Home
News

சுவரில் ஓட்டையிட வேண்டாம்.. போர்ட்டபிள் AC வந்தாச்சு.. என்ன விலை? வாடகை வீட்டில் கூட இனி AC யூஸ் செய்யலாம்..

இந்தியாவில் இப்போது போர்ட்டபிள் ஏசி (Portable AC) சாதனங்களின் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது. விண்டோ ஏசி (Window AC) மற்றும் ஸ்ப்ளிட் ஏசி (Split AC) போல இந்த ஏசி மாடல்களும் இப்போது அதிகமாக விற்பனையாகி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், போர்ட்டபிள் ஏசி சாதனங்களை இன்ஸ்டால் செய்ய யாருடைய உதவியும் நமக்கு தேவையில்லை. அதேபோல், இவற்றை பயன்படுத்த சுவரில் துளையிட வேண்டிய அவசியமும்மில்லை என்பதனால், இது இப்போது பிரபலமடைந்து வருகிறது. தற்போது சந்தையில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் போர்ட்டபிள் ஏசி (Best Portable AC's) மற்றும் அதன் விலை விபரங்கள் இதோ.

அக்னி நட்சத்திர வெயில் காலம் துவங்கும் முன்பே, இந்தியாவில் இப்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பல இடங்களில் மக்கள் வெயிலினால் பாதிப்படைந்து வருகிறார்கள். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஏசி (AC), ஏர் கூலர் (Air cooler) போன்ற சாதனங்களை மக்கள் வாங்க துவங்கியுள்ளனர். இதுவரை இல்லதா அளவில் 2025 ஆம் ஆண்டில் மக்கள் அதிகமாக கூலிங் சாதனங்களை வாங்க முயல்வதாக கூறப்படுகிறது.

சுவரில் ஓட்டையிட வேண்டாம்.. போர்ட்டபிள் AC வந்தாச்சு.. என்ன விலை?

சுவரில் ஓட்டையிட வேண்டாம்.. போர்ட்டபிள் AC வந்தாச்சு:

இந்த வருடம் போர்ட்டபிள் ஏசி சாதனங்களின் விற்பனை கூட அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. போர்ட்டபிள் ஏசியா? அப்படி என்றால் என்ன என்று சிலர் கேள்வி எழுப்பலாம். விண்டோ ஏசி மற்றும் ஸ்ப்ளிட் ஏசி போல, இப்போது சந்தையில் டிரெண்டிங்கில் இருக்கும் சாதனம் தான் போர்ட்டபிள் ஏசி சாதனமாகும். இதன் பெயர் குறிப்பிடுவது போல், இந்த ஏசியை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். இதற்கு இன்ஸ்டாலேஷன் தேவையில்லை. அதேபோல், சுவரில் துளையிடவும் அவசியமில்லை.

இந்த காரணங்களினால், இந்தியாவில் இப்போது போர்ட்டபிள் ஏசி சாதனங்களின் டிமாண்ட் அதிகரித்துள்ளது. சுவரில் துளையிட வேண்டாம் என்பதனாலும், வழக்கமான ஏசி மாடல்களை இன்ஸ்டால் செய்வது போல, இதற்கென்று எந்தவொரு இன்ஸ்டாலேஷன் முறையும் தேவையில்லை என்பதனாலும் இவை பிரபலமடைந்துள்ளன. குறிப்பாக வாடகை வீட்டில் உள்ளவர்கள், ஹாஸ்டலில் இருப்பவர்கள், சிறிய அறைகளில் வசிப்பவர்கள் இந்த சாதனத்தை இப்போது அதிகமாக வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

பெஸ்ட் டாப் 3 போர்ட்டபிள் ஏசி மாடலகள்:

இவை வெறும் போர்ட்டபிள் ஏசி சாதனமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இவை ஏர் பியூரிஃபையர் ஆகவும், டிஹுமிடிப்பையர் கருவியாகவும் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போர்ட்டபிள் ஏசி சாதனம் மல்டி கூலிங் மோட் அம்சத்துடன் வருகிறது. இவை இப்போது 1 டன் மாடலுடம் வருகிறது. இப்போது இந்தியாவில் சிறந்த போர்ட்டபிள் ஏசி மாடலாக பார்க்கப்படும் டாப் 3 மாடல்களை உங்களுக்காக இங்கு தொகுத்துள்ளோம்.

1. ப்ளூ ஸ்டார் 1 டன் போர்ட்டபிள் ஏசி (Blue Star 1 Ton Portable AC):
உங்கள் அறைக்குள் ஒரு சிறிய இடம் இருந்தால் போதும், இந்த ப்ளூ ஸ்டார் 1 டன் போர்ட்டபிள் ஏசி கட்சிதமாக பொருந்திவிடும். இது ஸ்லிம் மற்றும் ஸ்டைல் இரண்டையும் இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு போர்ட்டபிள் ஏசி மாடலாக திகழ்கிறது. இது ஆண்டி ஃப்ரீஸ் தெர்மோஸ்டாட் (anti-freeze thermostat), கோல்டன் ஏவப்போராட் பின்ஸ் (golden evaporator fins) போன்ற அம்சங்களுடன் இது ரூ. 34,990 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.

2. க்ரூயிஸ் 1 டன் போர்ட்டபிள் ஏசி (Cruise 1 Ton Portable AC):
ரூ. 30,000 விலைக்குள் ஒரு பெஸ்டான போர்ட்டபிள் ஏசி மாடலை நீங்கள் வாங்க விரும்பினால், இந்த Cruise 1 Ton Portable AC சிறந்ததாகும். இது 4-இன்-1 மல்டி ஃபங்க்ஷன் சிஸ்டம் (4-in-1 multifunction system), டிஹுமிடிஃபையர (dehumidifier), ஏர் பியூரிஃபையர் (air purifier) மற்றும் கூலிங் பேன் (cooling fan) போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 29,990 மட்டுமே.

3. குரோமா 1.5 டன் போர்ட்டபிள் ஏசி (Croma 1.5 Ton Portable AC):
இதுவொரு 1.5 டன் கூலிங் கெபாசிட்டி கொண்ட ஒரு போர்ட்டபிள் ஏசி சாதனமாகும். மீடியம் சைஸ் அறை முதல் ஒரு அளவிற்கு பெரிய பரப்பளவை கொண்ட அறைகளுக்கு இந்த ஏசி ஏற்றது. இது காப்பர் கன்டென்சர் உடன் R-410 கேஸ் உடன் வருகிறது. இது சிறந்த கூலிங் அம்சத்தை கொண்டுள்ளது. இது இந்தியாவில் தற்போது ரூ. 42,990 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.

ஒவ்வொரு போர்ட்டபிள் ஏசி சாதனத்துடனும் அவுட்லேட் பைப் வழங்கப்பட்டிருக்கும். இதை உங்கள் ஜன்னல் வழியாக வெளியில் செல்லும்படி நிறுவ வேண்டும். இது சூடான காற்றை வெளியில் அனுப்புகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best 1 Ton and 1.5 Ton Portable AC Models From Blue Star Cruise and Croma Company Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X