யப்பா சாமி.. இவ்ளோ பெருசா.. 100 இல்ல.. 120 இல்ல.. 180 இன்ச் டிஸ்பிளே.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
ஹோம் தியேட்டருக்கும் மேலான அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் பென்கியூ டபுள்யூ850 (BenQ W5850) மற்றும் பென்கியூ டபுள்யூ100ஐ (BenQ W4100i) ப்ரொஜெக்டர்கள் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கின்றன. 4K அல்ட்ரா எச்டி வீடியோ, டால்பி அட்மோஸ் ஆடியோ, ஆண்ட்ராய்டு ஓஎஸ், சினிமாடிக் கலர், மோட்டரைஸ்டு ஜூம் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் மிரளவிடுகின்றன. இந்த பென்கியூ மாடல்களின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
தியேட்டரிக் எஃபெக்ட்களில் வீட்டிலேயே மூவிக்கள், சீரிஸ்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை இங்கு பலருக்கு இருக்கிறது. ஆனால், உண்மையிலேயே அந்த எஃபெக்ட்களில் பார்க்க வேண்டுமானால், அல்ட்ரா பிரீமியம் டிவிகள் அல்லது ப்ரொஜெக்டர்களை வாங்க மட்டுமே வேண்டி இருக்கும். இதில் அதிக ஸ்கிரீன் சைஸ்கள் ப்ரொஜெக்டர்களில் மட்டுமே கிடைக்கின்றன. இதில் பென்கியூ டாப்பில் இருக்கிறது.

பென்கியூ டபுள்யூ850 அம்சங்கள் (BenQ W5850 Specifications): இந்த பென்கியூ மாடலில் 180 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். இதில் 4K அல்ட்ரா எச்டி (4K UHD) ரெசொலூஷன், 2600 ஏஎன்எஸ்ஐ லூமென்ஸ் (ANSI Lumens) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், லேசர் லைட் சோர்ஜ் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் டிஸ்பிளே அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.
மேலும், டிசிஐ பி3 கலர் காமட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), எச்எல்ஜி (HLG), ஐஎப்எஸ் நைட் (ISF Night) மற்றும் ஐஎப்எஸ் டே (ISF Day) போன்ற பிக்சர் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, நைட் மட்டுமல்லாமல், பகலிலும் பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். இதுபோக பிரைட் சினிமா (Bright Cinema), ஃபிலிம்மேக்கர் மோட் (FILMMAKER MODE), ஃபிலிம்மேக்கர் மோட் எச்டிஆர் (FILMMAKER MODE HDR) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது.
கலர் டெம்ப்ரேச்சர் டியூனிங் (Color Temperature Tuning), எச்டிஆர் ப்ரோ டெக்னாலஜி (HDR PRO Technology) கிடைக்கிறது. இதன் மூலம் கலர் அக்கியூரசி மற்றும் பிக்சல் டென்சிட்டி பட்டையை கிளப்பும்படி இருக்கும். குளோபல் கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Global Contrast Enhancer), லோக்கல் கான்ட்ரான்ஸ் என்ஹான்சர் (Local Contrast Enhancer) பீச்சர்கள் மூலம் டார்க் மற்றும் பிரைட் டீட்டெய்களை ஆட்டோ கரெக்சன் செய்து கொள்ளலாம்.
இந்த வீடியோ பீச்சர்களுக்கு ஏற்ப 7.1 சேனல் சப்போர்ட் கொண்ட ஈஏஆர்சி (eARC) ஆடியோ கிடைக்கிறது. இதுபோக டால்பி அட்மோஸ் ஆடியோ (Dolby Atmos Audio) கிடைக்கிறது. ஆனால், இன்-பில்ட் ஸ்பீக்கர்கள் கிடையாது. ஆடியோ சிஸ்டம் தேவைப்படுகிறது. கனெக்டிவிட்டி பீச்சர்களை பார்க்கையில், எச்டிஎம்ஐ, எல்ஏஎன், யுஎஸ்பி, 3டி சிங்க் அவுட், டிபி-9 பின் போன்றவை வருகின்றன. 30dB நாய்ஸ் கேன்சலேஷன் சப்போர்ட் கிடைக்கிறது.
பென்கியூ டபுள்யூ100ஐ அம்சங்கள் (BenQ W4100i Specifications): இந்த மாடலிலும் பெரும்பாலான பீச்சரகள் முந்தைய மாடலை போலவே இருக்கின்றன. ஆகவே, 180 இன்ச் ஸ்கிரீன், 4K அல்ட்ரா எச்டி, 3200 லூமென்ஸ், டிசிஐ பி3 போன்றவை கிடைக்கின்றன. இதில் ஆண்ட்ராய்டு டிவி 11 ஓஎஸ் (Android TV 11 OS) வருகிறது. குரோம் காஸ்ட், ஏர்பிளே, ப்ளூடூத் 5.0, வை-பை 6 போன்ற பீச்சர்கள் இடம் பெற்றுள்ளன.
ஏஐ சினிமா மோட் (AI Cinema Mode) கிடைக்கிறது. இப்போது, விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம். பென்கியூ டபுள்யூ850 மாடலின் விலை ரூ.7,00,000ஆக இருக்கிறது. பென்கியூ டபுள்யூ100ஐ மாடலின் விலை ரூ.4,00,000ஆக இருக்கிறது. ஹோம் ஏவிஎஸ்ஐ ரீடெயில் ஸ்டோர்களில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஈ-காமர்ஸ் தளங்களில் விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








