மீன் குழம்பு, சிக்கன் குருமா, ஹல்வா என்று 200 டிஷ்களை சமைக்கும் இந்திய ரோபோட்.. விலை இவ்வளவு தான்..

|

பெங்களூரைத் தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் யூஃபோடிக் லேப்ஸ் உருவாக்கிய நாஷ் (NOSH) என்ற சமையல் ரோபோ, தனிப்பட்ட நபரின் சுவைக்கு ஏற்ப அவர்கள் விருப்பப்படும் சாப்பாட்டைச் சமைத்துத் தருகிறது. இந்த நாஷ் ரோபோட் கடாய் பன்னீர், மாதர் பன்னீர், சிக்கன் குருமா, மீன் குழம்பு, கேரட் ஹல்வா என்று சமையலில் கில்லாடியாக இருக்கிறது. எவ்வளவு ஏன் உருளைக்கிழங்கு பொரியலைக் கூட செமையாக சமைத்துத் தருகிறதாம்.

சொன்னால் நம்ப மாட்டீங்க, 200க்கும் மேற்பட்ட உணவு வகைகளை சமைக்கும் ரோபோ

சொன்னால் நம்ப மாட்டீங்க, 200க்கும் மேற்பட்ட உணவு வகைகளை சமைக்கும் ரோபோ

சொன்னால் நம்ப மாட்டீங்க, இருந்தாலும் இதைச் சொல்லி தான் ஆகணும், இந்த நாஷ் ரோபோட் இந்தியச் சமையல் சாப்பாட்டு வகையில் இருந்து 200க்கும் மேற்பட்ட உணவு வகைகளைத் தானாகச் சமைத்துத் தரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்கின்றனர் இதனை உருவாக்கிய நிறுவனத்தின் உரிமையாளர்கள். குறிப்பாகச் சொந்த ஊரை விட்டு, வீட்டை விட்டு வெளியூர்களில் சென்று நல்ல சாப்பாடு சாப்பிட முடியாமல் தவிக்கும் மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

வீட்டில் சமைக்க நேரமில்லையா? இல்லைனா சமைக்கவே உங்களுக்கு தெரியாதா? இனி கவலையே வேண்டாம்

வீட்டில் சமைக்க நேரமில்லையா? இல்லைனா சமைக்கவே உங்களுக்கு தெரியாதா? இனி கவலையே வேண்டாம்

நம் வாழ்க்கை முன்பை விட பரபரப்பாகிவிட்டதால், உணவு சமைப்பது என்பது கடினமான வேலையாகிவிட்டது. நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோட்டோ போன்ற உணவு விநியோக சேவைகள் இருப்பதனால், சமையலை பற்றி நகரத்தார் முற்றிலுமாக மறந்துவிட்டனர். இருப்பினும், சில நேரங்களில் வெளியில் உணவு வாங்கி சாப்பிடும் மக்களுக்கு வயிற்றுக் கோளாறு போன்ற சிக்கல்கள் எழுகிறது. இதற்குத் தீர்வாகத் தான் பெங்களூரை தளமாகக் கொண்ட யூபோடிக் லேப்ஸ் நிறுவனம் இந்த ரோபோவை தீர்வாகக் கொண்டு வந்துள்ளது.

இந்த 8 வழிகளில் உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படலாம்.. உஷார் மக்களே.! இது ரொம்ப முக்கியம்..இந்த 8 வழிகளில் உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படலாம்.. உஷார் மக்களே.! இது ரொம்ப முக்கியம்..

சமைக்க நேரமில்லாத காரணத்தினால் உருவான ஐடியா - யத்தின்

சமைக்க நேரமில்லாத காரணத்தினால் உருவான ஐடியா - யத்தின்

இது அனைத்தும் உன்னதமான நகர்ப்புற பிரச்சனையுடன் தொடங்கியது, அதாவது சமைக்க நேரமில்லாத காரணத்தினால் உருவானது என்கிறார் இதன் தயாரிப்பாளர் யத்தின். குஜராத்தில் உள்ள காந்த்வா என்ற சிறிய கிராமத்திலிருந்து வந்த யத்தின், 2008 ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் கழகத்திலிருந்து தொழில்நுட்பத்தில் முதுகலைப் படிப்பைப் பயிலப் பெங்களூருக்குச் சென்றார். அப்போது தான் வீட்டுச் சாப்பாட்டின் அருமையை உணர்ந்திருக்கிறார்.

நாம் விரும்புவதை அப்படியே வீட்டு கைப்பக்குவத்தில் சமைக்கும் ரோபோட்

நாம் விரும்புவதை அப்படியே வீட்டு கைப்பக்குவத்தில் சமைக்கும் ரோபோட்

காலம் கடந்தது, யத்தின் திருமணமாகி பெங்களூரில் தொடர்ந்து தங்கியிருந்தாலும் கூட வீட்டில் சமைத்த உணவை விரும்புவார். இருப்பினும், கணவன் மனைவி இருவரும் வேலை செய்யும் காரணத்தினால் முழுநேரமும் பிஸியாக இருந்துள்ளனர். அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைக்கவோ மற்றும் அவர்களின் சுவைக்கு பொருந்தக்கூடிய ஒரு சமையல்காரரைக் கண்டுபிடிக்கவோ நேரம் இல்லாமல் போனது, அப்போது தான் ஒரு ரோபோட் இருந்தால் நன்றாக இருக்குமே என்று யத்தின் நினைத்திருக்கிறார்.

