Home
News

இனி Smart TV எதுக்கு? இந்த 4K ப்ரொஜெக்டர் போதும்! உங்க வீடு சினிமா தியேட்டரா மாறிடும்! என்ன மாடல்? என்ன விலை?

என்னால் நிச்சயமாக கூற முடியும், நம்மில் பலருக்கும் ஒரு பொதுவான ஆசை உள்ளது - நம்முடைய வீட்டுக்கு உள்ளேயே ஒரு மினி சினிமா தியேட்டரை (Mini Cinema Theatre) செட்டப் செய்ய வேண்டும் என்கிற ஆசை, கனவு நம்மில் பலருக்கும் உள்ளது.

குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் நாம் சந்தித்த சூழ்நிலைகள் மற்றும் பல எண்ணிக்கையிலான ஓடிடி தளங்களின் (OTT Platforms) வருகையானது பெரிய ஸ்க்ரீன் சைஸ் கொண்ட ஒரு நல்ல 4கே ஸ்மார்ட் டிவியை வாங்க வேண்டும் என்கிற எண்ணத்தை நம்முள் ஆழமாக விதைத்து விட்டன.

இனி Smart TV எதுக்கு? இந்த 4K ப்ரொஜெக்டர் போதும்!

அப்படியான எண்ணம், ஆசை, கனவு உங்களுக்குள்ளும் இருந்தால்.. பென்க்யூ (BenQ) நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த 4கே ஆர்ஜிபி லேசர் டிவி ப்ரொஜெக்டர் (4K RGB Laser TV Projector) ஆனது முழுக்க முழுக்க உங்களுக்கானது தான். இந்த ப்ரொஜெக்டரில் அப்படி என்ன ஸ்பெஷல்? இதன் விலை என்ன? இதோ விவரங்கள்:

அட்வான்ஸ்டு டிஸ்பிளே டெக்னாலஜியில் (Advanced display technology ) முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பென்க்யூ, வீட்டுக்கு உள்ளேயே சினிமா தியேட்டரை கொண்டு வர விரும்பும் பயனர்களை / வாடிக்கையாளர்களை மனதிற்கொண்டு வி5000ஐ (V5000i) என்கிற புதிய 4கே ஆர்ஜிபி லேசர் டிவி ப்ரொஜெக்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இனி Smart TV எதுக்கு? இந்த 4K ப்ரொஜெக்டர் போதும்!

மேலோட்டமாக பார்த்தால் இதுவொரு புதுமையான தயாரிப்பாக மட்டுமே தெரியும். ஆனால் உண்மையில், மிகவும் துல்லியமான வண்ணங்கள் மற்றும் விதிவிலக்கான ஆடியோவின் மூலம், இந்திய சந்தையில் வாங்க கிடைக்கும் பெரும்பாலான பிரீமியம் / பிளாக்ஷிப் ஸ்மார்ட் டிவிகளை இது தூக்கி சாப்பிட போகிறது என்றே கூறலாம்.

பொழுதுபோக்கு மற்றும் சினிமா ரசிகர்களை வேறொரு உலகிற்கு கொண்டு செல்லும் அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வி5000ஐ ப்ரொஜெக்டர் ஆனது ஆர்ஜிபி லேசர் டிவி தொழில்நுட்பத்துடன் (RGB Laser TV Technology) வருகிறது. இது ஒரு கலர் கன்சிஸ்டென்ட் ஹோம் சினிமா எக்ஸ்பீரியன்ஸை (Color- consistent home cinema experience) உறுதி செய்கிறது.

இனி Smart TV எதுக்கு? இந்த 4K ப்ரொஜெக்டர் போதும்!

மேலும் இந்த ப்ரொஜெக்டரில் உள்ள சினிமாடிக் கலர் தொழில்நுட்பமும் (CinematicColor Technology) உள்ளது. இது 95% பிடி 2020 கலர் ஸ்பெக்ட்ரம் மற்றும் 98% டிசிஐ-பி3 ஆகியவற்றை உள்ளடக்கியது. இது பார்வையாளர்களை உயிரோட்டமான மற்றும் தெளிவான வண்ணங்களில் மூழ்கடிக்கும் காட்சிகளை வழங்குகிறது.

வி5000ஐ ப்ரொஜெக்டரில் வியூயிங் எக்ஸ்பீரியன்ஸ் மட்டுமே "உச்சமாக" இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த ப்ரொஜெக்டர் உடன் 40W ஸ்பீக்கர் சிஸ்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில் டூயல் 5W ட்வீட்டர்கள் மற்றும் டூயல் 15W வூஃபர்களும் உள்ளன. இந்த ஹை-ஃபை ஆடியோ சிஸ்டம் (Hi-Fi Audio System) ஆனது சிறந்த ஒலி தரத்திற்கு உத்தரவாதம் அளிப்பது மட்டுமல்லாமல், ஆழமான மற்றும் சக்திவாய்ந்த பேஸ்ஸையும் வழங்குகிறது.

2500 ஏஎன்சிஐ லுமன்ஸ் ஆர்ஜிபி லேசர் ப்ரைட்னஸ் (2500 ANSI Lumens of RGB Laser brightness) உடன் வரும் வி5000ஐ ப்ரொஜெக்டர் ஆனது நம்ப முடியாத அளவிற்கு மிகவும் தெளிவான 4கே அல்ட்ரா எச்டி ரெசல்யூஷனை (4K Ultra HD Resolution) வழங்குகிறது. இதன் விளைவாக தெளிவான மற்றும் கூர்மையான பிக்சர் குவாலிட்டி கிடைக்கிறது.

வி5000ஐ ப்ரொஜெக்டர் ஒரு விரிவான பொழுதுபோக்கு மையமாகவும் செயல்படும். கூகுளால் சான்றளிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு டிவியுடன் (Android TV), நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான அணுகல்களையும் இது வழங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் புரொஜெக்டரில் வாய்ஸ் அசிஸ்டென்ட்ஸ் (Voice assistants), மிரர் காஸ்டிங் (Mirror casting) மற்றும் வைஃபை மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் உள்ளன.

இனி Smart TV எதுக்கு? இந்த 4K ப்ரொஜெக்டர் போதும்!

விS000ஐ ப்ரொஜெக்டரில் உள்ள இன்னொரு தனித்துவமான விஷயம் என்னவென்றால்.. இது மிகவும் எளிமையான இன்ஸ்ட்டாலேஷனை (Simple Installation) கொண்டுள்ளது. அதாவது இதை நீங்களே இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். இது ஆட்டோ ஸ்கிரீன் ஃபிட், மேனுவல் ஸ்கிரீன் ஃபிட் மற்றும் சீலிங் மவுண்டிங் போன்ற விருப்பங்களுடன் வருவதால் இதை சிரமமின்றி இன்ஸ்டால் செய்ய முடியும்.

விலை மற்றும் விற்பனையை பொறுத்தவரை, பென்க்யூ 4கே ஆர்ஜிபி லேசர் டிவி ப்ரொஜெக்டர் வி5000ஐ மாடலின் இந்திய விலை நிர்ணயம் ரூ.5,49,000 ஆகும். இது பென்க்யூ நிறுவனாய்டின் அனைத்து முன்னணி ரீடெய்ல் பார்ட்னர்கள் மற்றும் பென்க்யூ பிராண்ட்டின் ஆன்லைன் ஸ்டோர் (BenQ Brand Online Store) வழியாக வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BenQ Launched Its New 4K RGB Laser TV Projector V5000i in India Check Price Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X