போக்குவரத்துக்கு விதிமீறல் காரணமாக ரூ. 42,500 அபராதம்.. 4 அடி நீட்ட பில்.. ஆடிப்போன போலீசார்..

|

பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவருக்கு பெங்களூரு போக்குவரத்துக்கு போலீசார் ரூ. 42,500 அபராதம் விதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஒருவர் மீது மட்டும் 77 போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீது எப்படி இத்தனை விதி மீறல் வழக்குகள் இவருக்கே தெரியாமல் பதிவு செய்யப்பட்டது என்று தெரியுமா? நீங்களும் உஷாராக இருக்க இந்த தப்பைச் செய்யாதீர்கள்.

போக்குவரத்து போலீசார்

பெங்களூரு, மாடிவாலா பகுதியிலிருந்த போக்குவரத்து போலீசார் நேற்று ஹெல்மெட் அணியாமல் வேகமாக வாகனம் ஒட்டி வந்த அருண் குமார் என்ற நபரை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த குற்றத்திற்காக அவர் மீதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விதி மீறல் வழக்கு பதிவு செய்ய அவரின் வண்டி எண்ணை போலீசார் பில் இயந்திரத்தில் டைப் செய்ததும் அதிர்ந்து போய்விட்டனர்.

75 விதி மீறல் வழக்கு.. 4 அடி நீலத்தில் பில்

75 விதி மீறல் வழக்கு.. 4 அடி நீலத்தில் பில்

காரணம் பில் இயந்திரம் அவர் வண்டியின் பெயரில் சுமார் 75 விதி மீறல் வழக்குகளைப் பதிவு செய்திருந்ததைக் காட்டியுள்ளது. அபராத தொகை என்று காட்டிய ஒட்டுமொத்த பில் தொகையையும் பிரிண்ட் கொடுத்த போலீசாருக்கு பில்லிங் இயந்திரம் 4 அடி நீலத்தில் பில்லை வழங்கியுள்ளது. அப்பொழுது, அவருக்கு விதிக்கப் பட்ட 2 விதிமீறல் வழக்குகளுடன் சேர்த்து மொத்தம் 77 விதி மீறல் வழக்குகளுக்கு ரூ.42,500 அபராத தொகையுடன் பில் வழங்கப்பட்டுள்ளது.

மாணவர் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பம்.! இனி ஆணியடிக்கமால் பொருள்களை தொங்கவிடலாம்.!மாணவர் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பம்.! இனி ஆணியடிக்கமால் பொருள்களை தொங்கவிடலாம்.!

இரண்டு ஆண்டுகளாக நிலுவையிலிருந்த வழக்கு

இரண்டு ஆண்டுகளாக நிலுவையிலிருந்த வழக்கு

அன்றைய தினத்தில் அருண் குமார் மீதி ஹெல்மெட் அணியாத காரணத்திற்காகவும், அவரின் இருசக்கர வாகனத்தில் குறைபாடுள்ள நம்பர் பிளேட் வைத்திருந்ததாலும் மடிவாலா போலீசார் இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தனர். இதற்கு முன்பாக அவர் மீது இரண்டு ஆண்டுகளாக 75 வழக்குகள் நிலுவையிலிருந்துள்ளது. பெரும்பாலான விதி மீறல்கள் போக்குவரத்து சிக்னல்களில் நிறுத்தாமல் சென்றது மற்றும் ட்ரிபிள்ஸ் சவாரி செய்வதற்காக வழங்கப்பட்டிருந்தது.

எப்படி இத்தனை வழக்குகளில் சிக்கினார் தெரியுமா?

எப்படி இத்தனை வழக்குகளில் சிக்கினார் தெரியுமா?

இவர் சிக்னல் ஜம்பிங் செய்தது மற்றும் ட்ரிபிள்ஸ் சவாரி செய்தது எப்படி ஆட்டோமேட்டிக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று தெரியுமா? பெங்களூரு போன்ற நகரங்களில் பெரும்பாலான சிக்னல்களில் சிசிடிவி கேமராகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் செய்த குற்றங்கள் அனைத்தும் அவரின் வண்டி எண்ணை வைத்து பதிவு செய்யப்பட்டு வந்துள்ளது. இதனால் தான் அவருக்கே தெரியாமல் அவர் செய்த அனைத்து குற்றங்களும் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.

டைட்டன் நிலவில் வித்தியாசமான மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு.. உயிர் அடையாளத்தின் உருவாக்கமா?டைட்டன் நிலவில் வித்தியாசமான மூலக்கூறுகள் கண்டுபிடிப்பு.. உயிர் அடையாளத்தின் உருவாக்கமா?

ரூ .42,500 அபராதம்

ரூ .42,500 அபராதம்

இதனால், அவருக்கு அபராதமாக ரூ .42,500 விதிக்கப்பட்டுள்ளது. அவர் இருசக்கர வாகனத்தின் மதிப்பே வெறும் ரூ .30,000 க்கும் குறைவு தான் என்று கூறி அருண் குமார் அபராதத்தைச் செலுத்த மறுத்துவிட்டார். இதன் காரணமாக அபராதம் செலுத்த மறுத்த அருண் குமாரின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இருப்பினும், அவரிடமிருந்து அபராதத்தை வசூலிக்காமல் விடப்போவதில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடுமையாக்கப்படும் சட்டம்

கடுமையாக்கப்படும் சட்டம்

போக்குவரத்துக்கு சட்டங்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கடுமைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த முறை சிக்னலில் போலீசார் இல்லை என்று விதியை மீறாதீர்கள், கேமராக்கள் உங்களை கண்காணித்துக்கொண்டே தான் இருக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இனி ரொம்ப உஷாரா இருக்கனுமா?

இனி ரொம்ப உஷாரா இருக்கனுமா?

ஹெல்மெட் அணியாமல் சிக்னலை கடந்து சென்றவர்களுக்கும் ஆன்லைனில் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் உஷாராக இருக்க எந்த விதியையும் எப்பொழுதும் மீறாதீர்கள், அது தான் பாதுகாப்பானது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Bengaluru Biker Asked To Pay Rs. 42,500 Penalty For Not Following Traffic Rules : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X