பெர்முடா முக்கோணம் : அறிவியலும், தொழில்நுட்பமும் செயல் இழப்பது ஏன்..?

|

பெர்முடா முக்கோணம் - 100 ஆண்டுகளில் சுமார் 1000 உயிர்களை பலி வாங்கியுள்ளது. அது மட்டுமின்றி, ஓர் ஆண்டுக்கு சாராசரியாக 4 விமானங்கள் மற்றும் 20 படகுகள் அங்கு காணாமல் போகின்றன. ஏன், எப்படி என்று இதுவரை யாருக்கும் தெரியாது..!

பல லட்சம் கிலோ மீட்டர்கள் தாண்டி வான்வெளிகளையும், வேற்று கிரகங்களையும் அலசி பார்க்க முடிந்த நம் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அறிவியலால், பூமியில் சுமார் 440,000 மைல்கள் பறந்து விரிந்து கிடக்கும் கடலான பெர்முடா முக்கோணத்தை பற்றிய சரியான தெளிவை பெற முடியவில்லையே ஏன்..?

இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 6டி.!

அதிநவீன தொழில்நுட்பத்திற்கும், அறிவியலுக்கும் சவால் விடும் பெர்முடா முக்கோணத்தில் அப்படி என்னதான் ஒளிந்திருக்கிறது..? எதையும் அடிவேர் வரை ஆராய்ந்து பார்க்காமல் விடாத அறிவியலும், அதிநவீனமும் இதுவரை பெர்முடா முக்கோணத்தை பற்றி என்னதான் கண்டுப்பிடித்துள்ளது..?!

அமைவிடம் :

பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) - வடக்கு அட்லான்டிக் பெருங்கடலில், மேற்கு பகுதியில் உள்ள மர்மமான கடல் பரப்பாகும்.

மூன்று பிரதேசங்கள் :

பெர்முடாவில் இருந்து மியாமி, பின் ஃப்ளோரிடாவில் இருந்து புவேர்ட்டோ ரிக்கோவின் சாண் ஜுவன் ஆகிய பிரதேசங்களை இணைத்தால் உண்டாகும் பகுதி தான் பெர்முடா முக்கோணம்..!

தகவல்கள் :

1945-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி அன்று பெர்முடா முக்கோணதிற்கு மேல் பறந்த அமெரிக்காவின் 5 போர் விமானங்கள் மாயமான பின் தான், பெர்முடா முக்கோணம் பற்றிய தகவல்கள் உலகம் முழுக்க பரவியது என்று பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர்.

பயணக்குறிப்பு :

ஆனால், கொலம்பஸ் (Columbus) மேற்கொண்ட கடல் பயணக்குறிப்பில் பெர்முடா முக்கோணம் இடம் பெறுகிறது.

கொலம்பஸின் காம்பஸ் :

அப்படியாக சர்கஸ்ஸோ (Sargasso Sea) கடலில் பயணிக்கும் போது கொலம்பஸின் பயணக் குறிப்பின்படி, அக்டோபர் 8, 1492-ஆம் ஆண்டு தனது காம்பஸ் மிகவும் விசித்திரமான அளவீடுகளை காட்டியது என்று எழுதியுள்ளார்.

அன்று தொடங்கி இன்றுவரை :

காம்பஸ் வேலை செய்யாது, காந்த வடக்கு (Magnetic North) திசையை காட்டாது என அன்று தொடங்கி இன்றுவரை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள பெர்முடா முக்கோண கோட்பாடுகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் காண்போம்.

கோட்பாடு 01 - இரகசிய இராணுவ சோதனை :

ஒரு கோட்பாடின்படி பெர்முடா முக்கோண கடலுக்கு அடியில் நீர்மூழ்கி மற்றும் ஆயுதங்களை பரிசோதிக்கும் மையம் என்று கூறப்படும் அட்லாண்டிக் கடலடி சோதனை மற்றும் மதிப்பீட்டு மையம் (Atlantic Undersea Test and Evaluation Center - AUTEC) ஒன்று உள்ளதாம்.

வேற்றுகிரக நாகரிகம் :

ஆனால் அது பரிசோதனை கூடம் அல்ல, அது வேற்றுகிரக நாகரீகங்கள் மற்றும் வேற்றுகிரக தொழில்நுட்ப பரிசோதனைகளை நடத்துவதாக கோட்பாடு தெரிவிக்கிறது. ஆகையால் தான், அங்கு விமானங்கள் மற்றும் கப்பல்கள் காணாமல் போகின்றது என்கிறது அந்த கோட்பாடு.

