கண்பாதுகாப்பு அம்சத்துடன் வெளியான பென்க்யூ மானிட்டர்கள்: விலை மற்றும் அம்சங்கள்!

|

கண் பாதுகாப்பு அம்சங்களுடன் பென்க்யூ மானிட்டர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பென்க்யூ மானிட்டர்களானது பென்க்யூ EW3280U மற்றும் பென்க்யூ EW2780Q என்ற இரண்டு மானிட்டர்கள் கிடைக்கிறது.

EW3280U மற்றும் EW2780Q மானிட்டர்கள்

EW3280U மற்றும் EW2780Q மானிட்டர்கள்

கண் பாதுகாப்பு அம்சங்களுடன் பென்க்யூ மானிட்டர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மானிட்டர்கள் EW3280U மற்றும் EW2780Q எண்களுடன் வந்துள்ளன. இது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வண்ண பிரகாசத்தை சரிசெய்யும் திறன் கொண்ட பிரகாசம் நுண்ணறிவு பிளஸ் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. BenQ புதிய மானிட்டர்களின் எச்டிஆர் தொழில்நுட்பம் மற்றும் ட்ரெவோலோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

BenQ மானிட்டர்கள் விலை

BenQ மானிட்டர்கள் விலை

BenQ EW3280U மற்றும் BenQ EW2780Q மானிட்டர்களின் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், BenQ EW3280U மானிட்டர் இந்தியாவில் ரூ.69,990 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. BenQ EW2780Q மானிட்டர் ரூ.29,999 என்ற விலையில் கிடைக்கும். இந்த மானிட்டர்கள் பென்க்யூ கூட்டாளர் சில்லறை விற்பனை நிலையங்களிக் கிடைக்கும். அதேபோல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கிடைக்கும்.

BenQ EW3280U மானிட்டர் அம்சங்கள்

BenQ EW3280U மானிட்டர் அம்சங்கள்

BenQ EW3280U மானிட்டர் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 3.2 அங்குல 4கே அல்ட்ரா எச்டி ஐபிஎஸ் பேனலுடன் வருகிறது. இதில் உகந்த காட்சிகளுக்கு எச்டிஆர்ஐ மற்றும் வெசா டிஸ்ப்ளே எச்டிஆர்400 அம்சத்தை ஆதரிக்கிறது. எச்டிஆர்ஐ தொழில்நுட்பம் பிரகாசம் இதில் இருக்கிறது. இதன் டிஸ்ப்ளே 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது. இதில் 2 பில்ட் இன் 2 வாட்ஸ் பென்க்யூ ட்ரெவோலோ ஸ்டீபியோ ஸ்பீக்கர்கள் 5வாட்ஸ் வூஃபருடன் பொருத்தப்பட்டுள்ளது.

கண்கள் பாதுகாப்பு அம்சம்

கண்கள் பாதுகாப்பு அம்சம்

BenQ EW3280U மானிட்டரில் எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் யூஎஸ்பி டைப்சி போர்ட் உள்ளது. இதில் பிராகாச நுண்ணறிவு ப்ளஸ், லோ ப்ளூ லைட், பிளிக்கர் அற்ற தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. இதில் பல கண்கள் பாதுகாப்பு அம்சம் உள்ளது. பேப்பர் பேக் மற்றும் இ-புத்தகங்கள் படிக்க காட்சி கூர்மை, பிரகாசம் மற்றும் வண்ண வெப்பநிலை வரம்பு வசதிகள் பென்க்யூ மானிட்டர்களில் உள்ளது.

BenQ EW2780Q மானிட்டரின் அம்சங்கள்

BenQ EW2780Q மானிட்டரின் அம்சங்கள்

BenQ EW2780Q மானிட்டரின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது குறைந்த விலையில் கிடைக்கிறது. இதில் 27 அங்குல 2கே அல்ட்ரா எச்டி க்யூ டிஸ்ப்ளே இருக்கிறது. இதில் எச்டிஆர்ஐ ஆதரவு இருக்கிறது. இதில் இரண்டு 5 வாட்ஸ் ட்ரெவோலோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளது. இதிலும் குறைந்த ப்ளூ ஒளி மற்றும் இ-பேப்பர் ஆதரவு போன்ற கண்கள் பாதுகாப்பு அம்சம் இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BenQ EW3280U, EW2780Q Monitors Launched in India With Eyecare Features

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X