FASTag அக்கௌன்ட்டில் மோசடி: கண் இமைக்கும் நேரத்தில் ரூ.50,000 திருட்டு- எப்படி தெரியுமா?

|

FASTag தொடர்பான புகார் எழுப்பப்பட்ட சில நிமிடத்தில் பாதிக்கப்பட்டவருக்கு போலி கால் மூலம் ரூ.50,000 அக்கவுண்டில் திருடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FASTAG (ஃபாஸ்ட்டேக்) மின்னணு அட்டை அறிமுகம்

FASTAG (ஃபாஸ்ட்டேக்) மின்னணு அட்டை அறிமுகம்

கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 523சுங்கவரி வசூல் மையங்களில் FASTAG (ஃபாஸ்ட்டேக்) மின்னணு அட்டை அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக பணத்தை இணையம் மூலமாக செலுத்திக் கொண்டால் ஒவ்வொரு முறை சுங்கச்சாவடியை வாகனம் கடக்கும்போது டிஜிட்டல் முறையில் FASTAG மின்னணு அட்டையில் இருந்து பணம் பெறப்பட்டு,பின் கடந்து செல்ல அனுமதிக்கப்படும்.

அட்டையில் எவ்வளவு பணம் உள்ளது

அட்டையில் எவ்வளவு பணம் உள்ளது

ஃபாஸ்ட்டேக் மூறை மேலும் ஒவ்வொரு முறையும் பணம் எடுக்கும்போது குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வரும். இதன் மூலம் நமது ஃபாஸ்ட்டேக் மின்னணு அட்டையில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். பின்பு தேவை என்றால் ரீசார்ஜ் செய்து கொண்டு நீண்ட நேரம் காத்திருத்தல், சில்லறை பிரச்சனை போன்றவற்றுக்கு தீர்வாக ஃபாஸ்ட்டேக் மூறை இருக்கிறது.

மோசடி என்பதும் வளர்ந்து வருகிறது

மோசடி என்பதும் வளர்ந்து வருகிறது

இந்த நிலையில், அண்மையில் நடந்த ஒரு சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆன்லைன் மோசடி என்பது தொழில்நுட்பம் வளரும் காலத்தில் கூடவே மோசடி என்பதும் வளர்ந்து வருகிறது. பணம் மோசடி என்பது ஹேக்கர்கள் மட்டுமின்றி சர்வ சாதரணமாக பலரும் ஈடுபட்டு வருகின்றனர். டிஜிட்டல் இந்தியாவில் அடுத்தக்கட்டமாக நெடுஞ்சாலையில் ஃபாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டது.

பெங்களூருவை சேர்ந்தவர் பாதிப்பு

பெங்களூருவை சேர்ந்தவர் பாதிப்பு

ஃபாஸ்ட் டேக் மோசடி சம்பவத்தின் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர் (பெங்களூரைச் சேர்ந்த ஒருவர்) தனது ஃபாஸ்ட் டேக் அக்கவுண்ட் புகாரில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஃபாஸ்ட் டேக் அக்கவுண்ட் தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர் என கூறி மோசடி

ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர் என கூறி மோசடி

இந்த புகார் அளித்த சில மணி நேரத்தில் ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி என்று ஒருவர் போன் செய்துள்ளார். அந்த போனில் மோசடி தொடர்பாக விவரம் கேட்டுள்ளார். அதோடு ஏடிஎம் கார்ட் விவரங்கள் கேட்டறிவதோடு ஓடிபி குறித்தும் கேட்டுள்ளார்.ஓடிபி எண்ணை பகிர்ந்ததனால் அவரின் ஃபாஸ்ட் டேக் அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

ரூ.50,000 மோசடி என புகார்

ரூ.50,000 மோசடி என புகார்

இந்த நிகழ்வு நடந்த சில நிமிடங்களிலேயே பாதிக்கப்பட்டவர் கணக்கில் இருந்து ரூ.50,000 உடனடியாக குறைந்துள்ளது. இதுதொடர்பாக தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பலமுறை ஏடிஎம் கார்ட், அக்கவுண்ட் விவரம், ஓடிபி விவரம் உள்ளிட்டவை குறித்து போன் மூலம் யாராவது தொடர்பு கொண்டால் பகிர வேண்டாம் என்று பல்வேறு வகை விழிப்புணர்வு எழுப்பப்பட்டு வந்தாலும், இது போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நிகழ்ந்துதான் வருகிறது.

Best Mobiles in India

English summary
Bengaluru Man Loses Rs. 50,000 In FASTag Fraud: Here’s How To Stay Safe

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X