கோட்பாடு 02 - குழப்பும் காம்பஸ் :

உலகில் மொத்தம் இரண்டு இடங்களில் மட்டும் தான் காந்த காம்பஸ்கள் (Magnetic Compass) காந்த வடக்கு (Magnetic North) திசையை காட்டாமல் நிஜமான புவியியல் படி செயல்படும் அதில் பெர்முடா முக்கோணமும் ஒன்றாகும்.

திசை :

ஆகையால் மாலுமிகள் எளிதாக வழி தவறக்கூடும். மேலும் தவறான திசையில் செல்லும் கப்பல்கள், கடல் பாறைகளில் மோதி மூழ்க கூடும் என்கிறது இந்த கோட்பாடு.

கோட்பாடு 03 - வால்மீன் :

சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன் பெர்முடா முக்கோண கடல் பகுதியில் வால்மீன் (Comet) ஒன்று விழுந்தகாக கூறுகிறது ஒரு கோட்பாடு.

மின்காந்த பண்புகள் :

அந்த வால்மீனில் இருந்து வெளிப்படும் அசாதாரண மின்காந்த பண்புகள்தான் (unusual electromagnetic properties) விமானம் மற்றும் படகுகள் காணாமல் போவதற்க்கு காரணம் என்று நம்புகிறது அந்த கோட்பாடு.

கோட்பாடு 04 - ஏலியன் யூஎஃப்ஓ (UFO) :

மற்றொரு கோட்பாடனது, பெர்முடா முக்கோண கடலுக்கு அடியில் ஏலியன்களின் பறக்கும் தட்டு எனப்படும் யூஎஃப்ஓ ஒன்று இருப்பதாக கூறுகிறது.

வாயில் :

அது வேற்றுகிரகத்தின் வாயிலாக இருக்கலாம் அல்லது அது நமது பூமி கிரகத்தில் உள்ள தொழில் நுட்பங்களை ஆராய்ந்து கொண்டிருக்கலாம் என்கிறது அந்த கோட்பாடு.

கோட்பாடு 05 - மீத்தேன் ஹைட்ரேட் :

பெர்முடா முக்கோண கடலுக்கு அடியில் கற்பனைக்கு எட்டாத அளவில் மிகப்பெரிய மீத்தேன் ஹைட்ரேட் குமிழ்கள் உருவாக்கின்றனவாம்.

உறிஞ்சிக் கொள்கின்றன :

அவைகள்தான் கடலில் மிதக்கும் கப்பல்களை உள்ளே உறிஞ்சிக் கொள்கின்றன என்றும் சில சமயங்களில் கடலை விட்டு வெளியேறும் மீத்தேன் வாயு வானத்தில் பறக்கும் விமானங்களின் என்ஜீன்களை சூடாக்கி வெடிப்பை நிகழ்த்தும் என்கிறது ஒரு கோட்பாடு.

கோட்பாடு 06 - மனித காரணிகள் :

மற்றொரு கோட்பாடனது பெர்முடா முக்கோண கடல் பகுதியில் மக்கள் பலியாக காரணம் மனித காரணிகள் (Human Factors) தான் என்கிறது.

சாத்தியம் :

அதாவது, தீடீர் என மாறும் வானிலைகள், ஒரே மாதிரி தோன்று ஆயிரக்கணக்கான இரட்டை தீவுகள் கொண்ட பகுதியில் தொலைந்து போவதும், பின் கண்டுப்பிடிக்கப்படாமல் இறந்து போவதும் சாத்தியமே என்கிறது அந்த கோட்பாடு.

கோட்பாடு 07 - வானிலை நிலமைகள் :

ஒரு கோட்பாடு பெர்முடா முக்கோண மர்மங்களுக்கு எல்லாம் காரணம் அதன் மோசமான வானிலைதான் என்கிறது, மேலும் அங்கு ஏற்படும் கடல் புயல் மற்றும் சூறாவளிகள் மிகவும் மோசமான்வைகள் என்கிறது அந்த கோட்பாடு.

வளைகுடா நீரோடை :

மேலும் பெர்முடா முக்கோண கடல் பகுதியில் வேகமாக ஓடும் வளைகுடா நீரோடையானது (The fast flowing Gulf Stream) எந்த விதமான கடல் போக்குவரத்தையும் பாதிக்க கூடியது என்கிறது அந்த கோட்பாடு.

புகைப்படங்கள் : கூகுள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருத்தின் கீழ் பெர்முடா முக்கோணம். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more