அடுத்த அட்டகாசமான எலக்ட்ரானிக் சாதனங்களை வழங்கும் பென்க்!

Posted By: Staff
அடுத்த அட்டகாசமான எலக்ட்ரானிக் சாதனங்களை வழங்கும் பென்க்!

நிறைய மொபைல் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை வழங்கிய பென்க் நிறுவனம் எல்-7000 வரிசையில் 2 புதிய லெட் தொழில் நுட்பம் கொண்ட டிவியினை அறிமுகம் செய்வதாக அறிவித்திருக்கிறது. இந்த மின்னணு சாதனம் நிச்சயம் கவர்ச்சிகரமான தோற்றத்தினை கொண்டதாக இருக்கும் என்று கூறலாம்.

நமது நாட்டில் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் சிறந்த ஹோம் என்டர்டெயின்மெண்ட் மின்னணு சாதனங்களின் விற்பனையை அதிகப்படுத்துவதாக பென்க் இந்தியாவின் தலைமை மற்றும் பொது மேலாளரான ராஜீவ் சிங் தெரிவித்திருக்கிறார். இப்படி பொழுதுபோக்கு எலக்ட்ரானிக் சாதனத்தினை அதிகப்படுத்துவது பென்க் நிறுவனத்தின் விற்பனையை உயர்த்த சிறப்பான திட்டமாக இருக்கும் என்றும் கூறலாம்.

பென்க் நிறுவனம் வழங்கும் இந்த புதிய லெட் எல்-7000 வரிசை டிவி 1366 X 768 திரை துல்லியத்தினை வழங்குவதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 8 பிட்ஸ், டைனமிக் கான்ட்ராஸ்ட் ரேஷியோ, ஸ்பீக்கர் 8டபிள்யூ X 2, எச்டிஎம்ஐ போன்ற தொழில் நுட்ப வசதிகளுக்கும் சப்போர்ட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய எலக்ட்ரானிக் சாதனத்தின் தொழில் நுட்ப வசதி பற்றிய விவரங்கள் இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை. பென்க் வழங்கவிருக்கும் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட டிவியின் தொழில் நுட்பம் மற்றும் விலை பற்றிய முழு தகவல்களும் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும். ஆனால் பென்க் எல்-7000 வரிசை டிவி

ரூ. 25,000  ஆரம்ப விலையினை கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot