1.2 கோடி சம்பளத்தில் கூகுளில் வேலை: அசத்தும் ஐஐஐடி பெங்களூர் மாணவர்.!

|

பெங்களூர் இன்டர்நேசனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேசன் டெக்னாலஜியில் படிக்கும் மாணவர், பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் பிரெஸ்டிஜியஸ் ரெசிடன்ஸி ப்ரோக்ராம் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ1.2கோடி சம்பளத்திற்கு தேர்வாகியுள்ளார். இந்த ஆண்டு இத்திட்டத்திற்கு உலகம் முழுக்க 50 பேரும், இந்தியாவில் 5 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1.2 கோடி சம்பளத்தில் கூகுளில் வேலை: அசத்தும் ஐஐஐடி பெங்களூர் மாணவர்.!

22 வயதான ஆதித்யா பலிவால் என்ற அந்த மாணவர், 2013-18 வரை ஒருங்கிணைந்த எம்.டெக் 5 ஆண்டு படிப்பை பெங்களூர் ஐஐஐடியில் படித்து, நியூயார்க்-ல் பணியில் சேரவுள்ளார். ஏ.ஐ (செயற்கை நுண்ணறிவு) கூகுள் ரெசிடன்ஸி ப்ரோக்ராம் என்று அழைக்கப்படும் இந்த ஓராண்டுகால திட்டத்தில் சேர்ந்து, ஓராண்டிற்கு பின் முழு நேர பணியாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது என்கிறார் ஆதித்யா.

ஆதித்யா

ஆதித்யா

கூகுளின் இந்த திட்டத்திற்கு ஆதித்யா தேர்வானது குறித்து ஐஐஐடி-பி நிறுவனத்தின் டீன் சந்திரகேசர் கூறுகையில், "ஐஐஐடி-பி-ல் உள்ள சிறந்த மாணவர்களில் ஒருவர் ஆதித்யா. இவர் கூகுளின் ரெசிடன்ஸி திட்டத்திற்கு 1.2கோடி சம்பளத்தில் தேர்வாகியுள்ளார்" என தெரிவித்துள்ளார். "கடந்த ஆண்டு கூகுளில் இன்டர்ன்சிப் செய்தேன். அக்காலகட்டத்தில் இந்த திட்டத்தை பற்றி சில குழுக்களின் மூலம் தெரிந்துகொண்டேன். ஆராய்ச்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தாலும், உடனடியாக பி.எச்டி செய்வேனா என தெரியவில்லை. இந்த திட்டம் ஆராய்ச்சிக்கும், தொழில்துறைக்கும் இடையே ஒரு நல்ல பாலமாக திகழ்கிறது. அதுமட்டுமின்றி இது எனக்கு மிகவும் பிடித்த பிரிவான - செயற்கை நுண்ணறிவு" என்கிறார் ஆதித்யா.

 முழு நேர பணியாக மாற்றிக்கொள்ளலாம்.

முழு நேர பணியாக மாற்றிக்கொள்ளலாம்.

அவர் மேலும் கூறுகையில், " ஓராண்டுகால திட்டமான இதற்கு பிறகு, ஒருவர் இதை முடித்துக்கொண்டு பி.எச்டி படிக்கலாம், இத்திட்டத்தை தொடரலாம் அல்லது இதை முழு நேர பணியாக மாற்றிக்கொள்ளலாம். ஆனால் திட்டத்தை நீட்டிப்பு செய்வது அல்லது முழுநேர பணியாக மாற்றுவது நமது செயல்திறனை பொறுத்தது"என்கிறார்.

பெங்களூர் ஐஐஐடி

பெங்களூர் ஐஐஐடி

இத்திட்டத்தில் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "நாங்கள் நவீன ஆராய்ச்சிகளில் பணியாற்றி,பல்வேறு ஆய்வு கட்டுரைகளை எழுதி ஆச்சர்யமளிக்கும் முடிவுகளை பெறுவோம். இப்போது வரை நான் எந்த பிரிவில் பணியாற்றுவேன் என்பது தெரியவில்லை. ஆனாலும் உலகம் முழுக்க இருந்து வரும் பல்வேறு மூத்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிவியலாளர்களை சந்திப்பதை எதிர்பார்த்துள்ளேன்" என பதிலளித்தார்.

