Subscribe to Gizbot

நாசாவின் 'வாயை பிளக்க வைத்த ' இந்திய தங்கமகள்..!

Written By:

'வாய்ப்பு நம்மை தேடி வராது, நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும்' என்பதற்கான சிறந்த எடுத்துகாட்டு தான் - சடபர்ணா முகர்ஜி, கொல்கத்தாவில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர் ஆவார். இவர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் மிகவும் உயரிய ஸ்காலர்ஷிப் ஆன கோடார்ட் இன்டர்ன்ஷிப் ப்ரோகிராம்தனில் (Goddard Internship Programme) கலந்துக்கொள்ள இருக்கிறார்.

உலகம் முழுவதிலும் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாணவர்களில் சடபர்ணா முகர்ஜியும் ஒருவராக ஆனதற்கு கரணம் ஒன்றும் அதிர்ஷ்டமில்லை, அவரின் திறமை..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இறுதி தேர்வு :

இறுதி தேர்வு :

கம்துனியில் உள்ள செயின்ட் ஜோட்ஸ் பள்ளியில் 12-ஆம் வகுப்பு இறுதி தேர்வை எழுதி முடித்தவுடன் நாசாவின் கோடார்ட் இன்டர்ன்ஷிப் ப்ரோகிராமின் கீழ் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் சடபர்ணா முகர்ஜி பயில இருக்கிறார்.

முனைவர் பட்டம் வரை :

முனைவர் பட்டம் வரை :

அவர் கோடார்டு விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் உதவியோடு பட்டப்படிப்பு, மேல் பட்டபடிப்பு மற்றும் முனைவர் பட்டம் ஆகியைகளை விண்வெளி பொறியியல் துறையின் கீழ் படிக்க உள்ளார்.

 நாசா அங்கீகாரம் :

நாசா அங்கீகாரம் :

சடபர்ணா முகர்ஜி, பல்கலைகழகத்தில் பயிலும் காலம் முழுக்க நாசா மையத்தை சேர்ந்த ஒருவராகத்தான் பயில்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிளாக் ஹோல் கோட்பாடு :

பிளாக் ஹோல் கோட்பாடு :

இவ்வாறான வாய்ப்புகளுக்கு காரணமாக இருந்தது சில விஞ்ஞானிகள் உட்பட இருக்கும் ஒரு சமூக வலைதள குழுவும் அதில் அவர் பகிர்ந்து கொண்ட பிளாக் ஹோல் கோட்பாடு சார்ந்த விடயங்களும் தானாம்.

அறிவுரை மற்றும் உதவி :

அறிவுரை மற்றும் உதவி :

சடபர்ணா முகர்ஜியின் பிளாக் ஹோல் கோட்பாடின் அருமை உணர்ந்த அறிவியல் விஞ்ஞானிகள் சிலர் இந்த கோட்பாட்டை நாசாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவு செய்யுமாறு அறிவுரை வழங்கி உதவி செய்ய அதை சடபர்ணா அப்படியே செய்துள்ளார்.

பாராட்டு :

பாராட்டு :

நாசாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பிளாக் ஹோல் கோட்பாடும் அதன் மூலம் டைம் மெஷினை எப்படி உருவாக்கம் செய்ய முடியும் என்ற விளக்கமும் பெரிதளவில் பாராட்டப்பட்டுள்ளது.

பணி :

பணி :

இதன் வழியாக கிடைத்த ஸ்காலர்ஷிப் மூலம் பயில்வது மட்டுமின்றி லண்டனில் உள்ள நாசா மையத்தில் ஆராய்ச்சியாளராகவும் சடபர்ணா முகர்ஜி பணிப்புரிய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொகை :

தொகை :

சடபர்ணா முகர்ஜிகாக நாசா ஒரு கணிசமான தொகையினை மதிப்பூதியமாகவும், அது தவிர பிற இதர செலவுகளையும் செலுத்த இருக்கிறது.

பிரதீப் முகர்ஜியின் மகள் :

பிரதீப் முகர்ஜியின் மகள் :

2013-ஆம் ஆண்டில் கம்துணியில் நடந்த வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பெரும் குரல் எழுப்பிய பள்ளி தலைமை ஆசிரியரான பிரதீப் முகர்ஜியின் மகள் தான் சடபர்ணா முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமை :

பெருமை :

"இந்த செயல் மூலம் எங்களுக்கும், இந்த ஒட்டுமொத்த நாட்டிற்கும் என் மகள் பெருமை சேர்த்து உள்ளாள்" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் சடபர்ணா முகர்ஜியின் தந்தை.

கல்வி கடன் :

கல்வி கடன் :

தன்னால் முடிந்த நிதியை திரட்டுவது மட்டுமின்றி கல்வி கடன் பெற இருப்பதாகவும், இந்த அருமையான வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பிரதீப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பிளாக்ஹோல் விளைவுகள் : உயிரினங்கள் 'கிழிந்து அல்லது 'எரிந்து' சாகும்..!


செவ்வாயில் மேலும் ஒரு 'மர்ம உருவம்' கண்டுப்பிடிப்பு..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Bengal village teen bags top Nasa scholarship. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot