விவேக்கின் லாட்டரி சீட் காமெடியும்- ரூ.16000 பறிகொடுத்த பெண்ணும்.!
பெங்களூர் மடிவாலா அருகே உள்ள பிடிஎம் பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் பெஸ்காம் என்ற அரசின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் கடந்த மாத்திற்கான மின் கட்டணம் ரூ.317 செலுத்தியுள்ளார்.
இன்றை காலகட்டத்தில் குற்றங்கள் அதிகரித்து கொண்டே தான் நடந்து வருகிறது. காவல்துறையும் பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்தாலும், குற்றங்கள் செய்வோரை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் சிறு குழந்தைகள் முதலே சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வருவது ஒரு வகையில் வருத்தமளிக்க கூடிய விசியமே. சிறு பிள்ளைகளும் குற்றங்களில் ஈடுபடுவதற்கு பெற்றோர்களும் காரணமாகி விடுகின்றனர்.

ஒருவகையில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்ற சினிமா பட வசனங்களும் இருந்தாலும், திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜியார் கூறியதை மறுக்கவும் முடியாது மாற்றவும் முடியாது.

சைபர் குற்றங்கள்:
தற்போது நடக்கும் குற்றங்களில் சைபர் குற்றங்கள் தான் அதிகம் நடக்கிறது. அதுவும் ஆன்லைனில் பணம் பரிவர்தனை மோசடி, அடுத்தவர்களின் ஏஎடிஎம்கார்டுகளை பயன்படுத்தி பணத்தை கையாடல் செய்வது, நூதனமாக ஏதாவது ஒரு வங்கயில் நிறுவனத்தில் பேசுவதாக கூறி பணம் மற்றும் அக்கவுண்ட் விபரங்களை கேட்டறிந்து பணத்தை அபேஸ் செய்வது போன்ற செயல்கள் தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

பெங்களூரை சேர்ந்த பெண்:
பெங்களூர் மடிவாலா அருகே உள்ள பிடிஎம் பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் பெஸ்காம் என்ற அரசின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் கடந்த மாத்திற்கான மின் கட்டணம் ரூ.317 செலுத்தியுள்ளார். ஏற்கெனவே கடந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை செலுத்திட்ட நிலையில், அதை மறந்து செலுத்தியை பின் தெரியவந்தது.

வாடிக்கையாளர் மையத்தில் புகார்:
அந்த பெண் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு புகார் கூறினார். பிறகு 4 நாள் கழித்து ஜூலை 24ம் தேதி பெஸ்காம் வாடிக்கையாளர் சேவை பிரநிதி என்று தன்னை அறிமுகப்படுத்தி போனில் தொடர்பு கொண்டுள்ளார். மேலும் அந்த பணத்தை திருப்பி அளிப்பதாக கூறி வங்கி விவரம் மற்றும் ஏடிஎம்கார்டு விபரங்களையும் பெற்றுள்ளார்.

ரூ.16 ஆயிரம் அபேஸ்:
வாடிக்கையாளர் மையத்தில் புகார் அளித்து விட்டதால், ரூ.317 தனது கணக்கில் வரவு வைக்கப்படும் என்று ஆவலோடு இருந்தார். அந்த பெண். ஒரு சில நாட்கள் கழித்து தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.16 ஆயிரம் எடுத்ததாக போனுக்கு எஸ்எம்எஸ் வந்தது. மேலும், புகார் கூறியும் அந்த பணம் திருப்பி அளிக்கப்படவில்லை. தான் மோசடி செய்யப்பட்டதாக உணர்ந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்தார்.

நடிகர் விவேக்கின் லாட்டரி சீட் காமெடி:
இந்த நடந்த சம்பவத்தை பார்க்கும் போது, நடிகர் விவேக் நடித்த காமெடி ஞாபகம் வரும். அதில் நடிகர் விவேக் தெருவில் நிற்கும் போது, போண்டாமணி ரூ.300 பரிசு விழுந்த லாட்டரி சீட்டு கதவில் ஒட்டியிருப்பதால், அதை கழற்றி கொண்டு பரிசு பெற குடும்பத்தினருடன் செல்வார். அதன் பிறகு, பின்னால் வந்த திருடர்கள் ஒரு வீட்டில் தகவே இல்லை. ஆனால் வீட்டில் நகை, பணம் உட்பட ரூ.30 ஆயிரம் கிடைத்தது என கூறிக் கொண்டு செல்வார்கள். அந்த காமெடி போல் அனைத்தும் பாதுகாப்பு குறியீடுகளை (கதவு ) அடுத்தவர்களிடம் சொன்னால் இதுபோன்று நடக்கத்தான் செய்யும்.


Click it and Unblock the Notifications