மும்பையை சேர்ந்த ஆதித்யா 12ஆம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை அங்கு முடித்த பின்பு, பெங்களூர் ஐஐஐடி யில் சேர்ந்துள்ளார். "சிறுவயது முதலே கணிணிகள் மீது ஆர்வமாக இருந்ததால், கணிணியில் எப்போதும் ஏதாவது வித்தியாசமாக செய்து பரிசோதனை செய்துகொண்டே இருப்பேன். எனவே கணிணிஅறிவியல் படிப்பது இயற்கையான முடிவாகவே இருந்தது"என்கிறார் ஆதித்யா.

 நேச்சுரல் லாங்குவேஜ் ப்ராஸசிங்

நேச்சுரல் லாங்குவேஜ் ப்ராஸசிங்

இவரை தவிர்த்து இந்தியாவில் இருந்து தேர்வான மற்ற நால்வரும், ஐஐடி மும்பை, ஐஐடி சென்னை, ஐஐடி ரவுர்கி மற்றும் ஐஐடி ஹைதராபாத் மாணவர்கள் ஆவர். கூகுள் இத்திட்டத்தை 2015 முதல் செயல்படுத்திவருகிறது.

இத்திட்டத்தை பற்றி கூகுள் நிறுவன இணையதளத்தில் தெரிவித்துள்ளதாவது, " தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள், ஆய்வு குழுக்களின் வெவ்வேறு அறிவியலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடன் இணைந்து, கூகுள் ப்ரைன் டீம், பர்செப்சன், நேச்சுரல் லாங்குவேஜ் ப்ராஸசிங் அல்லது கூகுள் ஏஐ -ல் பணியமர்த்தப்படுவார்கள்".

 ப்ரோகிராம்மிங் போட்டி

ப்ரோகிராம்மிங் போட்டி

ஆதித்யாவின் பேராசிரியர் முரளிதரா கூறுகையில், "ஆதித்யா நன்றாக கோடிங் செய்பவர் மற்றும் மிகச்சிறந்த மாணவர். உலக ஏசிஎம் ஐசிபிசி-ல் 2 முறை பங்கேற்றுள்ளார். இது உலகளாவிய மதிப்புமிக்க ப்ரோகிராம்மிங் போட்டி. ஒவ்வொரு ஆண்டும் நாடுமுழுவதிலும் இருந்து சில குழுக்களே பங்குபெறும். அதில் இவர் இறுதி சுற்று வரை சென்றுள்ளார்" எனக் கூறினார்.

நாசா விருது வாங்கிய சென்னை சிறுவன், எதுக்குனு சொன்னா நம்ப மாட்டீங்க.!

நாசா விருது வாங்கிய சென்னை சிறுவன், எதுக்குனு சொன்னா நம்ப மாட்டீங்க.!

18 வயதில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்று சற்று யோசித்து பார்த்தல் ஸ்கூல் பரீட்சைக்கு பயந்து பயந்து படித்துக்கொண்டோ அல்லது ஹோம் வர்க் எழுதிக் கொண்டே இருந்திருப்போம். ஆனால் சென்னையை சேர்ந்த 18 வயதே நிரம்பிய சாய் கிரண், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விருது ஒன்றை தனதாக்கி கொண்டுள்ளார்.

இதுவே பெரிய சுவாரசியமாக தகவலாக இருக்கின்ற பட்சத்தில், அப்படி சாய் கிரண் என்ன செய்தார்.? எதற்காக சாய் கிரானுக்கு நாசா விருது வழங்கியது.? - என்ற தகவல் உங்களின் சுவாரசியத்தை மேலும் கூட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.!

கற்பனை

நிலாசோறு சாப்பிட்ட நம் அனைவருக்குமே விண்வெளி மீது தனி ஆர்வம் உண்டு, விண்வெளிக்குள் பறந்தால் எப்படி இருக்கும்.? மிதந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு பொழுதாவது கற்பனை செய்து பார்க்காத மனிதனே இருக்க வாய்ப்பில்லை. சாய் கிரணும் அப்படியான மனிதர்களுள் ஒருவன் தான்.!

