லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
நீங்க சீப்பா போட்ட பிளானை, நான் எப்படி சீப்பா முடிச்சேன் பார்த்தீங்களா? என்ற விதத்தில் ஒரு தம்பதியினர் நகை கடையில் போலி UPI பேமெண்ட் ஸ்கிரீன்ஷாட்களை டிஸ்பிளேவில் காண்பித்து லட்சம் மதிப்பிலான நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலி UPI பேமண்ட் ஆப்ஸ்: பல்வேறு நகை கடைகளில் தங்கம் வாங்கைவிட்டு, UPI மூலம் பணம் செலுத்துவதாக கூறி, போலி UPI பேமெண்ட் ஆப்ஸ் மூலம் பணம் செலுத்தியதாக ஸ்கிரீன்ஷாட் நகல்களை காண்பித்து ஏமாற்றிய தம்பதியை பெங்களூரு நகர போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். போலி UPI பேமண்ட் ஆப்ஸ் மூலம் இந்த மோசடி நடந்துள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

நகை மோசடியில் லிவ்வின் பார்ட்னர்கள்: பல்வேறு நகைக்கடைகளுக்கு அடிக்கடி வந்து, 40 முதல் 100 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்களை வாங்கி, கேஷ் கவுண்டரில், 'prank payment' என்ற UPI செயலியை பயன்படுத்தி ஏமாற்றிய, லிவ்வின் பார்ட்னர்களான நந்தன் (40) வயது மற்றும் கல்பிதா (35) வயது நபர்கள் நூதன முறையியல் மோசடியில் பங்கேற்றது தெரியவந்துள்ளது.
போலி பேமெண்ட் டிஸ்பிளே ஸ்கிரீன்: பணம் செலுத்தும் நேரத்தில், இருவரும் போலியான டிஸ்பிளே ஸ்க்ரீனை காண்பித்து, நகைகளை எடுத்து சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இவர்கள் பயன்படுத்திய, போலி பேமெண்ட் ஆப்ஸ் நகை கடைகளில் காண்பிக்கும் QR கோடுகளை ஸ்கேன் செய்து தொகை செலுத்தப்பட்டதாக அசல் பேமெண்ட் ஆப்ஸ் போல செயல்படும் போக்கால் கடைக்காரர்கள் ஏமாந்துள்ளனர்.
ரூ.1 லட்சம் நகை மோசடி: உண்மையில், இந்த போலி பேமண்ட் ஆப்ஸ் கடைகளில் வழங்கப்பட தொகையை கட்டி முடித்ததாக , காண்பிக்கும் 'பரிவர்த்தனை முடிந்தது' நோட்டிபிகேஷன் செய்தியை காண்பித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. பைதரஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரமேஸ்வரா வங்கியாளர்கள் மற்றும் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடந்த மார்ச் 4ஆம் தேதி ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான தங்க நகைகளை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
கணக்கில் வரத்து பணம்: தம்பதியினர் கட்டணத்தை செலுத்தியாக கூறி UPI டிஸ்பிளே ஸ்கிரீனை காண்பித்துள்ளனர். ஆனால், நகை கடை வங்கி கணக்கில் எந்தவித பணமும் வரவு வைக்கப்படவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடை கடை கணக்கில் 1 லட்சம் பணம் வரவு வைக்கப்படவில்லை என்று நகைக்கடைக்காரர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தம்பதியரின் வாகனத்தை அடையாளம் கண்டனர்.
ஏமாற்றிய தம்பதிகள் சிக்கியது எப்படி? வாகனத்துடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பு வைப்பு ரசீது (SDR) எண்ணைக் கண்டுபிடித்து, RR நகரில் கல்பிதாவின் வீட்டைக் கண்டுபிடித்த போலீஸார், அந்தப் பெண்ணைக் கைது செய்தனர். அவரது தகவலின் அடிப்படையில், தேவனஹள்ளியைச் சேர்ந்த நந்தனை போலீஸார் கைது செய்தனர். இறுதியில், இந்த தம்பதியினர் போலி ஆப்ஸை காண்பித்து பல நகை கடைகளில் தங்கத்தை வாங்கி ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
நூதன முறை மோசடி: இறுதியில் இந்த ஜோடி காவல் துறை ரேடாரில் சிக்கியது. இருவரும் இப்போது கலைத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். UPI ஆப்ஸ் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், மோசடிகார்கள் இப்போது பல நூதன முறைகளை கையாண்டு, UPI பேமெண்டிலும் மோசடிகளை செய்து வருகின்றனர். மக்கள் மற்றும் கடைக்காரர்கள் கவவனமாக இருக்கும் படி அறிவுரைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








