வோடபோன் ஐடியா ரூ.801 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் அசத்தலான சலுகைகள்.! முழு விவரம்.!
ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு போட்டியாக வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டமும் பல அசத்தலான சலுகைகளை வழங்குகிறது என்று தான் கூறவேண்டும்.

அதிலும் இப்போது ஏர்டெல், ஜியோ நிறுவங்களை விட வோடபோன் ஐடியா நிறுவனம் சிறந்த தரமான திட்டங்களை வழங்கி அருமையான சலுகைகளை வழங்குகிறது. அதேபோல் மற்ற நிறுவனங்களின் திட்டங்களை விட வோடபோன் ஐடியா நிறுவனத்தின் திட்டங்களின் விலை சற்று உயர்வாக இருந்தாலும், விலைக்கு தகுந்த சூப்பர் சலுகைகளை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வீட்டில் இருந்து வேலை செய்யும் ஐடி ஊழியர்களுக்கு என்றே சிறப்பான திட்டங்களை வோடபோன் ஐடியா நிறுவனம் உருவாக்கியது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக வீட்டில் இருந்து வேலை செய்யும் மக்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட தனித்துவமான திட்டங்கள் போனஸ் டேட்டா மற்றும் சில சிறப்பான சலுகைகளுடன் வெளிவந்தன.

வோடபோன் ஐடியா ரூ.801 ப்ரீபெய்ட் திட்டம்
அதன்படி இந்நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.801 ப்ரீபெய்ட் திட்டமானது கிட்டத்தட்ட அனைத்து சலுகைகளையும் வழங்குகிறது. இப்போது வோடபோன் ஐடியா ரூ.801 ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு நன்மைகளையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

300ஜிபி டேட்டா நன்மை
VI எனப்படும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.801 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா நன்மைகயை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர 48 ஜிபி அளவிலான போனஸ் டேட்டாவையும் வழங்குகிறது இந்த திட்டம். எனவே இந்த ரூ.801 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 300ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.

வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.801 ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா நன்மைகளை தவிர, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்த திட்டத்தில் இன்னும் கூடுதலாக இரண்டு சலுகைகள் கிடைக்கும் அது என்னவென்றால் வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் சலுகை மற்றும் பிங் ஆல் நைட் சலுகை.

டேட்டா ரோல்ஓவர் சலுகை
இந்த வீக்கெண்ட டேட்டா ரோல்ஓவர் சலுகை ஆனது பயனர்கள் வாரத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை) பயன்படுத்தாத தங்களது மீதமுள்ள FUP டேட்டாவை வார இறுதிக்கு நகர்த்தி அதை பயன்படுத்த அனுமதிக்கிறது. அதாவது நீங்கள் வாரத்தில் பயன்படுத்தாத மீதமுள்ள டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்த அனுமதிக்கும்.

பிங் ஆல் நைட் சலுகை ஆனது பயனர்கள் ஒவ்வொரு நாளும் காலை 12 மணி முதல் காலை 6 மணி வரை அதிக வேகத்தில்டேட்டாவை பயன்படுத்த அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர OTT நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். அதாவது டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி 1 வருட சந்தாவும் இந்த ரூ 801 திட்டத்துடன் கிடைக்கிறது.
News Source: telecomtalk.info


Click it and Unblock the Notifications