நாசா அமெஸ் விண்வெளி தீர்வு

நாசா அமெஸ் விண்வெளி தீர்வு

18 வயது நிரம்பிய சாய் கிரண் பி, சமீபத்தில் நாசா அமெஸ் விண்வெளி தீர்வு 2017 போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை வென்றார். என்ன போட்டி.? அவர் அளித்த தீர்வு என்னவென்று தெரியுமா.??

மனித இனம்

மனித இனம்

நிலவிற்கு சென்று மனிதன் தனது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும், அப்படியாக பூமியில் இருந்து நிலவிற்கு எப்படியெலலாம் மனித இனம் செல்லலாம்.? என்ற கேள்விக்கு, பூமியில் இருந்து நிலவிற்கு எலிவேட்டர் (அதாவது மின்தூக்கி) ஒன்று உருவாக்கி அதன் வழியாக நிலவுக்கு செல்லலாம் என்று ஒரு அற்புதமான தீர்வை சாய் கிரண் முன்மொழிந்துள்ளார்.

ஆய்வறிக்கை

ஆய்வறிக்கை

இந்த போட்டியின் அடிப்படையான "நிலவில் மனித குடியேற்றங்கள்" சார்ந்த திட்டப்பணியில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதலே சாய் கிரண் ஈடுபட்டு வருகிறார். அதன் விரிவான ஆய்வறிக்கையை இந்த போட்டியில் அவர் சமர்ப்பித்தும் உள்ளார். சாய் கிரண் தனது திட்டத்திற்கு 'கனெக்டிங் மூன், எர்த் அண்ட் ஸ்பேஸ்' மற்றும் 'எச்யூஎம்இஐயூ (HUMEIU) ஸ்பேஸ் ஹேபிடட்ஸ்' என்று தலைப்பிடப்பட்டு மின் தூக்கி மூலம் நிலவுக்கு மனிதர்கள் பயணிப்பதை விவரித்துள்ளார்.

ஈர்ப்புத்தன்மை இல்லாமல்

ஈர்ப்புத்தன்மை இல்லாமல்

சாய் கிரண் திட்டத்தின் முதல் பிரிவில் மனிதர்கள் நிலவில் குடியேற்றங்களை உருவாக்க சாத்தியமான சரக்குகளை கொண்டு செல்ல உதவும் லிப்ட்களை உருவாக்குவதை விவரிக்கிறார். சாய் கிரணின் அறிக்கையில் மிக முக்கியமான அம்சமாக ஈர்ப்பை குறிப்பிடுகிறார் ஈர்ப்புத்தன்மை இல்லாமல் மனிதர்கள் அங்கு குடியேற முடியாது என்று விவரிக்கிறார்.

40,000 கிமீ உயரத்திற்கு

40,000 கிமீ உயரத்திற்கு

மேலும் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கை நிலவில் பொழுதுபோக்கு, விளையாட்டு, ஆட்சிமுறை மற்றும் விவசாயம் அமைக்கும் கவனத்தையும் சாய் கிரண் புகுத்தியுளார். இந்த யோசனையின் கீழ் 40,000 கிமீ உயரத்திற்கு மின் தூக்கி உருவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதன் வடிவமைப்பானது சந்திரனை சார்ந்த அல்லது பூமியை சார்ந்த லிஃப்ட் வடிவத்தில் ஏற்றது எதுவோ அதுபோல் அமைக்கப்படலாம் என்றும் ஆய்வறிக்கை விவரிக்கிறது.

உலகம் முழுவதிலும்

உலகம் முழுவதிலும்

தேசிய விண்வெளி சங்கத்துடன் (என்.எஸ்.எஸ்) இணைந்து சான் ஜோஸ் மாநில பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் உள்ள 12 கிரேட் மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஓடும் ரயில், பிரசவ வலி, மருத்துவ மாணவர், வாட்ஸ்ஆப் க்ரூப், நடந்தது என்ன.?

'சென்னை பாய்' ஸ்ரீகிருஷ்ணா : அப்துல் கலாமின் 'நிஜமாகும் கனவு'..!!

