500 எம்பிபிஎஸ் - 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் 5ஜி டேட்டா, இந்தியாவின் இன்டர்நெட் கனவு.!

6 ஜிபிபிஸ் தடையை கடக்கும் சில உண்மையான உலகளாவிய 5ஜி சோதனைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

|

இது இந்திய மொபைல் மார்க்கெட்டின் புரட்சிகரமான நேரம் என்றே கூறலாம். பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் 5ஜி திறன் தொழில்நுட்பத்தை (4ஜி வேகத்தை விட அதிகமான வேகம் வழங்கும் தொழில்நுட்பம்) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பெங்களூருவில் முதல் மல்டிபிள்-இன்போட மல்டிபிள் -அவுட்புட் (MIMO) தொழில்நுட்பம் நிறுவபட்டுள்ளது.

இந்த 5ஜி திறன் தொழில்நுட்பம் ஏர்டெல் நிறுவனத்தின் ப்ராஜெக்ட் லீப்'பின் ஒரு பகுதியாகும். இது நாட்டின் பெரும்பகுதிகளுக்கு நெட்வொர்க் கவரேஜ் விரிவாக்கத்தில் கவனம் செலுத்துகிறது. பெங்களூர் தவிர்த்து முதல் கட்டமாக, கொல்கத்தாவும் ஏர்டெல் நெட்வொர்க்கின் அதி வேக இணையத்தை பெறும் நகரங்களில் ஒன்றாகும்.

மூன்று மடங்கு

மூன்று மடங்கு

5ஜி தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய வேக தரநிலைகள் 500எம்பிபிஎஸ் மற்றும் 1 ஜிபிபிஎஸ் என்பதற்கு இடையில் இருக்கும் போது, ​​ஏர்டெல் நிறுவனம் அதன் தற்போதைய 4ஜி தரங்களை விட மூன்று மடங்கு அதிகமான வேகத்தினை வழங்கும் தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது.

40-45 எம்பிபிஸ்

40-45 எம்பிபிஸ்

இது 16எம்பிபிஎஸ் என்ற புள்ளியில் நிற்கிறது. இதுவெறும் ஆரம்பம் தான். ஆக நாம் எதிர்காலத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் இந்த தொழில்நுட்பத்தில் இருந்து சுமார் 40-45 எம்பிபிஸ் இடையிலான வேகத்தை எதிர்பார்க்க முடிக்கிறது.

தரவுக் கோரிக்கையை நிறைவேற்றும்

தரவுக் கோரிக்கையை நிறைவேற்றும்

இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறைக்கு இந்த மிமோ (MIMO) தொழில்நுட்பம் ஒரு மாபெரும் நன்மையாக முடியும். அதாவது, பில்லியன் கணக்கான ஆன்லைன் பயனர்கள் எதிர்நோக்கும் அளவிலான தரவுக் கோரிக்கையை நிறைவேற்றும் மற்றும் எதிர்காலத்தை தயார்படுத்தும் 5ஜி தொழில்நுட்பம் இதன் மூலம் பிறக்கும்.

கார்பன் தடத்தை குறைக்கும்

கார்பன் தடத்தை குறைக்கும்

எந்தவொரு மேம்பாடுகளும் அல்லது திட்ட மாற்றமும் இன்றி வாடிக்கையாளர்கள் தங்களின் தற்போதைய 4ஜி மொபைல் சாதனங்களில் இந்த விரைவான தரவு வேகத்தை அனுபவிக்க முடியும். பாரிய அளவிலான மிமோ பயன்பாடானது, சூழல் நட்பு மிக்கது என்பதும் இந்த தொழில்நுட்ப பயன்பாடு கார்பன் தடத்தை குறைக்க உதவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோக்கியா

நோக்கியா

6 ஜிபிபிஸ் தடையை கடக்கும் சில உண்மையான உலகளாவிய 5ஜி சோதனைகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் நிலைப்பாட்டில் இந்த ஆண்டு நிகழ்ந்த உலக மொபைல் காங்கிரஸ் 2017-ல் 5ஜி தொழில்நுட்பத்திற்காக மூலோபாய பங்காளிகளுடன் இணைந்து செயல்படும் என்று நோக்கியா கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

இந்திய நிறுவனமான பிஎஸ்என்எல் உடன் 5ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு கொண்டு வர நோக்கியா நிறுவனம் ஏற்கனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Bengaluru to be the first Indian city with 5G Internet capable technology. Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X