வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழ்.. கிளிக் செய்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.. நடந்தது என்ன? இதோ விவரம்..
வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த செயலியில் அவ்வப்போது புதிய புதிய அம்சங்கள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இதில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழை பதிவிறக்கம் செய்துள்ளார். உடனே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பறிபோனது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பெங்களூருவைச் சேர்ந்த 48 வயதான தொழிலதிபர் நூர் நஹீத் கான் (42). இவருக்கு நேற்று முன் தினம் வாட்ஸ்அப் செயலியில் ஒரு திருமண அழைப்பிதழ் வந்துள்ளது. அந்த குறுஞ் செய்தியில் எங்கள் திருமணத்திற்கு உங்களை அழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். விழாவின் முழு விவரங்களுக்கு, இணைக்கப்பட்ட அழைப்பிதழைப் பதிவிறக்கம் செய்யவும் என எழுதப்பட்டிருந்தது.
ஆகவே நூர் நஹீத் கான் அந்த இணைப்பில் ஏபிகே கோப்பு வடிவில் இருந்த அழைப்பிதழை பதிவிறக்கம் செய்தார். உடனே அவரது போனில் ஒரு செயலி நிறுவப்பட்டு, வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்து 440 எடுக்கப்பட்டதாகக் குறுஞ்செய்தி வந்தது. இதைத் தொடர்ந்து அவர் பெங்களூரு இணையக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
குறிப்பாக தகவல் தொழில்நுட்பச் சட்டம், பிஎன்எலஸ் சட்டப் பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதேபோல் டிஜிட்டல் இந்தியாவில் எச்சரிக்கையாக இருக்கும்படி பல்வேறு வகையில் அறிவுறுத்தப்பட்டு வந்தாலும் ஆங்காங்கே மோசடி கும்பல் விரிக்கும் வலையில் பொதுமக்கள் சிக்கிக் கொள்கின்றனர். குறிப்பாக ஓடிபி, யுபிஐ ஆன்லைன் பணப் பரிமாற்றம் என அனைத்து விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதுவும் APK Scam என்பது மோசடி செய்யும் நபர்கள் போலியான APK (Android Package Kit) கோப்புகளை அனுப்பி, உங்களது மொபைல் போனை கட்டுப்படுத்தி வங்கி விவரங்கள், கடவுச்சொற்கள், ஓடிபி போன்ற தனிப்பட்ட தகவல்களை திருடி, உங்கள் பணத்தை கொள்ளையடிக்கும் ஒரு ஆன்லைன் மோசடியாகும்.
பொதுவாக இவை KYC அப்டேட், பரிசு கூப்பன்கள், அல்லது பார்சல் டெலிவரி போன்ற அவசர தேவைகள் என்ற பெயரில் அனுப்பப்படும். அதாவது உங்கள் போனுக்கு திடீரென ஒரு எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் மெசேஜ் வரும். உடனே நீங்களும் அந்த லிங்க்கை கிளிக் செய்தால் ஒரு APK file டவுன்லோட் ஆகும். அது பார்ப்பதற்கு ஒரிஜினல் ஆப் போலவே இருக்கும். இதன் மூலம் உங்கள் விவரங்கள் திருடப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இப்படிதான் ஹேக்கர்கள் உங்களுடைய செல்போனுக்குள் நுழைகிறார்கள்.
கூகுள் பிளே ஸ்டோர் இல்லாத ஆப்பை நீங்கள் டவுன்லோடு செய்தால் அடுத்த நொடியே உங்கள் போன் ஹேக்கர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். நீங்கள் அந்த செயலிக்கு (ஆப்) பர்மிஷன் கொடுத்த உடன் உங்களது போனில் உள்ளன படங்கள், போன் நம்பர்கள், மெசேஜ் உள்ளிட்ட அனைத்து முக்கிய தகவல்களும் அவர்களுக்குத் தெரிந்துவிடும். அதுவும் வங்கியில் இருந்து உங்களுக்கு வரும் OTP அவர்களுக்கு நேரடியாகப் போய்விடும்.

அதுவும் இதில் நீங்கள் ஓடிபி-ஐ யாருக்கும் சொல்லவே வேண்டாம். அவர்களே பார்த்து விடுவதுடன் நீங்கள் கண்ணை மூடி திறப்பதற்குள் உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை மற்றொரு கணக்கிற்கு எளிமையாக மாற்றி விடுவார்கள். மேலும் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் காணாமல் போவதைக் காட்டும் மெசேஜ் கூட அவர்களால் டெலிட் செய்ய முடியும்.
ஆகவே Google Play Store அல்லது Apple App Store போன்ற அதிகாரப்பூர்வ இடங்களில் இருந்து மட்டுமே ஆப்களை பதிவிறக்கம் செய்யுங்கள். தெரியாத நபர்களிடம் இருந்து வரும் APK கோப்புகள் அல்லது லிங்குகளை திறக்கவோ, பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம். இவற்றை உடனே நீக்கி விடுங்கள்.


Click it and Unblock the Notifications