ஆதார் அவசியமில்லை: பெங்களூர், ஐதராபாத் விமான நிலையங்கள் அதிரடி.!

இந்திய விமானநிலையங்களில் சீரான நடைமுறை மற்றும் புதிய பயண அனுபவத்தை ஏற்படுத்தும்

|

பெங்களூர் மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் வரும் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் விமான பயணிகளை டிஜி யாத்ரா' என்ற டெக்னாலஜி மூலம் பயோமெட்ரிக் டிஜிட்டல் மூலம் மட்டுமே சோதனை செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

ஆதார் அவசியமில்லை: பெங்களூர், ஐதராபாத் விமான நிலையங்கள் அதிரடி.!

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பெங்களூர் மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களில் தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து கொல்கத்தா, வாரணாசி, புனே மற்றும் விஜயவாடா ஆகிய விமான நிலையங்களிலும் இதே பயோமெட்ரிக் முறையில் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என இந்திய விமானத்துறை அறிவித்துள்ளது.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விமான நிலையங்களில் பயணிகள் டிஜிட்டல் செயலாக்கத்திற்கான செயல் வடிவங்களை உருவாக்கும் பணியில் தற்போது உள்ளது. இந்த முறை பின்பற்றப்பட்டால் இந்திய விமானநிலையங்களில் சீரான நடைமுறை மற்றும் புதிய பயண அனுபவத்தை ஏற்படுத்தும் என உறுதி அளிக்கப்படுகிறது. விமானத் துறை இயக்குநர்கள், விமான நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை ஆகியவற்றின் உறுப்பினர்கள் கொண்டிருக்கும் தொழில்நுட்ப பணிக்குழு தரநிலைகளை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதார் அவசியமில்லை: பெங்களூர், ஐதராபாத் விமான நிலையங்கள் அதிரடி.!

மத்திய அமைச்சர் இதுகுறித்து மேலும் கூறியபோது, இந்தியாவின் சக்தி வாய்ந்த எதிர்கால தளமாக திகழும் இந்தா முறையால் எதிர்காலத்தில் புதிய சேவைகளை வழங்குவதற்கான சாத்தியங்கள் இருப்பதாஅகவும், இதனால் எளிதில் இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புக்களை கொண்டு வர முடியும் என்று கூறியுள்ளார். மேலும் பயணிகளுக்கும் இந்த நடைமுறை மிக எளிதாகவும், சிறப்பான அணுகுமுறையாகவும் தெரியும்

டிஜி யத்ரா' என்ற புதிய முறையானது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஃபேஷியல் நடைமுறையாஅகும். இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் விமான நிலையத்தில் இருந்து விமான பயணிகள்நுழைவதற்கு ஒரு தடையற்ற அனுபவத்தை வழங்கும் என சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியுள்ளார்.

ஆதார் அவசியமில்லை: பெங்களூர், ஐதராபாத் விமான நிலையங்கள் அதிரடி.!

இந்த டிஜி யாத்ராவின்படி ஒவ்வொரு விமான பயணிக்கும் ஒரு டிஜி யாத்ரா அடையாஅள அட்டை வழங்கப்படும். அதில் பெயர், இமெயில், மொபைல் எண் மற்றும் ஏதேனும் ஒரு அடையாள ஆவணம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த அடையாள ஆவணத்தில் ஆதார் அட்டை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. விமான டிக்கெட்டுக்களை புக் செய்யும்போது இந்த டிஜி யாத்ரா அட்டை விவரங்களை குறிப்பிட்டால் போதுமானது. விமான நிலைய அலுவலகம், பயணிகளின் டிக்கெட் மற்றும் டிஜி யாத்ரா அட்டையை மட்டும் சோதனை செய்து விமான பயணத்தை அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Best Mobiles in India

English summary
Bengaluru Hyderabad airports set to roll out digital passenger clearance by February : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X