடபோன் ஐடியாவின் ரூ. 269 திட்டம்

ஏர்டெல்லின் ரூ. 265 விலை திட்டம் மற்றும் வோடபோன் ஐடியாவின் ரூ. 269 திட்டம்

இந்த இரண்டு திட்டங்களும் பயனர்களுக்குத் தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா திட்டங்களும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையை வழங்குகிறது. ஏர்டெல்லின் ரூ. 265 விலை திட்டம் மற்றும் வோடபோன் ஐடியாவின் ரூ. 269 திட்டம் அதன் பயனர்களுக்குத் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகின்றது. இதனுடன் ஒப்பிடுகையில், BSNL இன் திட்டம் மிகவும் மலிவானது மற்றும் தனியார் ஆபரேட்டர்கள் தங்கள் திட்டங்களுடன் வழங்குவதை விட அதிக டேட்டாவை வழங்குகிறது.

இதை கவனிக்க மறக்காதீர்கள்

இதை கவனிக்க மறக்காதீர்கள்

அதிக டேட்டா வேண்டும் என்பவர்களுக்கு பட்ஜெட் விலைக்கும் மலிவான விலையில் BSNL நிறுவனம் மட்டுமே இப்போதைக்குக் கூடுதல் டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க்குகள் பான் இந்தியாவைக் கொண்டிருக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம். எனவே, நீங்கள் பெரும்பாலும் 3ஜி மற்றும் சில சமயங்களில் 2ஜி வேகத்தில் டேட்டாவைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதைக் கவனிக்க மறக்காதீர்கள்.

உங்களுக்கு எந்த திட்டம் வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்

உங்களுக்கு எந்த திட்டம் வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்

BSNL மலிவு விலையில் 2ஜிபி டேட்டாவை வழங்குவதற்கு இதுவும் ஒரு காரணமே. தினசரி 1ஜிபி டேட்டா பயன்படுத்தப் பற்றாக்குறையாக இருக்கும் என்று கருதும் பயனர்களுக்காகத் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களையும் வழங்குகின்றது. ஆனால், இவை இன்னும் அதிக விலை கொண்டதாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Best 28 Days Plan From BSNL Vi Jio Airtel That Now You Can Recharge At Budget Price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X