வங்கி கணக்கில் இருந்த 17 லட்சம் அபேஸ்.. இவர் செய்த 'இந்த' தவறை நீங்களும் செய்யாதீர்கள்.. உஷாராக இருங்கள்..வங்கி கணக்கில் இருந்த 17 லட்சம் அபேஸ்.. இவர் செய்த 'இந்த' தவறை நீங்களும் செய்யாதீர்கள்.. உஷாராக இருங்கள்..

ஒன்று சேர்ந்த நண்பர்கள் மற்றும் பார்ட்னர்கள்

ஒன்று சேர்ந்த நண்பர்கள் மற்றும் பார்ட்னர்கள்

கார்ப்பரேட் வாழ்க்கையை விரும்பாத யத்தின், தனது வேலையை விட்டுவிட்டு, நாஷை உருவாக்க மூன்று பொறியாளர்களுடன் யூபோடிக் ஆய்வகங்களை 2018 இல் தொடங்க முடிவு செய்தார். பின்னர், பிரணவ் ராவல், அமித் குப்தா மற்றும் சுதீப் குப்தா ஆகியோர் இணை நிறுவனர்களாக ஒன்றிணைந்தனர், ஏனெனில் அவர்கள் நாஷின் திறனை முழுமையாக நம்பினர். நிச்சயமாக இந்த சாதனம் பெரியளவில் வரவேற்கப்படும் என்று நம்பி செயலில் களமிறங்கினர்.

நாஷ் எப்படிச் செயல்படுகிறது தெரியுமா?

நாஷ் எப்படிச் செயல்படுகிறது தெரியுமா?

ரோபோவைப் பயன்படுத்த, பயனர்கள் பெட்டி வடிவ மசாலா பெட்டியில் தேவையான மசாலா பொருட்களை வைக்க வேண்டும். பின்னர் அதற்குக் கீழ் இருக்கும் பெட்டியில் தண்ணீர், எண்ணெய் மற்றும் நறுக்கிய காய்கறி போன்றவை சேமித்து வைக்கப்பட்ட வேண்டும். மேலும், நாஷ் ரோபோவை நாம் என்ன உணவைச் சமைக்க வேண்டும் என்ற விருப்பத்தை டிஸ்பிளேயில் உணவுப் பட்டியலில் இருந்து தேர்வு செய்து கிளிக் செய்தால் மட்டும் போதும். அந்த உணவிற்குத் தேவையான எல்லாவற்றையும் நாஷே செய்து முடித்துவிடும்.

AI- இயக்கப்பட்ட கேமராவுடன் மனிதர்களை போல் சமைக்கும் ரோபோட்

ரோபோவில் AI- இயக்கப்பட்ட கேமரா பொருத்தப்பட்டிருப்பதால், செயற்கை நுண்ணறிவைக் கொண்டு நோஷ் மிகவும் நேர்த்தியாக மனிதர்களைப் போலவே சமைக்கிறது. உதாரணத்திற்கு நாம் எப்படிச் சமையல் செய்கிறோமோ அப்படியே வரிசையாக ஒவ்வொரு பொருளாகச் சேர்த்துச் சமைக்கிறது. உதாரணமாக, வெங்காயம் பொன்னிறமாக மாறிய பிறகுதான் மற்ற காய்கறிகளைச் சேர்ப்பது போன்ற வேலைகளை நன்கு அறிந்து செய்கிறது. அதேபோல், பயனர் விருப்பத்திற்கு ஏற்றார் போல தனிப்பயனாக நாஷ் சமைக்கக் கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது.

நாஷ் ரோபோட்டின் விலை எவ்வளவு தானா?

நாஷ் ரோபோட்டின் விலை எவ்வளவு தானா?

நாஷின் இறுதி வேரியண்ட் மாடலை உருவாக்க இந்த அணிக்கு சுமார் மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இந்த காலத்திற்குள் ஆறு முன்மாதிரிகள், ஏராளமான செய்முறைகள், மறு செய்கைகள் மற்றும் எண்ணற்ற பயனர் கருத்துக்கள் போன்ற பல கட்டங்களில் இந்த ரோபோட் மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டின் இறுதியில் நாஷ் தயாரித்த முதல் உணவே உருளைக்கிழங்கு வறுவல் தான் என்று யத்தின் கூறியுள்ளார். இந்த நாஷ் ரோபோவின் விலை ரூ. 40,000 முதல் ரூ. 50,000க்குள் இந்தியாவில் கிடைக்கிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் ஆர்டர் செய்து நாஷை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Bengaluru-based Euphotic Labs Developed AI Autonomous Cooking Robot That Can Make 200+ Dishes : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X