'சென்னை பாய்' ஸ்ரீகிருஷ்ணா : அப்துல் கலாமின் 'நிஜமாகும் கனவு'..!!

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள், இளம் பள்ளி மாணவர்களை மனதில் கொண்டு அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டுவரும் நோக்கத்தில், 2014-ஆம் ஆண்டில் தொடங்கி வைத்த ஒரு போட்டி தான் - கோட் டு லேர்ன்..!

இந்தியா முழுவதிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பங்குபெறும் இந்த போட்டியின் 2015-ஆம் ஆண்டின் வெற்றியாளன் - சென்னையை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா மதுசூதனன்..!

மேலும் இது சார்ந்த தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

கோட் டு லேர்ன் :

கோட் டு லேர்ன் :

கூகுள் இந்தியா 'கோட் டு லேர்ன்' என்ற போட்டியானது மறைந்த அப்துல் கலாம் அவர்களால் தொடங்கப்பட்டு 2014-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் ஒரு போட்டியாகும்.

5 முதல் 10 ஆம் வகுப்பு :

5 முதல் 10 ஆம் வகுப்பு :

இந்த போட்டியில், நாடு முழுவதும் உள்ள 5 முதல் 10 ஆம் வகுப்பு பயிலும் எந்தவொரு மாணவரும் கலந்து கொள்ள முடியும்.

கேம் அல்லது ஒரு கல்வி சார்ந்த டூல் :

கேம் அல்லது ஒரு கல்வி சார்ந்த டூல் :

சமூக நோக்கம் கொண்ட ஒரு கேம் அல்லது ஒரு கல்வி சார்ந்த டூல் (Educational Tool) ஒன்றை எந்தவொரு மென்பொருள் பயன்பாடு கொண்டும் உருவாக்கி இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

ஷூட் டு ஸ்கோர் :

ஷூட் டு ஸ்கோர் :

அப்படியாக, சென்னை மாணவன் ஸ்ரீகிருஷ்ணா 'ஸ்க்ராட்ச்' ப்ளாட்பார்ம் (Scratch Platform), கொண்டு உருவாக்கிய கேம் தான் 'ஷூட் டு ஸ்கோர்' (Shoot to Score).

900 மாணவர்கள் :

900 மாணவர்கள் :

ஸ்ரீகிருஷ்ணாவை சேர்த்து சென்னை நகரத்தில் இருந்து மட்டுமே மொத்தம் 900 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டி :

இறுதிப்போட்டி :

பல சுற்றுச் தீர்வு பிறகு, ஸ்ரீகிருஷ்ணா புதுதில்லி நடக்கும் இறுதிப்போட்டியில் பெங்களூரு, மைசூர் மற்றும் மும்பையை சேர்ந்த ஒன்பது மாணவர்களுடன் போட்டியிட்டார்.

வெற்றி :

வெற்றி :

இறுதிப்போட்டிக்கு பின்னர் சென்னை பெருங்குடியில் உள்ள பால வித்யா மந்திர் க்ளோபல் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவர் ஆன ஸ்ரீகிருஷ்ணா மதுசூதனன் 2015 ஆம் ஆண்டின் கூகுள் இந்தியா கோடிங் போட்டியின் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்..!

 ரோபாட்டிக்ஸ் :

ரோபாட்டிக்ஸ் :

தனது பள்ளி ரோபாட்டிக்ஸ் ஆய்வகத்தில் இருந்து ஸ்க்ராட்ச் மென்பொருள் கற்றுக்கொண்டதாகவும் அதன் மூலமே தனது கேமின் அடிப்படைகளை உருவாக்க கற்றுக்கொண்டதாகவும் ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா, தூக்கிடலாம் கவலை வேண்டாம்.!!

மின்னல் வேகத்தில் தகவல் பரிமாற்றம் எளிய காரியம் தான்.!!

வாட்ஸ்ஆப் அப்டேட் : புது சங்கதியை பார்த்தீர்களா??

Most Read Articles
Best Mobiles in India

English summary
Bengaluru student bags a Rs 1.2cr annual package at Google : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X